Home » Articles » புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?

 
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?


admin
Author:

“எதையும்புரிந்துகொண்டு பின்பற்றுவது நல்லதா? பின்பற்றிப் புரிந்துகொள்வது நல்லதா?

இப்படியொரு கேள்வியை புத்தரிடம் கேட்டார் ஒரு சீடர்.

இதற்கு நேரடியாகய் பதில் சொல்லாமல் புத்தர் ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்;

கங்கை ஆற்றில் புனித நீராடுவதற்காக வேதியர் ஒருவர் வந்தார். குளித்து முடித்ததும் கங்கை நீரை எடுத்துச் செல்ல வேண்டி, கையோடு சொம்பு ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.

குளித்து முடிக்கும் வரை அந்தச் சொம்பைப் பாதுகாக்க வேண்டி இருந்தது. உடனே ஒரு யோசனை தோன்றியது. மணலை ஆழமாய்த் தோண்டி சொம்பைப் புதைத்து வைத்தார். இடம் அடையாளம் தெரிய வேண்டி, அந்த இடத்தில் மணலைக் கோபுரம் போல் குவித்து, உச்சியில் ஒரு குச்சியை மட்டும் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார்.

குளித்து முடித்துவிட்டுச் சொம்பை எடுக்க வேண்டிக் கரை ஏறியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி! ஏனெனில், திரும்பிய பக்கமெல்லாம் மணற் குவியல்கள்! ஒவ்வொன்றின் மீதும் குச்சி வேறு நடப்பட்டிருந்தது!

நடந்தது இதுதான். அவருக்குப் பின்னால் குளிக்க வந்த அத்தனை பேரும், “மணலைக் குவித்து குச்சி நடுவதை ஒரு சடங்கு!” என்று நினைத்து, ஆளுக்கொரு மணற்குவியலை உருவாக்கி விட்டுக் குளிக்கச் சென்றனர்.

புரிந்து கொள்ளாமல் பின் பற்றும் அவ்வளவும் இப்படி அர்த்தமற்ற சடங்குகளாய் மாறும். முடிவில் மூட நம்பிக்கை என்று ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஆனால், ஒன்றைப் புரிந்துகொண்டு விட்டாலோ பின்பற்று பின்பற்றுதல் தானே வரும்.

“இப்பொது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா? என்று கூறினார் புத்த பகவான்.

காரணம்? புரிந்து கொள்வதற்கு முயற்சி தேவை, சிந்தனை தேவை, அறிவு தேவை. ஆனால், பின்பற்றுவதற்கோ இவை எதுவுமோ தேவையில்லை. முன்னால் செயல்படுபவனைப் பார்த்தால் போதும்.

இந்த நிலை இனி வேண்டாம். பின்பற்றுகிறோமோ இல்லையோ, முதலில் புரிந்துகொள்ளத் தொடங்குவோம். முடிந்தால் பின்பற்றுவோம். இல்லையென்றால் விட்டுவிடுவோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?