Home » Articles » உணவகம்

 
உணவகம்


admin
Author:

கல்லாவுக்கு கொஞ்சம் டிப்ஸ்

‘சாருக்கு ரெண்டு வெங்காய ரோஸ்ட் சூடா போடு’ என்ற பரப்பபுக் குரலுடன் வீதிக்கு நான்கு ஹோட்டல்கள், மெஸ்கள் என வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.

‘பர்த்டே’ பார்ட்டி என லட்சக்கணக்கில் விருந்து கொடுப்பவருக்கும், ஐந்து பைசா, பத்து பைசா கையேந்தி வாங்கி பொட்டலச்சாப்பாடு சாப்பிடுபவருக்கும் அவசியத் தேவை உணவு. அது நட்சத்திர ஓட்டல்களாகவும் இருக்கலாம். நடைபாதைக் கடைகளாகவும் இருக்கலாம்.மக்கள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க அவர்களின் உணவுத் தேவைகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

நாமும் ஒரு உணவகம் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் சிருக்குத் தோன்றலாம். அவர்களுக்கான டிப்ஸ் இதோ…

ஒரு உணவகம் எப்படி இருக்கலாம்?

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருப்பது நல்லது.

அனைத்துத்தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு உணவுப் பொருட்களின் விலையும்,நல்லதரத்துடன் சுத்தமான பராமரிப்பும்,சுகாதாரமான சூழ்நிலைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

தள்ளுவண்டியில் டீ, காபி என ஆரம்பித்த கடைகள் இன்று டிபன், சாப்பாடு என ஓட்டல்களாக தொழிலில் வளர்ச்சிபெற்றுள்ளது. அதற்கு உதாரணம் ஈரோடு மரப்பாலம் முதலியார் மெஸ்.

தினம் ஒரு இடத்தில் என்று நடமாடும் உணவகங்களும் நல்ல லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன.

குடியிருக்கும் வீட்டின் ஒரு பகுதியையே மெஸ்ஸாக மாற்றிக் கொள்ளலாம். குடும்பத்திலுள்ளவர்களையும் உதவிக்கு வைத்துக் கொள்ளலாம்.

ஒரு உணவகத்தின் வியாபாரம் அதன் கட்டட அமைப்புகளிலோ, முதலாளியயையோ பொறுத்து இல்லை. உணவு தயாரிப்பவரின் கைப்பக்குவத்தில்தான் இருக்கிறது என்கிறார் பீளமேடு கே.எஸ். செட்டிநாடு மெஸ்ஸின் திரு. குமரேசன், பெரும்பான்மையான மெஸ்களில் வியாபாரம் நன்றாக நடக்கக் காரணம் மாதம் ஒருமுறை பணம் செல்லுத்தும் கணக்கு வைப்புதான் என்கிறார் இவர்.

ஒரு ஓட்டலின் வெற்றி என்பது வாடிக்கையாளரைப் பொறுத்துதான் அமையும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தான் என்ன?

பசியுடன் வருபவர்கள் உடனே சாப்பிட விரும்புவார்கள்.

அலுவல்களுக்கிடையே அவசரமாக வருபவர்கள் எதிர்பார்ப்பது, சர்வர்களின் பொறுமையான நடத்தையும், ஆர்டர் செய்வதை உடனுக்குடன் தரும் சுறுசுறுப்பயும்தான்.

மந்தமான சர்வர்களினால் ஓட்டலின் வியாபாரமும் மந்தமாகிவிடும்.

ஒரு ஓட்டலில் ஸ்பெஷல் என சுவையைத் தேடி வருபவர்கள் ஒரு ரகம்.

வார இறுதியில் ஒரு மாறுதலுக்காக குடும்பத்துடன் வருபவர்கள் ஒரு ரகம். இவர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ஹோட்டலுக்காகவே ஒரு பகுதியை ஒதுக்குவதும் உண்டு.

வரும் வாடிக்கையாளர்களின் மன நிறைவுக்கேற்ப கல்லாவும் நிறையும் என்கிறார் காயத்ரி ரெஸ்டாரன்டின் மேனேஜர் திரு. தியாகராஜன், டோர் டெலிவரியும் ஓட்டலுக்கு மிக முக்கியம் என்று சொல்கிறார் இவர்.

அமைச்சருக்கு பிரியாணி ரயிலில்!
-திரு. தனபாலன்

அசைவ ஓட்டல்களில் எல்லா நாட்களுமே வியாபாரம் நன்றாகத்தான் நடக்கிறது. கூட்டம் நிரம்பி வழியும் சமயங்களில் முதலாளியே தொழிலாளகவும் மாறத் தயங்கக் கூடாது. திண்டுக்கல், திருப்பூர், கோவை என எங்கள் கடையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸபிரஸில் அமைச்சர்களுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி அனுப்பி வைக்கப்படுகிறது என்று பெருமிதம் பொங்கச்சொன்னார் தலப்பாக்கட்டு நாயுடு பிரியாணி ஹோட்டலின் உரிமையாளர்.

வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். கையேந்தி பவன்களுக்கு காரில் வந்து சாப்பிடுபவர்களுக்கும் இருக்கிறார்கள் என்கிறார் திரு. ஹூசைன்.

பானிபூரி, பேல்பூரி, பப்ஸ், சிப்ஸ் என கடைகளில் மாலைநேர வியாபாரம் சக்கை போடு போடுகிறது.

ரூ. 10,000 முதலீட்டினால் ஆள் ஒன்றுக்கு ரூ. 400 வரை வருமானம் வரும் இதை பகுதி நேரத் தொழிலாக செய்து வருகிறேன் என்கிறார் இவர்.

சர்வர்கள் சமாளிக்க வேண்டியவை

‘ஏய், இங்கே வா’ என்ற மரியாதை குறைவான வார்த்தைகளைக் கேட்கும்போது சர்வர்களுக்கு கோபம் வரும்.

சாப்பிட வருபவர்கள் பல அயிட்டங்களை ஒரே நேரத்தில் சொல்ல சர்வர் மறந்து மறுபடியும் கேட்க, இதனால் சிறு சண்டைகளும் உருவாகிவிடும்.

தயார் நிலையில் இல்லாத உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் கேட்க, அது வர நேரமாகும் போது டென்சனாகி கத்துபவர்களும் உண்டு.

சில சமயங்களில் சாப்பிடும் அயிட்டம் அதிகமாகி, பில் குறைவாகவே இருக்கும் இது சூபர்வைசர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ‘முதலாளியின் முதலாளி’ என சர்வர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பாக மதியம் 2.30 மணிக்கு பிறகு சாப்பிட வருபவர்கள் அகோரப் பசியில் இருப்பார்கள். அப்போது சர்ரும் சோர்வாகவே நடந்து வருவார். (பாவம், அவருக்கும் பசி மயக்கம்) இது போன்ற சூழல்களில் மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

புத்திசாலி முதலாளிகள் இந்த சிரமத்தைச் சமாளிக்க சர்வர்களை ஷிப்ட் முறையில் வைத்துக் கொள்வார்கள்.

‘சாப்பிட என்ன இருக்கு?’ என்ற கேள்வி எத்தனை முறை வந்தாலும் சற்றும் அலக்காமல் கிளிப்பிள்ளைகள் போல் திரும்பத் திரும்ப சொல்லுவது சர்வரின் கடமை.

அலுத்துக் கொண்டால், முகம் சுளித்தாலோ அடுத்த முறை அந்த வாடிக்கையாளர் அந்த ஹோட்டலைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள்

சுவையான உணவு.
உணவகங்கள் அருகில் இருத்தல்
சப்ளையர்களின் சுத்தம், அன்பான உபசரிப்பு.
நியாயமான விலை.
பசியுடன் வரும்போது உடனே சாப்பிட தருதல்.

ஒரு உணவகத்தின் பலம்

சர்வரோடு சண்டைபோடும் அத்தனை பேருமே வாடிக்கையாளர் என்பதில்லை போட்டி ஓட்டல்களின் ‘கைக்கூலிகள்’ கூட பிரச்சினை பண்ணுவதற்காவே வந்திருக்கலாம். சண்டை போடுபவர் நிஜமாகவே வாடிக்கையாளர் என்றால் பரிவோடு கவனித்தால் போதும். தகராறுக்காகவே வந்தவர் என்றால் வேறு முறையில் ‘கவனித்து’ அனுப்புவதும் சூபர்வைசரின் சாமர்த்தியத்தை பொறுத்தது.

சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ‘எஸ்கேப்’ ஆகும் ஆசாமிகளும் உள்ளனர். ஸ்பூன், டம்ளர் என ‘லவட்டிக் கொண்டு போகும் ஆசாமிகளையும் அடையாளம் கண்டு உஷாராக இருக்க வேண்டும்.

சர்வர்கள், சூபர்வைசர்கள் கவனத்துடன் கண் கொத்திப் பாம்பாய் இருப்பது உத்தியோக உத்திகளில் ஒன்று.

உணவகங்களின் சில பிரச்சினைகள் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்க்கப்படும். சில சலுகைகளும் உண்டு.

ஒரு உணவகத்தில் தரம், சுகாதாரம் இரண்டுமே மிகமுக்கியம். உணவு மேஜையிலிருந்து தட்டு, டம்ளர் என சுத்தமாக இருப்பது மிக முக்கியம்.

இப்படி நடத்தப்படும் ஓட்டல்கள் ‘நல்ல ஓட்டல்கள்’ என்ற பெயரைப் பெற்றுவிடும்.

உணவகம் பற்றிய தொழிற்கல்வி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமாக உள்ளன.

உணவகம் பற்றிய பட்டப்படிப்புகளை பல்கலைக் கழகங்கள் பல்வேறு பயிற்சிகள் மூலம் அளித்து வருகின்றன.

ஆயிரம் இருந்தாலும் அனுபவத்தைப்போல ஒரு கல்வி உண்டா என்ன?

கல்லாவுக்கு…

போட்டிகளைச் சமாளித்தல்.

சர்வர், சூபர்வைசர், உணவு தயாரிப்பவர் அனைவரையும் அன்பாக நடத்துதல்.

வாடிக்கையாளர்களே முதலாளி என்ற உணர்வு.

காலத்திற்கேற்ப புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்தல்.

தனித்தன்மையுடன், தரமேம்பாட்டை பெற்றிருத்தல்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்