Home » Articles » மனசுவிட்டுப் பேசுங்க…

 
மனசுவிட்டுப் பேசுங்க…


admin
Author:

நான் காலையில் எழுந்ததும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால், நேரம் போகப்போக பிற மனிதர்களை சந்தித்ததும் மனம் தளர்ந்து விடுகிறது. ஆலோசனை கூறவும். (ஆர். சுந்தரம், ஒண்டிப்புதூர்.)

இதற்கு காப்மேயர் சொன்ன உதாரணம் பொருத்தமாக இருக்கும்.

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியல் ஒரு பைத்தியக்காரன் குப்பை வண்டியை தலைகீழாக கவிழ்த்து ஓட்டி வந்தான்.

அதைப் பார்த்ததும் மற்றவங்க “ஏய்யா இப்படி தலைகீழா கவிழ்த்து குப்பை வண்டியை ஓட்டறே?”ன்னு கேட்டாங்க.

உடனே அவன் “நேத்து நேராத்தான் ஓட்டிட்டு போனேன். எல்லாரும் அவுங்கவுங்க குப்பைகளை இந்த வண்டியிலேயே போட்டுட்டாங்களே”ன்னு சொன்னான்.

அவன் பைத்தியமாக இருந்தாலும் மத்தவங்க குப்பையை போட்டுவிடக்கூடாதுங்கறதுல தெளிவோடத்தான் இருக்கிறான்.

ஆனால், நாமோ வர்ரவங்கெல்லாம் அவங்கவுங்க குப்பைகளை நமக்குள் தள்ளிவிட அனுமதித்து விட்டு தெளிவான மனதை குப்பையாக்கி விடுகிறோம். ஆகவே, இனிமேல் பிறரிடம் பேசும்போது கவனமாக இருங்கள்.

தேவையானதை மட்டும் பேசுங்கள். ஆக்கப் பூர்வமானதைப் பேசுங்கள். எதிர்மறையான விஷயங்களை பேச அனுமதிக்காதீர்கள்.

நாம் கேட்கின்ற மற்றும் படிக்கின்ற எதிர்மறைச் செய்திகள் நம்முள் ஒரு ரியாக்ஷனை உண்டு பண்ணிவிடும். அதுதான் மனத்தளர்விற்கான காரணம்.

தேவையிலாத விஷயங்களையும், பிறர் பற்றிய குறைபாடுகளையும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்காதீர்கள்.

ஏதாவது ஒன்றைச் செய்தால் அதில் நாம் எதிர் பார்த்த நன்மைகள் உண்டாகலாம். சில சமயங்களில் சில குறைபாடுகளும் உண்டாகலாம். அதனால் அதிலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொண்டு சந்தோஷப்படுங்கள். குறைபாடுகள் இருந்தால் உங்களை சரி செய்யத் தேவையான மாற்றங்களை செய்து கொண்டு அத்துடன் அதை மறந்து விடுங்கள்.

ஒரு வேளை எக்காரணமும் இல்லாமல் மனச் சோர்வு ஏற்பட்டால் அது மனப்பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு மனநல ஆலோசனைகளைப் பெறவும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2001

பொதுவாச் சொல்றேன்
உறவுகள் உணர்வுகள்…
வணக்கம் தலைவரே
விட்டு விடுதலையாவோம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
அடையாள அட்டை
சிரிப்போம் சிந்திப்போம்
சத்குரு பதில்கள்
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றியின் மனமே…
தஞ்சையில் பாய்ந்த தன்னம்பிக்கை வெள்ளம்
நம்பிக்கையும் நானும்
மனசுவிட்டுப் பேசுங்க…