Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

“ஒரே உறைக்குள் இரண்டு கத்தியா?” இது இயக்கங்களில் அடிக்கடி எதிரொலிக்கும் கேள்வி. வளர்ந்துவரும் தலைவர்களை உருவாக்குதில் தலைமைப்பீடம் காட்டுகிற ஆர்வம் குறைவாயிருக்கும். இது பல இடங்களில் இன்றும் இருக்கும் நிலைமை.

தனிநபர் வழிபாடு, தலைமையின் ஈர்ப்பு இவையெல்லாம் அடுத்த கட்டத் தலைவரை அங்கீகரிகத்தடையாக உள்ளன. தனித்தன்மை இல்லாத தலைவர்கள் புதிய தலைவர்கள் உருவாவதை விரும்ப மாட்டார்கள்.

அடுத்த கட்டத்தில் அரும்பிவருகிற தலைமைப்பண்பு விரும்பி வரவேற்கத் தக்கது என்று கருதும் தலைமையே தரமான தலைமை. வரலாறுபாராட்டும் தலைவர்கள் அனைவருமே தங்களுக்கு அடுத்தாற்போல் தகுதியானவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குதில் உற்சாகம் காட்டியவர்கள்தான்.

தன் முகாமில் இன்னொருவரை உருவாக்க இரண்டு குணங்கள் அவசியம். ஒன்று, நம்பிக்கை, இன்னொன்று திறந்த மனம்.

அடுத்து வருகிற தலைவர் தன்னைக் கெடுத்து விடமாட்டார் என்கிற நம்பிக்கையும், அடத்து வருபவரால் தன்னைக் கெடுத்துவிட முடியாது என்கிற நம்பிக்கையும் ஒரு தலைவருக்கு வேண்டும்.

பெரும்பலான இயக்கங்கள்நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் சரிவை சந்திக்கின்றன. இயக்கங்களில் ஏற்படும் பிளவுகள் பெரும்பாலும் இரண்டு இதயங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிளவாலேயே நிகழ்கிறது. பிளவுபட்ட எந்த இயக்கத்தையும் – எண்ணிப்பாருங்கள். அந்த இயக்கத்தில் இருக்கும் இரண்டு தனி மனிதர்களின் மன பேதம்தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா, ஈராக் யுத்தம் நிகழ்ந்தபோது, ஒரு வார இதழில் ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. “ஒவ்வொரு சமுதாயமும் தத்துவத்தால் வளர்கிறது. தனி மனிதனால் அழிகிறது. நீங்கள் த்த்துவமா? தனிமனிதனா?” என்று அதில் கேட்டிருந்தார்.

இயக்கங்கள் இரண்டாகும்போதெல்லாம் தத்துவங்களைக் காரணம் காட்டினாலும் தனி மனிதர்களுக்கு இடையிலான பேதம் மறைமுகக் காரணமாய் இருந்திருக்கிறது.

தன்னைத் தொடர்ந்து, தமக்கு ஒருவர் என்பது இயக்கத்தின் மேன்மைக்கு இன்றியமையாத்து. இதனை ஒவ்வொரு தலைவரும் உணர வேண்டும்.

அதற்கு நாம் முன்னர் பார்த்த இரண்டாவது தடை, திறந்த மனம். தன் கருத்துக்கு, திர்குரல் ஏதாவது எழெமென்றால், அது தன் தலைமைப் பீடத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது பொலொரு எண்ணம் சிலருக்கு இருக்கிறது.

எதிர்க் குர்களைப் பொறுமையுடன் செவிமடுக்கப் பழகுவது நல்ல தலைமை. திறந்த மனத்துடன் அவற்றை எதிர்க்கொண்டு பொறுமையாக விளக்கம் தரத்தொடங்கும்போது, இயக்கத்தில் இருக்கும் வ்வொருருமேபாதுகாப்பு உணர்வைப்பறுகிறார்கள். ஒருதலைவர், தன் தலைமையில் இயங்கும் இன்னொருவரை சந்தேக்க்கண்ணோடு பார்க்கத் தொடங்கினாலே அவரது வீழ்ச்சி ஆரம்பமாகி விடுகிறது.

விமர்சங்கள் – விவாதங்கள் விசாரணைகள் இவை நான்கு சுவர்களுக்குள் நடக்க அனுமதிக்காத எந்த இயக்கும் சர்வாதிகாரமானதுதான்.

புதிதாக உருவாகும் தலைவர்கள் ஒரு இயக்கத்தின் இயல்பான வளர்ச்சியின் அங்கம்தான். அவர்களுது நம்பிகையும். நல்லெண்ணமும் தன்மீது குறையாமல் தக்கவைத்துக் கொள்வதுதான் தலைவருக்கு அழகு.

தலைமைப் பண்பின் பதினாறவது விதி:

இன்னொரு தலைவரை உருஆக்குவதால் இயக்கம் பலப்படும். தகுதி இல்லாத தலைமைதான் அடுத்தவரைப் பார்த்து பயப்படும்.

பழைய முகங்களையே பார்த்த அலுப்பு தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ ஏற்படுவது இயற்கை. அதனாலேயே, ஒரு இயக்கத்தில் இருந்து எழும் புதிய குரலை அவர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர். பத்திரிகைள் எழுத்த் தொடங்குகின்றன. அது தலைவரின் கண்ணை உறுத்த வேண்டிய அவசியமே இல்லை.

தொழில் நிறுவனங்களில், புதியவர்களுக்குத் தலைமை வழிவிடும். இவை பெரும்பாலும் குடும்பங்ளால் நிர்வகிக்கப்படுவதால், அடுத்த தலைமுறை தலையெடுப்பது நிறுனத்தின் வளர்ச்சி, நிர்வாகவியலின் தன்மை என்று கருதப்படுகிறது.

இயக்கங்களோ, தன் வளர்ச்சியே சமூக வளர்ச்சியென்று கருதும் தலைவர்களப் பெரும்பாலும் கொண்டிருப்பதால் புதிய முகங்களைப் பார்த்தும் அவர்களுக்கு மிரட்சி வருகிறது.

தொடக்க நிலையிலேயே இயக்கத்தின் படி நிலைகளைத்தெளிவாக அறிவிக்கும் திறந்த மனம் தலைவர்களுக்கு வரவேண்டும்.

எளிமையன தலைவர்களின் வலிமையான மக்கள்தொடர்பு, அவர்களை எந்த்த ஒல்லையும் அண்டாமல் காக்கும் ஆறலுடையதாய் இருக்கும்.

புதிய வெள்ளம் பாயும்போது இயக்கம் மேலும் வலுப்பெறுவதை உணர்வதே ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான தலைமை.

போட்டித் தலைவர்கள் என்று தெரிந்திபன் எப்படி அர்களைக் கையாள்வது?இது முக்கியமான கேள்வி.

கொள்கைகளால் வழி நடத்தப்படும் எந்த இயக்கமும், அதன் உறுப்பினர்களிடம் தலைமைப் பதவி மீதான வேட்கையையோ வெறியையோ விதைக்காது.

மாறாக, ஒவ்வொரு கட்டத்திலும், ஆர்வமானவர்களின் கருத்து ரீதியான பங்கேற்புக்குமுக்கியத்துவம் கொடுக்கும். சுழற்சி முறையில் தலைமைப் பதவிக்கு வருவதை வழக்கமாக்கி விடும்.

இந்த அணுகுமுறை இன்றும் சில இயக்கங்களில் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

தொழில் நிறுவனங்களில், தலைமையை பங்குகள் (ஷேர்) தீர்மானிப்பது போல, இத்தகைய இயக்கங்கள் பங்கேற்பும் மனோபாவத்தின் அடிப்படையில் தலைமையைத் தீர்மானிக்கின்றன.

எல்லா நிலைகளிலும் இயக்கத்தை வழி நடத்துபவை கொள்கைகளே என்று வந்துஇட்டால், அங்கேபோட்டிக்குப் பெரிய இடமிருக்காது. இந்தத் தலைமைப்பண்பு உலகளாவிய கொள்கைகள், கிளைகள் கொண்ட சில அரசியல் இயக்கங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. கவியரசு கண்ணதாசன் சொன்னதையே நாம் தலைமைப் பண்பின் பதினேழாவது விதியாகக் கொள்ள முடியும்.

“தலைவர் மாறுவர்; தர்பார்மாறும்;
தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்!”

இதே அணுகுமுறை பல தேசிய இயக்கங்களிலும் இருந்து வந்துள்ளன. என்றாலும், இந்தியாவைப்பொறுத்தவரை இயக்கங்கள்,நெருக்கடி நிலைக்குப்பிறகு தனி மனிதர்களை சார்ந்த அமைபுக்களாகவே வளர்ந்து வந்துள்ளன.

கேள்விக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்களாகத்தலைவர்கள் தங்களைக் கருத்த்த தொடங்கிய பிறகுதான், தொண்டர்களின் வழிபாட்டு மனோபாவம் முறைமுகமாக ஊக்குவிக்கப்பட்டது.

அரசியல் சாராத பொது இயக்கங்கள் என்று, இன்று ஒரு சில மட்டுமே உள்ளன. அவற்றில் தலைமை நிலை நக்கிய பெரும் போராட்டம் ஏதுமில்லை. பொதுவாக, பயன் கருதாத, புரட்சி செய்யாத அமைதியான இயக்கங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் சர்வதேச சேவை இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

ரசனை சார்ந்த அமைப்புகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளோடு நின்று விடுகின்றன.

பெரும் செல்வந்தர்கள் சர்வதேச இயக்கங்களில் இயங்கும்போது சிறுசிறு போட்டிகள், குழு மனப்பான்மை இருந்தாலும் பொது நன்மைகள் நிறையவே ஏற்படுகின்றன. அதனால் அவை வளர்கின்றன. இந்நிலையில், அதிகார நன்மைகள் எதனையும் சாராதா இயக்கங்களோ, தலைவர்களோ ஏற்படுகிற சூழல் இப்போது இல்லை.

தொண்டர் கூட்டம் இந்தத் தலைமுறையில் குறைவுதான். தனித்தன்மையோடு சிந்திக்கும் தனி மனிதர்கள் இன்று அதிகம்.

அப்படியானால், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் தலைவர்களுக்கான இலக்கணங்கள் – எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றனவா?

வழி நடத்தும் தலைவர்களை வல்லமை வாய்ந்த – உடன் வருகிற நட்பர்களாகப் பார்க்கும் மனோபாவம் வளர்ந்து வருகிறதா?

இவை குறித்து அடுத்த இதழில் சிந்திப்போம்.

(தொடரும்..)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்