Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

என் மனைவி படித்தவள்தான். ஆனால் எப்போது பேசினாலும் எதிர்மறையாக பேசுவாள். குழந்தைகளைப் பார்த்து, “நீ படிக்கமாட்டாய்; உருப்படமாட்டாய்ம என அடிக்கடி சொல்கிறாள். எதற்கெடுத்தாலும் கெட்டதே நடக்கும் என்று பேசுகிறாள். சமூகமான உறவிற்கு என்ன வழி?

கணவன் – மனைவி பிரச்சனை என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.

சர்க்கஸில் ஒரு சாதாரண கோமாளி, பெரிய சிங்கத்தை பார்த்து குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் நின்று எதைச் சொன்னாலும் அதற்கேற்ப சிங்கம் செயல்படும்.

அதே சிங்கம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று சாட்டையை ஓங்கினால் சீறும்.

கோமாளி சொல்வதற்கேற்ப ஆடிய சிங்கம், ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் வந்து விட்டால் சீறத் தொடங்கி விடுகிறது.

இந்த குறிப்பிட்ட இடைவெளி தூரம்தான், கோமாளி – சிங்கம் உறவை சுமூகமாக வைக்கிறது. இதே இடைளி மனித உறவுகளுக்கும் அவசியம். இந்த இடைவெளி மனிதனுக்கு மனிதன் மாறுபடும். மற்றவருடைய ஏற்பு நிலையை பொறுத்து வித்தியாசப்படும்.

உங்களுடைய உறவிலும் இந்த இடைவெளியை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டால் சமூகமாகப் போய்விடும்.

மேலும் சில பொதுவான அணுகு முறைகளை நீங்கள் கையாளலாம்.

உதாரணத்திற்கு மகளுடைய படிப்பைப் பற்றி, “மகளை நன்கு படிக்க வைக்க என்ன செய்யலாம்? உன்னுடைய யோசனையை சொன்னால் நல்லாயிருக்கும்” என்று சொல்லுங்கள்.

இரண்டாவது, “உன்னுடைய விருப்பங்கள் எதுவானாலும் சொல், அதில் என்னால் இயன்றதை செய்ய விரும்புகிறேன்” என்பது போல அவர்களுடைய மனவிருப்பத்தை வெளிக்கொண்டு வரலாம்.

மூன்றாவது, குடும்பதில் ஒரு முடிவை எடுக்கும்போது, “இதுல எது சரி? நீயே சொல்லு; அதன்படி இயன்றவரை செய்யாம்” என ஆலோசனை கேட்கலாம்.

பொதுவாக, ஒவ்வொரு மனிதரும் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்ப்புடன் வாழ்கிறார்கள். அது கிடைக்காத போது வெறுப்புடனோ அல்லது எதிர்ப்பாகவோ செயல்படுகிறார்கள். பலருக்கு தன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றமே, இது போன்ற வெறுப்புகளுக்கும், எதிர்மறை செயல்களுக்கும் காரணமாகின்றன.

நீங்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் உங்கள் மனைவி மாறிவிடுவார்.

அப்படி செய்தும் அவர் ஒத்துழைக்காவிடில் உங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினால் தன்னை மாற்றிக் கொள்வார்.

முழுதும் எதிர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால் அவரை மனயியல் முறைப்படி அணுகுவதே நல்லது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்