Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான், யுத்த தளவாடங்களான, பீரங்கி, துப்பாக்கி, போர்விமானங்கள் ஆகியவை அசர, அவசரமாக அமெரிக்காவிடம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தது.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய விமானத்தை ஓட்டுவதற்கான பயிற்சிய அமெரிக்க விமானிகள் பாகிஸ்தான் விமானிகளுக்கு வேகமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“இதுதான் விமானத்தை மேலே ஏற்றும் கருவி”

“சரி”

“இதுதான் இடதுபக்கம் திருப்பும் கருவி, இது வலது பக்கம் திருப்பும் கருவி”

“சரி, சரி”.

“இது நிலையாகப் பறப்பதற்கு”

“எல்லாம் சரி விமானத்தை எப்படி கீழே இறக்க வேண்டும்” என்றார் பாகிஸ்தான் விமானி.

“அதை இந்திய வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றார் அமெரிக்க விமானி. இந்திய வீரர்களின் திறைமையை முறைமுகமாகச் சொன்னார் அமெரிக்க விமானி.

நமக்கு வீட்டுப்பற்று, குடும்பப்பற்று எல்லாம் உண்டு. அதே அளவு நாட்டுப் பற்று உண்டா? சந்தேகம்தான். மேல்நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிக்க்கு இணையாகச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நாட்டுக்கொடி, தேசியச்சின்னம், தேசியகீதம் இவற்றிற்கான மதிப்பை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல்லாம். ஜப்பான் நாட்டில் பல மாடிகளைக் கொண்ட பல்பொருள் அங்காடிக் கூடம். திருவிழாவைக் கொண்டாடும் மக்கள் கூட்டம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. ஒரு திருடன் அந்தப் பல்பொருள் அங்காடியில் மிக உயர்ந்த பொருள் ஒன்றை எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் ஓடத் தொடங்கினான்.

எப்படிப் பிடிப்பது? என எல்லோரும் தயங்கியபோது கடையில் வேலை பார்த்த ஒரு பையன் சாதுர்யமாக ஒரு வேலை செய்தான். சட்டென்று ஓடிப்போய் ஜப்பான் நாட்டு தேசியகீதத்தை மைக்கில் ஒலிபரப்பினான். நகர்ந்து கொண்டும, நடந்து கொண்டுமிருந்த ஜப்பானிய மக்கள் சட்டென்று அப்படியே நின்றார்கள்.

பொருளை திருடியவன், இதை எதிர்பாராததால் ஓடவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தடுமாறவே கடை காவலாளிகளிடம் மாட்டிக்கொண்டான்.

நமது ஊர்த்திரையரங்குகளில் முன்பெல்லாம் தேசிய கீதம் போட்டுப் பார்த்தார்கள். பிறகு மரியாதை கருதி அவர்களே நிறுத்திக்கொண்டார்கள்.

“இந்தியா என் தாய் நாடு” என்ற உறுதிமொழி பள்ளியின் சொல்வதற்காக மட்டுமில்லை. வாழ்க்கை நெறியாகக் கொள்வதற்கும் தான். ஒருவர் என்னிடம் கட்டார் “நகைச்சுவை எல்லா நேரங்களிலும் ஏற்படுமா?”

நல்ல கேள்விதான். எந்தச் சூழலும் நகைச்சுவைக்குரிய சூழல்தான். நாம் அதற்கேற்ற உணர்வுகளோடு பார்த்தால் அந்தச் சுவையை அறியலாம்.

“அறியாமை” – இதன் அடிப்படையில் தான் எத்தனை நகைச்சுவைகள் தோன்றுகின்றன.

இரண்டுபேர், விரைவாகச் செல்லும் இரயில் வண்டியில் போய்க்கொண்டிருந்ததால் எந்த ஊரைக் கடந்து வண்டி என்று கூடத் தெரியவில்லை.

இருவரும் மாறி, மாறி சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

ஓர் ஊரை வண்டி வேகமாகத் தாண்டியதும் ஒருவன் மற்றவனிடம் கேட்டான் “போன ஊர் எந்த ஊர்? ஊர்ப்பெயர் என்ன?”

மற்றவன் சொன்னான் “ஹிக்கிம்பாதம்ஸ்” என்று. கேட்டவன் கோபத்தோடு சொன்னான் “போடா அது அதுக்கு முந்தின ஊர்” என்று. ஹிக்கிம்பாதம்ஸ் என்பது புத்தக்க்கடையின் பெயர், அது ஒவ்வொரு ஊர் ரயில் நிலையத்திலும் இருக்கும் என்பதை அறியாத பேர்வழிகளாகச் சிலர் உள்ளனர்.

தொடர்ந்து ஆங்கிலப்படம் பார்க்கும் என் நண்பர் ஒருநாள் என்னிடம் கேட்டார் “சார் இந்த “Action” ன்னு ஒரு நடிகர் எல்லாப் படத்திலேயும் வர்ரார் சார், நீங்க கவனிச்சீங்களா?”

எனக்கு முதலில் புரியவில்லை. சற்று நேரம் கழித்துப் புரிந்தது. மற்றும் பலர் நடித்த, என்று ஆங்கிலத்தில் போடுவதை ஒரு நடிகரின் பெயராக நினைத்த நண்பரின் ஆங்கில அறிவு என்னை வியக்க வைத்தது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாகத் துணைவேந்தர் பதவி வகித்த அறிஞர் டாக்டர். A.L. முதலியார் அவர்கள் பல்துறை வித்தகர்.

ஒரு முறை இரயில் பிரயாணம் செயுத கொண்டிருந்தார். ஒரு ஊரில் வண்டி நின்றது. ஏதாவது உணவு வாங்கிச் சாப்பிட நினைத்த முதலியார் அவர்கள், இரயில்வே சிற்றுண்டிச் சாலையை நோக்கிப் போனார்.

வாசலில் இன்றைய ஸ்பெஷல் என போர்டு வைத்திருந்தார்கள். முதலியார் கண்ணாடியை எடுக்காமல் வந்துவிட்டதால் அருகிலிருந்த சுமை தூக்கும் ஊழியரிடம் “அப்பா இதோ இந்த போர்டில் என்ன எழுதியிருக்கிறது என்தைப் படித்துச் சொல்வாயா?” எனக் கேட்டார்.

அதற்கு அந்த்த் தொழிலாளி “ஐயா நானும் உங்கள மாதிரிப் படிக்காத தற்குறிதான்” என அடக்கமாகச் சொன்னார். முதிலாயர். அவர்களுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்ததாம். இந்த இடத்தில் மற்றவர்களாக இருந்தால் கோபம்தான் வந்திருக்கும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் எங்கும் இனிமைதான்.

சிலர், “கவலை இல்லாமல் இருக்க வழி என்ன” என்று கேட்கிறார்கள்.

முதலில் கவலை இல்லையே என்ற கவலையை விட வேண்டும். பிறகு, கவலை எல்லோருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைய வேண்டும்.

யானை மிதித்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எறும்பு போன்ற உயிர்கள் நடமாடே முடியாது.

உலகில் மிகப்பெரிய பணக்கார்ரான ராக்பெல்லரின் மகன் அவரிடத்தில் தனக்கு ஏதாவது அறிவுரை சொல்லுமாறு கேட்டார்.

ராக்பெல்லர் சொன்னார் “கவலையை விடு.. இரண்டு கொள்கைகளை உன் வாழ்க்கையில் எப்பதும் கடைபிடி வெற்றி பெறுவாய்” என்று.

“ஒன்று, கொடுத்த வாக்குறுதியை உன் உயிரே போனாலும் நிறைவேற்றத் தயங்காதே.

இரண்டு, அப்படிப்பட்ட வாக்குறுதியை ஒரு போதும் யாருக்கும் கொடுக்காதே”

மீண்டும் சந்திப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2001

தொழில்
வணக்கம் தலைவரே
சிரிப்போம் சிறப்போம்
பெற்றோர் பக்கம்
தன்னம்பிக்கை பாடம் கற்போம்
மனித சக்தி மகத்தான சக்தி
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
பொதுவாச்சொல்றேன்
உறுதியா? பிடிவாதா?
நம்பிக்கை
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்…
நாளும் நாளும் நம்பிக்கை
கேள்வி பதில்
வாசகர் கடிதம்