Home » Articles » தேவை

 
தேவை


வளர்கவி இராதாகிருஷ்ணன்
Author:

மனிதப் பிறப்பின் மகத்துவத்தை
மனிதா அறிந்து மனதில் வை!
இனியிவ் வுலகம் முழுவதிலும்
இணையென உனக்கு யாருமில்லை!

விரல்கள் பத்திலும் பூக்கின்ற
வெள்ளிப் பூக்கள் நகங்களை நீ
வெட்டி வெட்டிச் சாய்த்தாலும் – அவை
விரலை விட்டுப் போவதில்லை!

கேடயம் போலச் செயல்பட்டு
கேட்டில் இருந்து காக்கிறது!
நட்பின் இலக்கணம் நகம் சதையே – என
நாட்டில் சொல்ல வைக்கிறது!

அருகம் புல்லைப் பார்த்தாயா?
தோண்டத் தோண்டத் துவளாது
பெருகிப் பெருகி வளர்கிறதே – அந்தப்
பேருரம் உனக்குள் ஏனில்லை?

இருகை ஊன்றிக் காலாக்கி
இந்த மண்ணில் நடந்தவனே!
எழுந்து காலால் நடந்த பின்தான் – பிறர்
விழுந்து வணங்க உயர்ந்தாய் நீ!

துவண்டு போவதில் பெருமையில்லை!
துன்பம் உலகில் யார்க்கில்லை?
வெருண்டு சிறு வேதனையை – உன்
வீரம் அதனை வீழ்த்திவிடும்!

தளரா குணத்தவர் மட்டிலுமே
தரணியில் வாழ்வர் தலை நிமிர்ந்து!
வளரும் பருவ வாலிபனே,
வாழத் தேவை நெஞ்சுரமே!

வளர்கவி இராதாகிருஷ்ணன்
கோவை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?