Home » Articles » உறவுகள்… உணர்வுகள்

 
உறவுகள்… உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

கருவிற்குள் கால் மடக்கி, கைமடக்கி படுத்துறங்கும் குழந்தை வெறும் சதைப்பிண்டமல்ல. நம்மைப்போலவே அதற்கு எல்லா உணர்வுகளும் உண்டு.

அம்மாவின் விருப்பு, வெறுப்பு, கோபம், தாபம் போன்ற எல்லா உணர்வுகளையும் குழந்தையால் புரிந்து கொள்ள முடியும். அம்மா மட்டுமன்றி அப்பா, அண்ணா, மாமா போன்ற உறவினர்களின் பேச்சுக்கள் கருவில் இருக்கும் ஆம்னியோட்டிக் திரவத்தன் வழியே குழந்தையை அடைகின்றன.

கருவில் குழந்தையின் கண்கள் லேசாய் செருகி தூக்க மயக்கத்தில் இருக்கிறது. எங்கோ, மெலிதாய்க் கேட்கும் இசையில் விழிப்புத் தட்டுகிறது. அம்மா பாடலை மெலிதாய் முணு முணுப்பது கேட்கிறது. அம்மாவன் உற்சாகம் குழந்தையைத் தொற்றிக் கொள்கிறது.

அம்மாவின் பக்கத்தில் வந்து மெல்ல வயிற்றைத் தடவிப் பார்க்கிறார் அப்பா. இருவரும் ஏதோ அன்பாய்ப்பேசிக் கொள்கிறார்கள். குழந்தையைக் கொஞ்சுகிறார்கள். இதைக் கேட்ட குழந்தை உற்சாகமாய் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

இதற்கு நேர்மாறாக நடக்கும் சந்தர்பங்களும் உண்டு.

அமைதியான மனநிலையிலிருக்கும் குழந்தை திடீரென ஏதோ பயங்கரமான சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்கிறது. பெற்றோருக்கிடையே கடுமையான வாக்குவாதம். இருவரும் மாறி மாறி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தின் உச்சியில் கணவன் மனைவியை அடித்துவிடுகிறான். பாத்திரங்கள் உருளுகின்றன. அம்மாவின் அழுகையும் வெளியில் நடக்கும் களேபரமும் குழந்தைக்கு திகிலூட்டும். தன் சின்ன இதயம் படபடவென அடித்துக் கொள்ளும். அம்மாவும் அப்பாவும் அன்பாயில்லை என்ற உணர்வே அதைக் காயப்படுத்தும்.

இன்னுமொரு கொடுமையான சூழ்நிலையைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். இனி மேல் குழந்தைப் வேண்டாமென்று முடிவெடுத்திருக்கும் வேளையில் வேண்டாத விருந்தாளியாய் சிலருக்கு கரு உருவாகிவிடும். இத்தனை வயதிற்குமேல் அவமானச் சின்னமாய் இது தோன்றி விட்டதே என்ற எரிச்சலில் அதை அழித்துவிட முடிவு செய்வார்கள்.

பெற்றோர் பேசும் வார்த்தைகள் புரியாவிட்டாலும் அவர்கள் தன்னை ஏதோ செய்யப்போகிறார்கள் என்பதை குழந்தை உணரந்து கொள்ளும். அதன் உணர்வுகளை, வலியை, பயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் மனத்தை மரணபயம் ஆட்கொள்ளும்.

கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்து அதையும் மீறி பிறக்கும் பெரும்பாலானோருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும். இத்தகைய குழந்தைகள் பிற்காலத்தில் தன்னம்பிக்கை அற்றவர்களாக, எதைப் பார்த்தாலும் பயந்து நடுங்கும் சுபாவமுள்ளவர்களாக வளர்வார்கள்.

பெரும்பாலும் தாயாருடன் ஒட்டாமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் இந்நிலையைப் பார்த்து பெற்றோர்களும் குற்ற உணர்ச்சியில் குமுறும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.

இது போன்ற பின் விளைவுகளைப்பற்றி கொண்டு, அருவ நிலையில் இருக்கிற ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது பறி, சிந்திக்கத் தொடங்கியதால் கடவுள் பெயராலோ, தத்துவங்கள் பெயராலோ, தன்னைத்தானே நம்பி வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவதற்கான வாய்ப்பு. இந்த தேசத்தில் வழங்கப்பட்டது.

புற உலகம் சார்ந்த, வெறும் பொருளாதாரம் மேம்பாடு சார்ந்த, மேம்பாட்டுச் சிந்தனைகள் இந்த அளவுக்கு வெற்றி பெற்ற நாட்டில் சுய முன்னேற்றச் சிந்தனையாளராக பெரிதும் பாராட்டப் பெற்றவர் டேல்கார்னகி. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது விசித்திரமாக இருக்கிறது.

தங்கள் போதனைகள், தங்கள் வாழ்க்கை, போன்றவற்றை உண்மை என்று கருதுபவர்களால், நம்பிக்கையோடு செயல்பட முடியும். இதைத்தான் இயேசு நாதர் கூட நானே வழியும், ஜீவனுமாய் இருக்கிறேன், என்று சொல்லுகிறார். நமது ஞானிகள் வகுத்து கொடுப்பவை எல்லாம் வெறும் தத்துவங்கள் அல்ல. வாழ்க்கைக்கான தொழில் நுட்பங்கள், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை அவர்கள் சூத்திரங்களாக வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பூமியைச் சுற்றி காற்று இருக்கிறது என்பதை திருவள்ளுவர் பேசுகிறார். சூரியகாந்தமும், சூல்பஞ்சம் போலவாம் என்று லென்சு பற்றி திரு மூலர் பேசுகிறார். எனவே தங்களுக்குள் ஆழ்ந்து பார்த்த ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக அறிவியல் இருந்தது. அதுதான் என்ஐக்கும் மேம்படுத்துகிற சக்தியாக திகழ முடியும்.

நீங்கள் விரும்புகிற இலட்சிய சமுதாயம் எப்படியிருக்கும்?

முதலில் ஒரு இலட்சிய சமுதாயத்திற்கான, அத்தனை அடிப்படைகளும் இந்தியாவில் இருக்கிறது. அதனை நாம் சரியாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். உலகின் அனைத்து அதிசயங்களுக்குமான இரகசியம் இங்கே நம் இந்திய தத்துவங்களில் உள்ளன. அது முழுமையாக வெளிப்படுகிற நாளில் இந்த உலகம் நம்மை உற்று கவனிக்கும். மற்ற நாடுகள் எல்லாவற்றுக்கும் நம்மை அணுகும்.

நம்மிடம் போதிய கருவிகள் இல்லை. அறிவியல் சார்ந்து நாம் சாதிக்க வேண்டும். அதே நேரம் அறிவியல் கேட்கப்படவேண்டிய கேள்விக்கான பதில்ளை, நம்முடைய ஆன்மீக விஞ்ஞானிகள் என்றோ வடித்து வைத்திருக்கிறார்கள். அவை வெளிப்பட வேண்டும். எல்லாம் தேவையென்றால் முதலில் அரசியலில் வடிவமைக்கிற வல்லாண்மை கொண்ட போதிய தலைவர்கள் நமக்குத் தேவை.

மலேசியாவின் தற்போதைய பிரதம் இந்தியத் தந்தைக்கும், மலேயத் தாயிக்கும் கலப்பு மணத்திலே பிறந்தவர். அவர் மலேய நாட்டில் இப்போது அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். கிழக்கே பார் என்ற முழக்கத்தை முன் வைத்திருக்கிறார். அங்கிருந்து கிழக்கேயிருப்பது அமெரிக்கா. அதுபோல முன்னேற என்று தனது மலேசிய நாட்டை முடுக்கிவிட்டிருக்கிறார்.

2020 -ல் உலகில் முதலில் இருக்கிற நாடாக, மலேசியாவை மாற்றுவது அவரது குறிக்கோள். எங்கேயெல்லாம் எது சிறப்போ, அதையெல்லாம், இங்கே கொண்டுவா, நிபுணர்களை விலைக்கு வாங்க பண்ணாட்டு தொழில் நுட்பத்தில் ஈடுபட அறிவாளிகளை அடையாளம் கண்டுவா. அவர்களுக்கு சிரமம் தராமல் சிறப்பு செய்.

அறிவை முதலீடு செய் என்று பேசுகிறார். இது போன்ற தொலைநோக்கோட இந்தியாவை வழிநடத்த வல்லவர்கள் இருப்பார்களேயானால் நாம் காண விரும்புகிற இலட்சிய சமுதாயத்தை, இங்கு மிக நிச்சயமாக வடிவமைக்க முடியும்.

சந்திக்கிறவர்க்கெல்லாம் ஒரு திருக்குறள் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் தன்னம்பிக்கை வாசகர்களுக்கு, நீங்கள் சொல்ல விரும்புகிற திருக்குறள் என்ன?

திருக்குறளின் 666 அதைத்தான் நான் தன்னம்பிக்கை இதழின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

என்கிற குறளுக்கு இலக்கணமாய் தங்கள் வாழ்வை வகுத்துக் கொள்கிற ஆற்றல், தன்னம்பிக்கை வாசகர்களுக்கு, சிந்திக்க வேண்டும் என்று என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்