Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


admin
Author:

எனக்கு எப்போதுமே பயமாக இருக்கிறது. எதையும் தாங்கும் சக்தி இல்ல. தூக்கம் வருவதில்லை. டி.வி. ஓடினால் கூட பயமாக இருக்கிறது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் நெஞ்சு அடைப்பது போல் உள்ளது.

இதெல்லாம் தேவையில்லாத பயம் என்று எனக்கே தெரியும். ஆனால் என்னால் சரிப்படுத்த முடியவில்லை.

இந்த பயம் எதனால் ஏற்படுகிறது? இதனை எப்படிப் போக்குவது?
(பெயர் ஊர் , வேண்டாம்)

தெனாலி திரைப்படத்திலுள்ள கமலஹாசனை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதை அளவுக்கு மீறிய அச்சம் அல்லது போபியா (Phobia) என்பர். இதில் பல வகைகள் இருந்தாலும் முக்கியமாக மூன்று வகைகளைச் சொல்ல்லாம்.

முதலாவது, சாதாரண போபியா. இதில் சில பொருட்களைப் பற்றிய , இடங்களைப் பற்றிய அல்லது சூழ்நிலைகளைப் பற்றிய பயம்.

இரண்டாவது, சமூக போபியா. இதில் பிற மனிதர்கள் சூழ்ந்திருக்கும் கூட்டமான இடத்திற்கு செல்வதில் பயம்.

மூன்றாவது, திறந்தவெளி போபியா, இதல் வீட்டைவிட்டு வெளியே போனால் சொந்த பந்தங்களையும், சொத்துக்களையும இழந்து விடுவோமா என்ற பயம். அதனால் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பது. இதன் அடிப்படை என்னவென்றால், ஒருவருக்கு தம்மைத்தாமே நினைத்துப் பயப்படுதல்; அந்த பயத்தை கட்டுப்படுத்த இயலாமை ஆகியவை ஆகும். இது ஒரு மனநிலை பாதிப்புதான்.

பெரும்பாலும் இதுபோன்ற பயமுள்ளவர்கள், எல்லாற்றையும் நூறு சதம் சரியாக செய்ய நினைப்பர்கள் (Perfectionist). ஏதாவது குறையாகிவிடுமோ என்ற தொடர்ந்த பயமே நாளடைவில் கட்டுக்கடங்காத பயமாகி வாட்டும்.

பெற்றோர்களுக்கு போபியா இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வருகின்ற வாய்ப்புண்டு.

இதைச் சரிசெய்ய பல வழிமுறைகள் உள்ளன. முதலில் பய உணர்வை பற்றிச் சிந்திக்கவும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போவதில் பயமென்றால், “அந்த இடத்தில்தான் பலரும் இருக்கிறார்களே; நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையை உருவாக்கவேண்டும்.

இரண்டாவது, பயமான பொருட்களையோ இடத்தையோ தவிர்க்கக்கூடாது. அதை எதிர்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பூனையை பற்றிய பயம் இருந்தால், பூனையின் அருகில் யராவது ஒருவரை உடன் அழைத்துக் கொண்டு செல்லவேண்டும். இதைப் பலமுறை செய்யும்போது “பூனை நம்மை ஒன்றும் செய்யாது” என்ற நம்பிக்கை வந்துவிடும்.

மூன்றாவது, உடலை தளர்வு நிலைக்குக் கொண்டு வருதல். சமதரையில் படுத்துக்கொண்டு பாதம் முதல் தலைவரை ஒவ்வொரு உறுப்பாக தசைகளை இறுக்கி, பிறகு தளர்த்துதல் போல் தளர்வுப் பயிற்சிகளைச் செய்யலாம்.

நான்காவது, பயம் அதிகமாக வருத்தும்போது கவனத்தை திசை திருப்புதல். இதற்கு புத்தகத்தை வாய்விட்டு சத்தமாகப் படித்தல், மற்றவர்களுடன் உரையடுதல், ஆழமான சுவாசம் செய்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றைச் செய்யலாம்

இதற்குப் பின்பும் பய உணர்வு நீங்காவிடில் அல்லது உங்களுடைய இயல்பான வேலைகளை செய்ய முடியாவிடில் மருத்துவ சிகிச்சசை செய்வது அவசியம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?