Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

“தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்” தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவனை மட்டும் காப்பாற்றவில்லை. தாழ்வு மனப்பான்மைக்க அடிமையான எத்தனையோ இளைஞர்களைக் காப்பாற்றும் நன்றி.
பாலமுரளி, இராமநாதபுரம் மாவட்டம்.

“அடம்பிடிப்பதில் மூன்று வகை” விளக்கிய விதம் பல பெற்றோர்களுக்கும், என் போன்ற ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுடையதாக இருந்தது. குழந்தைகளின் மனநிலையை விளக்கிய விதம் அருமை.
மா. பழனி, கூத்தப்பாடி

“சிரிப்போம் சிறப்போம்” அற்புதம். மதன் மோகன் மாளவியா அவர்களின் நம்பிக்கை, உறுதி கொண்ட எண்ணத்திற்கு நவாப் வீசிய செருப்பே பரிசானது போன்ற உதாரணங்கள் நிச்சயம் வாழ்க்கை வானில் சிறகடிக்கத் துடிக்கும் இளம் உள்ளங்களுக்கு உற்சாக டானிக்.
ப. பெரியசாமி, தும்பலப்பட்டி.

ஆரம்பகால இதழ்களில் அறிஞர்களின் மேற்கோள்கள் இருந்தன. இப்போது இல்லையே. சிக்கலான, சோர்வான நேரங்களில் படிக்க நேர்ந்தால் அவர்களே வந்து நேரடியாக சொன்னது போன்ற உற்சாகம் தரும் மேற்கோள்களை பூக்களைப் போல தூவி விடுங்களேன்.
எம். அல்லிராஜ், கர்நாடகா.

நேத்தாஜி அவர்களின் மகள் அனிதா போஸ் படத்தப் பார்த்தும் நேதாஜி அவர்களின் பேச்சைக் கேட்ட நிகழ்ச்சி மலரும் நினைவாக வந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தில் நான் பர்மாவில் இருந்தபோது, அவர் கடைசியாக 3 மணிநேரம் நின்றுகொண்டே உருக்கமாக ஆங்கிலத்தில் “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்று ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் முழங்கியது நினைவுக்கு வருகிறது. நேதாஜி பிரம்மச்சாரி என்று நினைத்துக் கொண்டிருக்கிற சிலருக்கு அவருடைய மகள் அனிதா போஸின் பிரத்யேக பேட்டி வியப்பைத் தரலாம்.
நா. சொக்கலிங்கம், திருசசுழி

“நாளும் நாளும் நம்பிக்கை” வாசகர் பகுதியில் “தன்னம்பிக்கை” ந்த வெற்றி திரு. ஜெபகுருமணி எனது எண்ணங்களை தனது வண்ணங்களாக படைத்திருந்தார்.
கவிஞர் லெணா திருச்சி
தன்னம்பிக்கை முகவர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?