Home » Articles » கைத்தொழில் களஞ்சியம்

 
கைத்தொழில் களஞ்சியம்


கௌசல்யா பொன்
Author:

காவியம் செய்வோம் பல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்.
ஓவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்,
உலகத்தொழிலனைத்தும் உவந்தே செய்வோம்

-மகாகவி பாரதி,

கைத் தொழில்கள், சிறுதொழில்கள் மூலம் பெரிய தொழிலதிபர்கள் பலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமங்கலி ஊதுபத்தீஸ் உரிமையாளர் திரு.தண்டபாணியும் ஒருவர். சிறிய அளவிலிருந்து பெரிய அளவை எட்டிப் பிடித்ததற்கு காரணம் கடின உழைப்பும், நேர்மையும் என்கிறார் இவர்.

நல்ல மனமிருந்தால் மார்க்கமுண்டு, போட்டிகளைச் சமாளிக்கும் திறமையும், பொறுமையும் இந்த தொழிலில் வெற்றியைத் தரும். ஊதுபத்தியின் வாசம், வாழ்க்கையிலும் வீசுமா என்ன?

சுமங்கலி ஊதுபத்தி நீலகிரி, சேலம், திருப்பூர், கோபி, ஈரோடு என பல இடத்திலும் தனது உழைப்பின் கிளைகளை பரவவிட்டுள்ளது.

உழைப்பு யாரையும் கைவிட்டதில்லை என்கிறார் திண்டுக்கல் “ஸ்கை ப்ளூஸ்” காட்டேஜ் இண்டஸ்ட்ரியஸின் ஏ.வீ.ஆர், கார்த்திகேயன், சிறு வாசனை சுண்ணாம்பு, ரப்பர் ஸ்டாம்பு இங்க் போன்ற பல்வேறு தொழில்களின் உற்பத்தியாளர். பல தொழில்களுக்கு பயிற்சியும் தருகிறார் இவர். ஒரு நல்ல பலனை, தான் மட்டுமே அனுபவிக்காமல் அதனை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதே திருப்தி தருகிறது என்கிறார்.

ஊதுபத்தியின் வாசம், வாழ்க்கையிலும் என்ன?

“கலை வளர்க்கும் தொழில்கள் காசு தராது; கவலைகள் தான் தரும்” எனும் நிலை மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

சாலைகளின் ஓரத்தில் கண்ணைக் கவரும் குஜராத் மண் சிற்பங்கள் பார்ப்பவரை வாங்கத் தூண்டுகிறது. கலை நேர்த்தியுன், விதவிதமான வினாயகர் சிலைகள், பறவைகள், பூந்தொட்டிகள் என செய்து தம் கையே தனக்குதவி என்பதுபோல பெரிய கடைகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பிக்கொண்டிருக்கிறார் குஜராத் மாநில தரகோட்டாவை சார்ந்த திரு. ஜஷவா.

குளிரூட்டப்பட்ட அறையில் ஆள் புதையும் சோபாக்களுக்கு மத்தியில் மிக எளிமையான பிரம்பு சேர்களும் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன. இந்த ஈச்சங் குச்சிகள் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

பலவித வடிவங்களில் நாற்காலிகளும், மோடாக்களும், பூக்கூடைகள், தொங்கும் ஊஞ்சல்கள் என கலை அம்சத்துடன் விற்பனையில் இருக்கின்றன. முறையான பயிற்சிகள் மூலம் இதை ஆரம்பித்தால் வெளி மாநிலங்களுக்கு இதை ஏற்றுமதியும் செய்யலாம். உள்ளூரிலும் தேவைகள் அதிகமாக இருக்கின்றது. அரசின் வங்கிக்கடனும் இதற்கு உண்டு.

மெழுகுவர்த்தி இருட்டில் மட்டுமா வெளிச்சம் தரும்? இது பகுதி நேர வேலை செய்யும் பலரின் வாழ்க்கையிலும்தான்.

மெழுவர்த்தி செய்யும் திறமை அதை உருக்கி வார்தெடுப்பதில்தான் உள்ளது.

கடைக்காரர்களின் திருப்திதான் மிக முக்கியம் என்கிறார்.

சுத்தம் சுகம் தரும். நம் வீட்டில் அனைவரும் மிக அவசியமாக உபயோகப்படுத்துவது பினாயில், சோப் ஆயில். இந்த பொருட்களின் வற்பனையை இளைஞ்கள் ஏஜென்சி எடுத்து செய்யலாம். பயிற்சிகள் மூலம் தாங்களே பொருட்களை உற்பத்தியும் செய்யலாம்.

பெண்கள் தங்கள் இல்லத்தையும் கவனித்துக் கொண்டு சிறுசிறு தொழில்கள் மூலம் தங்களுக்கு என ஒரு வருமானத்தை வைத்துக்கொள்வது சிறந்தது ஆகும். இது பெண்களுக்கு பொருளாதார உரிமையைத் தருகிறது.

கிளினிங் பவுடர், சோப்பு பவுடர் தயாரித்து கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர் என விற்பனை செய்து வரும் திருமதி. தனலஷ்மி சிறு, சிறு குழுக்களுக்கு சிறு தொழில் பயிற்சிகள் அரசின் உதவித்தொகை மூலம் அளித்து வருகிறார்.

அனைவரிடமும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது நம்மை விட்டு விலகிவிடும் என்பதே உண்மை.

பஞ்சினால் நாய், கரடி பொம்மைகள் செய்யும் தொழில், அப்பளம், பற்பொடி, குங்குமம், சாக்பீஸ், சீயக்காய் தூள், காளான் வளர்ப்பு என நம் வாழ்க்கையை வளமாக்க மேலும் பல தொழில்கள் தயாராய் உள்ளன.

ஆக, வெற்றி என்பது வானத்து நட்சத்திமல்ல; உள்ளங்கை ரேகைதான்!


Share
 

26 Comments

 1. S.Rasiya says:

  I need some extra money so please help to me send the details about siruthozil

 2. Shanthi says:

  நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

 3. P.Jayakumari says:

  சிறுதொழில் செய்து சம்பாதிக்க விளக்கம் தந்து உதவி செயுங்கள்

 4. s. dhamodharan says:

  please help you for self job

 5. S.Mareeswaran says:

  நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது? இது என் கேள்வி குறியாக உள்ளது ? மேலும் நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லலாம்

 6. S.Mareeswaran says:

  நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது? இது என் கேள்வி குறியாக உள்ளது ? மேலும் நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லலாம் எனக்கு உதவி செய்யவும்

  By
  SM.Waran

 7. suseela.R says:

  சிறுதொழில் செய்து சம்பாதிக்க விளக்கம் தந்து உதவி செயுங்கள் pls

 8. babu.b says:

  சிறுதொழில் செய்து சம்பாதிக்க விளக்கம் தந்து உதவி செயுங்கள்

 9. k.chandrasekar says:

  chiru thozhil seaiya aasayagaullthu eppadi seaiyavendum endru theriyavillai,
  atharku uthavi seaiyungal.

 10. சிறுதொழில் செய்து சம்பாதிக்க விளக்கம் தந்து உதவி செயுங்கள்

  நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

 11. Dhayalan says:

  நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது? இது என் கேள்வி குறியாக உள்ளது ? மேலும் நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லலாம் எனக்கு உதவி செய்யவும்

  By
  P.Dhayalan

 12. selvakumar says:

  naan bcom (ca) aryar vaithullen 2013 iruppinum 3months companyil velai seithu kondirunthen avai enaku pidikka villai suyamaga tholil seiya ninaikkiren enna tholil seivathenru theriyavillai kulappamaga ullathu

 13. dhanalakshmi says:

  naan clg student.enakku fees katta konjam custom.so na veetula irunthu enna thozil seyalam.enga veedu konjam sinnatu.so tution thavira vera idea konjam sollunga plz

 14. raja says:

  I have prepared soap oil with good result, how to get sticker and I have to register some where? or I can sell directly with out registration.

 15. PERUMAL.R says:

  சிறுதொழில் செய்து சம்பாதிக்க விளக்கம் தந்து உதவி செயுங்கள்நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது?

 16. dass agencies says:

  நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது நான் குளியல் சோப் செய்து வியாபாரம் செய்யலாம் என்றுஇருக்கிறேன்

 17. angapparaj p says:

  நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது? இது என் கேள்வி குறியாக உள்ளது ? மேலும் நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லலாம் எனக்கு உதவி செய்யவும்

 18. gomarthi karthikdeepan says:

  நான் சிறு தொழில் செய்ய ஆசையுடனும் ஆர்வத்துடனும் உள்ளேன் என்ன செய்வது? எப்படி செய்வது? இது என் கேள்வி குறியாக உள்ளது ? மேலும் நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லலாம் எனக்கு உதவி செய்யவும்

 19. B.SRIDHARAN says:

  ஐயா நான் என் உழைப்பால் வளரவேண்டும் எணக்கு ஆசை சிறுதொழில் செய்து முன்நேர விளக்கம் தந்து உதவி தாருங்கள் ஐயா

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?