Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

“திபுதிபு” னெனு ஆட்டோவிலே நாலுபேர் வந்து இறங்கறாங்க. ஒரு வீட்டுக்குள்ளே புகுந்து அந்த வீட்டுக்காரரை வெளியிலே இழுத்து அடி, உதைன்னு பின்னியெடுக்கறாங்க. பக்கத்துலே பத்துப் பதிணனஞ்சு வீடுங்க இருக்கு. ஒரு வீட்டுக் கதவும் திறக்கலை. எல்லார்கிட்டேயும் ஒரே ஒரு பதில் இருக்கு, “நமக்கெதுக்கு வம்பு?”

“பட்டப்பகலில், பஸ் ஸ்டாண்டிலே ஒரு பொண்ணை இரண்டு ரவுடிப்பசங்க தண்ணியைப் போட்டுட்டு கலாட்டா பண்றாங்க. சுத்தி அஞ்சாறு ஆம்பளைங்க (!) யாரும் கண்டுக்கலை. கேட்டா, “நமக்கு எதுக்கு வம்பு?

நான் பொதுவாச் சொறேன், வம்பு, வழக்கு எதுவும் இல்லாத வாழ்கைக்கு அர்த்தமே இருக்காது. பாதுகாப்பா இருக்கிறதுன்னா பதனிடப்பட்ட தோல்மாதிரி இருக்க வேண்டியதுதான். அதில உயிர் இருக்காது.

தீமையை எதிர்த்து போறாடுற குணம் பாப்பா பருவத்திலிருந்தே வரணும்னு பாரதி நினைச்சான். “பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா – மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” – அப்படீன்னு பாடினான்.

பெரியவங்க பூரா, இது பாப்பாவுக்குத்தான் அப்படீன்னு நினைச்சு வீட்டுக்குள்ளே போய் தாழ்பாள் போட்டுக்கறோம். நான் பொதுவாச்சொல்றேன். தவறு நடக்கிறதை தட்டிக் கேட்கவோ, பொதுமக்கள் சார்பா புகார் கொடுக்கவோ தொடங்கினாலே சமூகத்திற்கு நம்மால் முடிஞ்சவரை சரியா இருக்கோம்னு அர்த்தம்.

ஆப்பிரிக்காவிலே கருப்பர்களுக்கு எதிரான அடகு முறையைப்பார்த்துட்டு, நமக்கெதுக்கு வம்புன்னு காந்தி போயிருந்தா இன்னக்கி சுதந்திர – இந்தியா இல்லை. பெண்கள உடன் கட்டை ஏறுவதைப்பார்த்திட்டு, ராஜாராம் மோகன்ராய் நமக்கெதுக்குன்னு நகர்ந்திருந்தா இன்னக்கி பெண் விடுதலை இல்லை. தாழ்த்தப்பட மக்களை தரக்குறைவா நடத்தறதைப் பார்த்திட்டு, பெரியாரோ, நாராயணகுருவோ நமக்கெதுக்குன்னு போயிர்ந்தா இன்னைக்கு சமத்துவம் இல்லை.

அவங்க காலத்தைவிட கொடுமையான சூழ்நிலை இன்னைக்கு இருக்கு. லஞ்சம், மதவெறி, போதைப் பழக்கம் எல்லாம் நம்மைச்சுற்றி நடக்குது. நமக்கெதுக்கு வம்புன்னு நாம் நகர்ந்திடுறோம்.

நான் பொதுவாச்சொல்றேன், நமக்கொருகாரியம் நடப்பதற்காக குறுக்கு வழியிலே முயற்சி செய்யறது, காரியம் ஆனபிறகு மத்தவங்களுக்கு மட்டும் புத்திமதி சொல்றது இப்ப பொதுவான குணமா மாறிக்கிட்டு வருது.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை, தனிமனிதன், குடும்ப மனிதன்,சமூக மனிதன்னனு மூணு நிலைகளிலேயும் வச்சுப் பார்க்கணும். ஒவ்வொரு நிலைக்குள்ளும் தனித்தனி பொறுப்பு இருக்கு. என்ன கோளாறு ஏற்படுதுன்னா, குடும்ப மனிதனிடம் குடும்ப உறவுகளுக்காக விட்டுக் கொடுக்க நினைக்கிற அவனுக்குள் இருக்கிற தனி மனிதன் “நீயேண்டா விட்டுத் தர்ற ? உனக்கு யார் செய்வா” அப்படீன்னு கேட்கறான்.

சமூகப் பொறுப்புணர்வோ சிந்திக்கிறபோது அவனுக்குள் இருக்கிற குடும்ப மனிதன் எழுந்து “உனக்கு ஏன் வீண் வம்பு? ஏதாவது ஆயிட்டா உன் குடும்பத்தை யார் பார்க்கிறது” அப்படீன்னு கேள்வி கேட்டு அடக்கிடறான்.

இப்ப, தனி மனிதன் தன்னுடைய பொறுப்புகளையும், குடும்ப மனிதன் தன்னுடைய கடமைகளையும், சமூக மனிதன் தன்னனுடய விழிப்புணர்வையும் சுதந்திரமா, தனித்தனியா செய்லபடுத்தினாத்தான் நல்லது. ஒரு நிலையில் இருக்கிற போது இன்னொரு நிலை வரக்கூடாது.

நான் பொதுவாச் சொல்றேன், வீட்டலிருக்கிற மாதிரி, அலுவலகத்திலே இருக்கிறதில்லை, அலுவலகத்திலே இருக்கிற மாதிரி பொது இடத்திலே நடக்கிறதில்லை. ஆனால், மன நிலையில் மட்டும் நம்முடைய பாதுகாப்பு உணர்வுங்கிறது கூடவே இருக்கு.

பாதுகாப்பு உணர்வே பெரிசுன்னா, பத்து மாசத்திற்கு பிறகு குழந்தை வெளியே வராது. கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியா வடிவம் பெறாது. வாழ்க்கை உயிர்ப்பில்லாம் நகர்ந்துகிட்டே இருக்கும்.

நான் பொதுவாச் சொல்றேன், தனி மனிதன், குடும்ப மனிதன் இதெல்லாம் ஒரு எல்லை வரைக்கும்தான், வாழ்க்கை என்னமோ சமூக மனிதனுக்குத்தான். அதுவும் சமூகப் பொறுப்புணர்வுள்ள சமூக மனிதனுக்குத்தான்… சரிதானா?

தவறுகள் நடந்தால்
தட்டிக்கேட்போம்

உரிமைகளை நாம்
கட்டிக்காப்போம்

-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?