Home » Articles » நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?

 
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?


ஜெயச்சந்திரன்
Author:

அடுத்த பத்து ஆண்டுகளில் உங்கள் வயதில் பத்து கூடியிருக்கும். உங்கள் ஆயுளில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். பத்து ஆண்டுகள் விரைவில் சென்று கடந்து விடும்.

வருகிற பத்து ஆண்டுகளின்முடிவில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகிறது.

பத்து ஆண்டின்முடிவில் இப்பொழுது இருக்கும் இதே நிலையில் இருக்கப் போகிறீர்களா? அல்லது பலகாலமாக நீங்கள் விரும்பிய, ஆசைபட்ட கனவு கண்ட உன்னதமான நிலையை அடையப் போகிறீர்களா?

இது குறித்து முடிவு எதுஉம் எடுக்காமல் தொடர்ந்து சராசரி மனிதராக வாழ்ந்து கொண்டிருந்தால் என்ன நடக்ககும்?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கடந்து வந்த பாதையை ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடனும திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கும்.

பத்து ஆண்டுகள் உழைத்தும் பலன் இல்லாமல் போய்விட்டதே ஓயாமல் சிறகுகளை அடித்தும் ஓரங்குலம் கூட வெற்றியை நோக்கி நகர முடியவில்லையே! சுற்று சுற்று என்று சுற்றிவிட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விட்டோமோ! இருந்த இடத்திலேயே தேங்கிப் போய்விட்டோமே! என்று ஏமாற்றத்தோடு புலம்ப வேண்டி நேரும்.

ஆகவே 2011 -ல் என்னவாக, எப்படி எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று உடனடியாக, திட்டவட்டமாக முடிவு எடுங்கள்.

அம்முடிவு திட்டமான முடிவாக மட்டு மல்லாமல், முடிவான முடிவாகவும் இருக்க வேண்டும். இன்று டுத்த முடிவை நாளை மாற்றுவது அடுத்த வாரம் வேறொரு முடிவெடுப்பது அடுத்த மாதம் அந்த முடிவை கைவிட்டு இன்னொரு முடிவை எடுப்பது என்று முடிவுகளை மாற்றிக் கொண்டே இருந்தால் எதையும் சாதிக்க முடியாமல் தோற்றுப் போவீர்கள்.

பல்வேறு முடிவுகள் பல்வேறு திசைகளில் உங்கள் முயற்சியையும், உழைப்பையும் கொண்டு செலுத்தும்,. பின்னர் முயற்சியும், உழைப்பும் திசைமாறி, எந்தவொரு இலக்கையும் சேராமல் வீணாக முடியும்.

உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பது அவ்வப்போது நீங்கள் எடுக்கும் முடிவுகளே! செம்மையாகச் சிந்தித்து சிறப்பான முடிவெடுக்கும் போது வாழ்க்கை உயருகிறது. அரைகுறையாகச் சிந்தித்து அவசரமாக முடிவெடுக்கும் போது தோல்வி வருகிறது.

முடிவெடுத்துவிட்டாலே இலக்கை அடைந்துவிட முடியுமா? என்று திகைக்க வேண்டாம்.

உண்மையில் முடிவு எடுக்கும்போதுதான் இலக்கை சென்றடையும் வழிகள் நம் கவனத்துக்கு வருகின்றன.

சென்னைக்குச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால், சென்னை செல்வதற்குரிய பல்வேறு வழிகள் உங்களுக்கு நினைவுக்கு வரும். நினைவுக்கு வரும் வழிகளில் வசதியான வழியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பேருந்திலா, ரயிலிலா என்று சிந்தித்து முடிவு எடுகக்லாம். ஆகவே வழிகளைக் காண்பதற்கு முன்னால் முடிவுகள் சரியாக எடுக்கப்பட வேண்டும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. நீங்கள் முடிவெடுக்கும் அந்த நேரத்தில் தான் உங்கள் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.

முடிவெடுத்து விட்டாலே வெற்றி கிடைப்பதில்லை என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். எடுத்த முடிவு முடிவான முடிவாக இருந்தால்தான் அதில் ஈடுபாடும், முயற்சிகளில் எழுச்சியும் ஏற்படும். நீங்கள்முடிவான முடிவை எடுக்கும் அந்த நொடியில் உங்கள் வாழ்க்கையும் மாறத் தொடங்கிவிடுகிறது.

உண்மையாகவே நீங்கள் முடிவெடுத்து விட்டால், விரும்புகிற விளைவை அடைய உங்களை அர்ப்பணித்து விடுவீர்கள். அதற்கு மாறான, எதிரான சிந்தனை, பேச்சு, செயல்களிலிருந்து விலகி விடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையின் தற்போதையநிலை, சூழல் ஆகியை நீங்கள் முடிவு எடுப்பதற்கு தடையாக இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் விரும்பாத சூழலும், நிலைமையும் மாற வேண்டும் என்றால் முதலில் முடிவு எடுக்க வேண்டும்.. எடுக்கப்படும் அந்த முடிவுதான் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு வழி வகுக்கும்.

முடிவு எடுத்த பின்னர் இல்கை நோக்கிய முதலடியை எடுத்து வைத்து விடுங்கள். அடுத்த அடியை எப்படி, எங்கே வைப்பது என்பதை முதலடி தீர்மானிக்கும். அடுத்த அடி, அதற்கடுத்த அடி என்று தொடர் முயற்சிகள், தாமே உருவாகும்.

முயற்சி தொடர் முயற்சி ஆவதற்கும், தொடர்புள்ள முயறசிகளாக அமைவதற்கும் தெளிவான முடிவே வழிவகுக்கும். நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி எளிதாக பயணம் செய்ய முடியும்.

வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களை கவனமாக ஆராய்ந்தால் நீங்கள் ஒன்றை அறிவதில் ஆச்சரியம் அடைவீர்கள்.

அவர்கள் தோல்விக்கு அறவின்மை காரணமன்று, திறமைக்குமன்று. வாய்ப்பு இல்லாமலும் தோற்கவில்லை.

எதிர்காலத்தில் வரும் பத்து ஆண்டுகளில் என்னவாக, எப்படி, எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யாமலே பயணம் செய்தமையால் தோற்றுப் போனார்கள் என்பது அதிர வைக்கின்ற ஒரு உண்மையாகும்.

ஆகவே உடனடியாக முடிவு செய்யுங்கள். உண்மையாகவே முடிவு செய்யுங்கள். தெளிவாக முடிவு செய்யுங்கள். திட்டவட்டமாக முடிவு செய்யுங்கள்.

2011 -ல் நீங்கள் எந்தத்துறையில், என்னவாக, எப்படி, எந்த நிலையில் இருக்க முடிவு செய்கிறீர்கள்?

உங்கள் முடிவான முடிவு என்ன?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்