Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

தேர்தல் முடிந்தது, புதிய அரசும் அமைந்தது. ஒரு மாற்றம் நன்மைகளை விளைவிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. தலைமை மீதான மயங்களைவிட திறமையான நிர்வாகம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பினருக்கும் ஏற்பட்டிருப்பதை இந்தத் தேர்தல் உணர்த்துகிறது.

அடிப்படை வசதிகள், தொழில் வளர்ச்சி,முறையான பணப்புழக்கம், சமச்சீரான பொருளாதாரம், கல்வித் துறையை விரிவாக்கி, அதனை எல்லாத் தரப்பினரும் பெறச் செய்தல் போன்ற ஏராளமான கடமைகள் புதிய அரசின் முன் உள்ளன.

இயக்கங்களுக்கிடையிலான மோதல், தனிநபர விமர்சனம், சாதிய முத்திரைகள் போன்றவற்றிலிருந்தும் விலகிநிற்கும் விருப்பம்மக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் தெரிகிறது.

வாக்கு சாவடிக்கு வராதவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக, வாக்கு சாவடிக்கு வந்தும் வாக்களிக்க இயலாதவர்களின் எண்ணிக்கை இருப்புத கவலையளிக்கிறது.

சில அதிகாரிகளின் கவனக்குறைவால், ஆயிரக் கணக்கான குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமையை அடகு வைக்க வேண்டி வந்துள்ளது. இது எதனால்?

போதிய அளவில் மக்கள் பங்கு பெறாத – பங்கு பெற அனுமதிகப்படாத தேர்தல், ஜனநாயகத்தில் ஒரு சடங்கு மாதிரி நடந்து முடிந்திருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. அப்படித்தானா?

இந்தச் சீர்கேடுகளை உடனே சரி செய்ய தேர்தல் ஆணயத்துக்கு ஆணயிடப் போவது யார்?

கேள்விகளுடன்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2001

தொழில்
வணக்கம் தலைவரே
சிரிப்போம் சிறப்போம்
பெற்றோர் பக்கம்
தன்னம்பிக்கை பாடம் கற்போம்
மனித சக்தி மகத்தான சக்தி
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
பொதுவாச்சொல்றேன்
உறுதியா? பிடிவாதா?
நம்பிக்கை
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்…
நாளும் நாளும் நம்பிக்கை
கேள்வி பதில்
வாசகர் கடிதம்