Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்…

 
உள்ளத்தோடு உள்ளம்…


admin
Author:

மக்களை நாயகர்களாகக் கொண்டதுதான் மக்களாட்சி. வரிப்பணம் பெற்று, அதனை வழி நிர்வாகம் நடத்தும் தொண்டர்களாய் தங்களை வரித்துக் கொண்டவர்களே வாக்குக்கேட்டு வருவது வழக்கம். காலப்போக்கில் காட்சி மாறியது. தொண்டு செய்ய வந்தவர்கள் தலைவர்கள் ஆனார்கள். குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாய மாறிப் போனார்கள்.

பணம் – பதவி சுகம் – அணிகள் – அடிதடி என்று அரசியல் அசிங்கபடத் தொடங்கி, ஆகிவிட்டது அநேக்காலம். இந்தக்கோளாறுகளின் நதிமூலம், வாக்காள்களின் விழுப்புணர்விமை, பணத்துக்கு விலைபோகும் தன்மை, தங்கள் உரிமைகளைத் தொலைத்துவிட்டு சலுகளைகளிலேயே நிறைவு பெறும் விசித்திரமான அடிமைக்குணம்.

“ஒருநாள் எஜமானர்களாய்” உலா வரும் வாக்காளர்கள் தங்கள் உரிமைகளை உணரவும், ஆட்சிக்கு வருபவர்கள் தங்கள் சேவகர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பு தேர்தல்.

கோஷங்கள் – வேஷங்கள் மலிந்திருக்கும் இந்தப் பொழுதில் இயக்கங்களைக் காட்டிலும் தனி மனிதர்களின் தரத்தைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பதே நல்லது.

ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு ஆட்சியைக் கொண்டு வரப்போவதாய் சொல்கின்றன. வாக்குக்கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் மறவாமல் சொல்லுங்கள்….

“மலர வேண்டியது மக்களின் ஆட்சி”

நல்வாழ்த்துகளுடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்