Home » Articles » மனசுவிட்டுப் பேசுங்க….

 
மனசுவிட்டுப் பேசுங்க….


admin
Author:

கேள்வி பதில்

பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்குது. ஒண்ணு தீர்ந்தா வேறொண்ணு வருது. பிரச்சினையே வேண்டாம்னு ஒதுங்கி நின்னாலும் விடமாட்டேங்குது. இதற்கு என்ன செய்வது?

(பெயர், ஊர் – வேண்டாம்)

பிரச்சினைகள் நம்மை வலிமைப்படுத்த உதவும் வாய்ப்பாக நினைக்க வேண்டும். அதனால் அதை எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டு ஓடி ஒளிந்தால் பிரச்சினை பெரிதாகத்தான் முடியும்.

ஒரு பிரச்சினை வந்தா, உடனே உங்களை ஆய்வு செய்யுங்க.

அதைத் தீர்க்க செய்ய வேண்டியது என்ன? என்பதை சிந்தியுங்கள்.

உங்களுடைய செயல்பாடுகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை செய்யுங்கள்.

இனி அப்பிரச்சினை வராம இருக்க எப்படி செயல்படனும்னு தெரிஞ்சி அதற்கேற்ப செயல்பட்டால் போதும்.

அப்போது பிரச்சினைகளும் தீரும்; உங்க நிலமையும் உயரும். இதுக்கு ஒரு உதாரணம்.

ஞானி ஒருவரிடம், ‘தனக்கு பிரச்சினையே இல்லாத இடந்தான் வேணும்’ னு ஒருவன் சென்றான்.

அவரும் சரின்னு அவனை ஓரிடத்திற்கு அழைச்சுட்டுபோய் “இங்க ஒருத்தர் இருக்கார்; அவருக்கு மட்டுந்தான் எந்த பிரச்சினையும் இல்லை; பிற மனிதர்களுடைய தொல்லையுமில்லே” என்றார்.

அந்த இடத்தைப் பார்த்தும் அவன் சொன்னான் “எனக்கு பிரச்சினை வரவது சகஜந்தான்னு புரிஞ்சுகிட்டேன்; இனிமே எல்லாத்தையும் சமாளச்சுடுவேன்”

ஞானி காட்டிய இடம் – ஒரு கல்லறை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்