Home » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்

 
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்


admin
Author:

ஐக்கிய நாடுகள் மன்ற உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் பேராளராக (FAO Fello ) உலக வங்கியின் மனிதவள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தவல்தொடர்பு பறிய ஒரு மாத பயிற்சிக்காக, ஆஸ்திரேலியாவில் “பிரிஸபன்” நகரில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்திற்கு சில தினங்கள் முன்பு சென்று வந்தேன்.

அந்த ஒரு மாத காலத்தில் அங்கு உயர்கல்வி பயில்கின்ற தமிழகத்து மாணவர்கள், பிரிஸ்பனில் பணியாற்றுகிற தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்களை சந்திக்கவும் அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது.

வளர்ந்த நாடுகளுக்கு உயர்கல்வி பயிலச்சென்றவர்கள் இடர்பாடுகளை எப்படி தன்னம்பிக்கையோடு எதிர் கொள்கிறார்கள். பணியாற்றச்செல்லுகின்றவர்கள் எப்படி தங்கள் அறிவையும் ஆற்றலையும் உழைப்பையும் செலவிட்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதை நமது வாசகர்கள், குறிப்பாக வளர்ந்த நாடுகளில் கல்வி பயில விரும்புகிறவர்கள் எத்தகைய மன நிலையோடு அங்கு செல்ல வேண்டும், பணியாற்ற விரும்புகிறவர்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கவே இந்தக் கட்டுரை.

ஆஸ்திரேலியா சென்று சேர்ந்த முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை குயின்லாந்து பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள “சர்பிரைடு கார்னல் டிரைவ்” தெருவில் ஒரு குடியிருப்பில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று காய் கறிகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது அங்கே ஒரு இளைஞரைக் கண்டதும் தமிழெரென அடையாளம் கண்டு, என்னை அறிமுகம் செய்து கொண்டேன். தன் பெயர் கமல் என்றும், தஞ்சையைச் சேர்ந்தவர் என்றும் பி.இ. கம்ப்யூட்டர் மேற்படிப்பு இங்கே படிப்பதாகவும் கூறினார். பேசிக்கொண்டே பக்கத்தில் இருந்த அவருடைய அறைக்குச் சென்றோம்.

கமல் பல்கலைக் கழக உதவித்தொகை எதுவும் இன்றி சொந்த செலவிலேயே படிக்கிறார். கம்பியூட்டர் சாப்ட்வேர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். ஆராய்ச்சி மேற்கொள்ள ஆய்வக வசதிகள் மிகச்சிறப்பாக உள்ளதாகவும், இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து வெளிவந்தால் மற்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும் கமல் கூறினார்.

குயின்லாந்து பல்கலைக் கழகத்தைப் பற்றி அவர் கூறியதாவது (University of Queensland) இந்தப் பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவில் உள்ள 39 பல்கலைக் கழகங்களில் முதன்மையானதாகும். கடந்த 1999ல் ரோட்டரி பவுண்டேசன் தேர்ந்தெடுத்த உலகின் மிகச்சிறந்த 8 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று . இதில் மிகச்சிறந்த 8 பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று. இதில் மிகச்சிறந்த நூலகம் உள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களும் 18,000 ஆராய்ச்சி இதழ்களும், (3000 எலக்ரானிக் இதழ்கள்) 11,000 மல்டிமீடியா கேசட்டுகளும் உள்ளதாக குறிப்பிட்டார்.

பல்கலைக் கழகத்தின் பிரமாண்டமான நூலகங்களை பிறகு நேரில் பார்வையிட்டு நானும் அவர் சொன்னதை உறுதிசெய்து கொண்டேன். நூற்றுக்கணக்கில் கம்பியூட்டர்கள் இணைய வசதியுடன் இருப்பதைக் கண்டேன்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 400 வகையான பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கலை, உயிரியல், வேதியியல், இயற்பியல், வணிகம், பொருளாதாரம, சட்டம், பொறியியல், கட்டவில், மருத்துவம், இயற்கை வளம் (nautural Resources) வேளாண்மை, கால்நடை மருத்துவம், சமூகவியல் மற்றும் பழகும் பாங்கியல் (Behavioural sciences) முதலியன கற்பிக்கப்படுகின்றன.

ஏறத்தாழ 30,000 மாணவர்கள் இந்தப் பல்கலையில் பயில்கின்றனர். அவர்களில் 3,000 பேர் உலகின் 64 நாடுகளில் இருந்து வந்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் என்று கமல் கூறினார்.

குயின்லாந்த் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இடம் கிடைத்து வெளிநாட்டில் படிக்க வந்தன் மூலம் என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. தன்னம்பிக்கையோடு தான்மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக்க் கருதுகிறேன் என்றார் கமல்.

வளர்ந்த நாடுகளில் படிக்க விரும்புவோர்க்கு கமல் ஒரு முன்னுதாரணம். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புவோர் “www.uq.edu.au” என்ற இணைய தளத்தில் நுழைந்து பார்க்கலாம். கமலிடம் நேரடியாக அங்குள்ள கம்ப்யூட்டர் ஆராய்ச்சி படிப்பு பற்றி அறிய விரும்புகிறவர்கள் raja@elec.uq.edu.au. என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பி விவரம் பெறலாம்.

குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் உள்ள வேறு எந்தப் பல்கலைக் கழகத்தில் நீங்கள் படிக்க விரும்பினாலும் அங்க என்னென்ன படிப்புகள் உள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, பல்கலைக் கழக உதவித் தொகைகள் (Fellowship) ஏதேனும் உண்டா, என்ற விபரம் பறவும், அங்கு படிக்கச்செல்லவும் DILINGER CONSULTANTS, No.25, Bharathi Park, 6th Cross, Saibaba Mission (P.O), Coimbatore -447 444 அல்லது Dheviakilaa@yahoo.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இதன் கிளைகள் சென்னை , பெங்களூர், மும்பை போன்ற நகரங்களிலும் உள்ளன.

உலகம் பரந்தது. வாய்ப்புகள் ஏராளம், வாய்ப்புகளுக்கு கண் இல்லை. ஆனால், காணத்தக்கவை. முந்துங்கள்! முயலுங்கள்! நீங்களும் விண்ணில் பறக்கலாம்! வெளிநாட்டில் படிக்கலாம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்