Home » Articles » எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்

 
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்


admin
Author:

எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும், தான் இருக்கும் துறையில் முதன்மை பெறுவதற்கும், தன்னம்பிக்கை, செயற்கரிய செயல்களைச் செய்யும் துணிவு, அர்பணிப்பு உணர்வு ஆகியன தேவை. அப்படி, தான் தேர்ந்த துறையில் சிறந்த தொழில் மேன்மை பெறுபவர்க்கு “துறை மாண்புச் செம்மல்” (VAcational Excellence) விருது வழங்கி சிறப்பிக்க முடிவு செய்த்து கோவை டெக்ஸிட்டி ரோட்டரி சங்கம்.

பொதுவாக வீடுகளில் செய்யப்படும் சாதாரண மைசூர்பாவை இனிப்பு சுவைகளை வழிநடத்திச் செல்லும் முதன்மை இடத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் கோவையல் இனிப்பு சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் அதன் நிர்வாக இயக்குநரும் கண்முன் வந்தனர்.

திரு.எம். கிருஷ்ணன் அவர்களுக்கு “துறை மாண்புச்செம்மல்” என்ற உயர் ரோட்டரி விருதினை வழங்கும் விழா கோவை மணி மேல் நிலைப்பள்ளி, நானி கலையரங்கில் 3-3-2001 அன்று நடைப்பெற்றது.

கோவை டெக்ஸிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் திரு நளின் ஜவேரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதுபெரும் தமிழறிஞர் பேரோ. அ.ச. ஞானசம்பந்தன், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, டாக்டர் பி.கே. கிருணராஜ் வாணவராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

திரு. கிருஷ்ணன் தனது ஏற்புரையில் சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது கிடத்தமைக்கு தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், “என் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை சந்திக்க வாய்ப்பளித்தது ரோட்டரி சங்கம் என்றார்.

இங்கு தன்னம்பிக்கை நிறைந்த இளைஞர்கள் நிறையபேர் கூடி இருக்கிறீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற ரோட்டரியில் ஒரு தாரக மந்திரம் உண்டு. எந்த ஒரு தொழிலைப்பற்றி சிந்திக்கும் போதும், பேசும் போதும், செயல்படுத்தும்போது நமக்கு நாமே நான்கு கேள்விகள் கேட்டு செயல்படுத்த ரோட்டரி அறிவுறுத்தும்.

அந்த நான்கு கேள்விகள் (1) இது உண்மையானதா, (2) இது சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நியாயமானதா (3) இது நல்லெண்ணத்தையும் நட்பையும் ஏற்படுத்தக்கூடியதா (4) இது சம்பந்தபட்ட அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதா என்று, இந்த நான்கு கேள்விகளுக்கும் “ஆம்” என பதில் தரக்கூடிய செயல்களை யார் செய்கிறீர்களோ அவர்கள் வெற்றி நிச்சயம் என்று ரோட்டரி அறிவுறுத்துகிறது.

இந்த அற்புதமான தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களில் நானும் ஒருவன், இதை நீங்களும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

விருது பெறும் இந்த வேலையில் எனக்கு குருவாக இருந்து வழிகாட்டிய என் தகப்பனார், தாயார் எனது குடும்பத்தார், என் வெற்றிக்கு காரணமான தொழில் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் என் நன்றியைத்தெரவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிறப்பு விருதின் இவ்விழாவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி, டாக்டர் டி.கே. பட்டம்மாள், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பாலகுமாரன், சுகிசிவம் போன்றோர் தங்கள் வாழ்த்துச்செய்தியினை அனுப்பியிருந்தனர்.

இந்த விருது, தொழில் மேன்மைக்கு கிடைத்த விருது மட்டுமல்லாமல், திரு கிருஷ்ணன் அவர்களின் பொதுநலப் பணிகளுக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த விருது.

விருது வழங்கிய சுழறச்சங்கத்துக்கும் விருது பெற்ற திரு. கிருஷ்ணனுக்கும் “தன்னம்பிக்கை” யின் நல்வாழ்த்துக்கள்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?