Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

ஒவ்வொரு இதழும் என்னுள் சிறு சிறு மாற்றங்களை, வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஜக்கி அவர்களின் “மனித சக்தி மக்தான சக்தி” “வணக்கம் தலைவரே” “நம்பிக்கையும் நானும்”, “பெற்றோர்பக்கம்” ஆகியன. உங்கள் பணி பாராட்டுக்கள்.

கோ. கரிகாலன்,
ஊற்றங்கரை

வெளிநாடு சென்று பணிபுரியத் துடிப்பவர்களுக்கு மத்தியில், இந்தியாவில் சேவை செய்ய வேண்டுமன்று திரும்பி வந்திருக்கும் வினு அறம் பணி பாராட்டுதற்குரியது.

ச. மல்லிகா,
கோவை – 18.

என் வாழ்வில் ஏற்பட்ட சோகங்களை களைய எத்தனையோ நூல்களைப் படித்தேன். ஆனால் “தன்னம்பிக்கை” இதழ் படித்தபின் நான் மறுபிறவி எடுத்தது போல் ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. எனக்கு மறு பிறப்பு கொடுத்த அத்துணை படைப்பாளர்களுக்கும் வெளியிட்ட இதழுக்கும் நன்றி.

செல்வராணி,
உறையூர்

“வெற்றியின் மனமே” தொடர் உயிரோட்டமுள்ள, பயனுள்ள செய்திகளைத் தருகிறது. தஞ்சையைப் போன்று தமிழகம் முழுவதம் “தன்னம்பிக்கை அறிமுக விழா” நடத்தி இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதழில் வெளியாகும் அனைத்து தொடர்களும் அருமையாக இருக்கிறது. வினு அறம் போன்ற நல்லவர்களை பேட்டி கண்டு தன்னம்பிக்கை உள்ள சமுதாயத்தை படைக்கும் இதழுக்கு நன்றி.

எஸ். ராமலிங்கம்,
கோவை

“உள்ளத்தோடு உள்ளம்” என் உள்ளத்தை தெளிவடைய வைத்தது வினு அறம் பேட்டி. “நானும் ஒரு இந்தியம்” என்ற தன்னம்பிக்கையை எனக்குள் வளர்த்து. வெளியிட்ட இதழுக்கு நன்றி.

தீ. பால முரளி.
இராமநாதபுரம்.

வினு அறம் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. இதன் மூலம் சமூகப்பணி செய்யும் இளைஞர்கள் மேலும் சிறப்பாக பணி செய்ய உற்சாகம் கிட்டியது. வாழத்துக்கள்.

ச. ஞானசேகரன்,
ஆனைமலை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்