Home » Articles » மனித சக்தி மகத்தான சக்தி

 
மனித சக்தி மகத்தான சக்தி


ஜக்கி வாசுதேவ்
Author:

உலகம் என்பது நம் எண்ணங்களின் பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம். இன்றைக்கு உலக அரங்கில் அரங்கேறும் ஒவ்வொரு காட்சயும் ஏதோவொரு மனிதனின் உள்ளத்தில் பார்க்கப்பட்ட ஒத்திகைதான். அதனால் தான்உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும், பொறுப்பேற்க வேண்டிய கடமை மனித குலத்துக்கு உள்ளது.

யோகா, தியானம் போன்றவற்றிக்கு மத நம்பிக்கை தேவையா என்று பலரும் கேட்கிறார்கள். “மதம்” என்பது உருவாக்கப்பட்டதன் நோக்கம் இன்றைக்கு திசை மாறியிருக்கிறது. மனிதன் தன் எல்லைகளை கடந்து உயிர்களெல்லாம் ஒன்று என்று உணர்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் மதங்கள்.

மனிதன் தன் எல்லைளைக் கடந்து செல்ல உறுதுணைபுரிய வேண்டிய மதங்களே எல்லைக் கோடுகளாக மாற மனிதர்களை பிரிப்பதற்கான கருவியாய் மாறியுள்ளது. முந்தைய காலங்களில் மதங்கள் தர்மங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இன்றைக்கு மதங்கள் என்றால் “யுத்தம்” என்றே அர்த்தமாகிறது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த உலகத்தில் தீயவர்களைவிட நல்லவர்களுக்கு மத்தியில்தான் சண்டைகள் அடிக்கடி நிகழ்கின்றன. தீயவர்கள் கூட திருட்டு, கொலை,கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு அதற்குரிய தண்டனையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் நல்லவர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மதச் சண்டை போடுபவர்களைக் கேளுங்கள். நான் ஒரு நல்ல இந்து, நான் ஒரு நல்ல முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது போன்ற நலவர்களால் இந்த பூமி உருண்டை சேதம் அடைகிறது. நல்லவர்களெனில் அவர்களால் உலகுக்கு நன்மைகள் தானே நிகழ வேண்டும்.

பெரும்பாலும் மதச்சண்டைக்கு மையாமாக மத நூல்கள்தான் இருக்கின்றன. பகவத் கீதை, பைபிள்,குரான் போன்றவைகள் எல்லாம் என்ன?

உயரிய ஆன்மீக அனுபவங்களை எட்டிய அருளார்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததாலால் உருவானவேயே இந்தப் புத்தங்கள். ந்தப் புத்தகங்களை வழிகாட்டுதலாகக்கொண்டு அத்தகைய அனுபவங்களை நோக்கி மனிதகுலம் பயணமாக வேண்டுமே தவிர, அந்தப்புத்தங்களோடு நின்று விடுவதோ, புத்தங்களின் பெயரில் சண்டையிடுவதோ,சரியானதல்ல.

உதாரணத்திற்கு, ஒரு மனிதர் கடற்கரைக்குச்செல்கிறார் அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்கம், அந்ப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெற வேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.

மத்த்தின் பெயரால் வரும் மோதல்கள் ஏன்ஏற்படுகின்றன?

“எல்லாம் ஒன்று” என்கிற இறை அனுபவம் இல்லாமலேயே தங்களை இறை உணர்வு மிக்கவர்களாய் சிலர் காட்டிக் கொள்வதனால் தான். இறைமை நிலையை உணர்ந்தவர்கள் அதனை எல்லா இடங்களிம் உணர முடியும். அந்த அனுபவம் இல்லாத போதுதான் மத நம்பிக்கை மோதலில் முடியும்.

இந்த இறைத்தன்மையை விஞ்ஞானப்பூர்வமாய் உணர்வதற்கான வழிகள்தான் யோகா, தியானம் போன்றவை. கடவுளை வெளியே தேடுவதை விட தனக்குள்ளேயே தேடுவது எளிது. இதைத்தார் ரமணமகரிஷி “ஆத்மஞானம் அதி சுலபம்” என்றார்.

தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள் தனத்தில் ஈடுபடமாட்டார்கள்.

சத்குரு பதில்கள்

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் இறந்தனர். இதற்கு விஞ்ஞானிகளோ, ஆன்மீகவாதிகளோ ஒன்றும் செய்யமுடியவில்லை. கடவுள் கருணையில்லாதவரா?

‘பூமியென்னும் கோள் தன் உருவத்தில் ஒருமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிச் செய்த மிகச்சிறிய அசைவின் விளைவே பூகம்பம். பூகம்பம் இயற்கையின் வழக்கமான நிகழ்வே தவிர குரூரமானது அல்ல. இந்த நிகழ்வுக்கு சரியான காரணம் அதிகபட்ச மக்கள் தொகை. பூகம்பத்திற்கு கடவுளோ அல்லது துர் ஆவிகளோ காரணமல்ல.

அது இயற்கையின் சரிக்கட்டல் என்று கூட கொள்ளலாம். இது போன்ற இயற்கைச் சீற்றங்களில் உயிர்ச்சேதம் ஏற்பட நமது முட்டாள்தனமே காரணம். பூமியின் எடையில் ஐந்து விழுக்காடு அளவிற்கான மக்கள் தொகை எடையை நாம் உண்டாக்கிவிட்டோம். விளைவு 1 லட்சம் பேரின் மரணம்.

அமெரிக்காவில் “டார்டெனொடோ” என்னும் இடத்தில் ஒருநிகழ்ச்சிக்கா சென்றருந்தேன். அங்கு நடந்த பூகம்பத்தில் பல நூறு மரங்கள் வேரோடு விழுந்தன. கார்கள் ஏழு அடி உயரத்தில் பறந்தன. பல கட்டிடங்கள் சிதைந்தன. நான் நூற்றுக் கணக்கில் மரண எண்ணிக்கை இருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏழு அல்லது எட்டே பேர்தான் இறந்தனர். காரணம், அவர்கள் தங்களின் பூகோள நிலைக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் ஏற்ப தங்கள் கட்டிடங்களை அமைத்துள்ளனர்.

ஆக, இயற்கைச் சீற்றத்தால் பேரழிவு ஏற்படுகையில் நாம் என்ன தவறு செய்தோம். என்பதைக் கூர்ந்து கவனிப்பதே சரியான முறையாகும் பூகம்ப அபாயமுள்ள பகுதியில் பெருந்திரளாகக் குடியருப்பதும், வலிமையற்ற கட்டிடங்களைக் கட்டுவதுமே உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்குக் கடவுள் என்ன செய்வார்?

ஒருவர் பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார் என்றால்அதற்கு என்ன அடையாளம்?

ஏதோ ஒருசெயலினால்நம் வாழ்க்கை முழுமைக்கு வராது. ஒவ்வொரு கணத்திலும் இது டந்தால்நம் வாழ்க்கை முழுமைக்கு வரும் என்று உங்களுக்குள்ளே நினைத்திருக்கலாம்.

குழந்தையாக இருக்கும்போது பொம்மை கிடைத்தால் வாழ்க்கை முழுமையாகி விடுமென்று நினைதீர்கள், அது கிடைத்தது. பிறகு அதை குப்பைத்தொட்டியிலே வீசினீர்கள். படிக்கும்போது S.S.L.C பாஸ் ஆனால் வாழ்க்கை முழுமைதான் என நினைத்தீர்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை. இல்லை… இல்லை.. பட்டப்படிபு முடிந்தால் கட்டாயம் என் வாழ்க்கை மழுமைதான் என நினைத்தீர்கள்.. இப்படியே தொடர்ந்தது.

முழுமை என்பது ஏதோ ஒரு செயலினால் வராது. நம் தன்ம முழுமையாக இருந்தால்நம் வாழ்கை முழுமையாக ஆகும். கண்ணை மூடி உட்கார்ந்தாலும் முழுமை இருக்கிறது. பலவித செயல் செய்தாலும் வாழ்க்கை முழுமை என்கிற நிலை ஏற்பட வேண்டும். நம் செயல்கள் எல்லாமே விழிப்புணர்வாலோ அல்லது விழிப்பணர்வு இல்லாமேலேயோ நடக்கின்றது. செயல் கடந்த நிலையே முழுமையான நிலை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?