Home » Articles » வாசகர் பகுதி

 
வாசகர் பகுதி


admin
Author:

நாளும் நாளும் நம்பிக்கை

என் பெயர் என்.சி.தர்மலிங்கம் வயது 46. படிப்பு பி.ஏ.

எனது கூடப்பிறந்தோர் என்னுடன் சேர்ந்து ஏழுபேர். நான்கு ஆண்கள், மூன்று பெண்கள், என் குடும்பத்தில் நான் இரண்டாமவன்.

எனது தந்தையார் காலஞ்சென்ற திரு.என்.கே. சொக்கலிங்கம் அவர்கள் லட்சுமிபாய் அவர்களும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

எனது 13வது வயதில் எனது தந்தையாரின் லாரித் தொழிலில் கடும் கஷ்டம் ஏற்பட்டு பல லட்சம் சொத்து பறிபோனது.

எனது கல்வியை 9 ம் வகுப்பில் நிறுத்திவிட்டு, என் தந்தையுடன் சேர்ந்து 1967ம் ஆண்டில் இருவரும் கால் நடையாக நடந்து சென்று ஒரிசா மாநில லாட்டரி டிக்கட் விற்றோம்.

பின் 1969ம் ஆண்டு நாமக்கல் பஸ்நிலையத்தில் டேபிள் போட்டு லாட்டரி விற்பனை செய்தோம். அமோக விற்பனை.. வாடகை காரில் ஸ்பீக்கர் செட் கட்டி தமிழகம் முழுதும் விறபனை செய்தோம்.

பின் இரண்டு கார்கள் சொந்தமாக 1970ல் வாங்கினோம்.

தமிழக அரசு திடீரென லாட்டரி டிக்கட்டுக்கு தடை விதித்தது. சுமார் 20 ஆட்கள் எங்களிடம் வேலை பார்த்தார்கள். ஒரு வருடம் வேலை இல்லாமல் சம்பளம் தந்தோம்.

மறுபடி நஷ்டம். இரண்டு கார்களும் விற்பனை செய்யப்பட்டன. ஆட்கள் நின்றனர்.

பின் என்ன செய்வது? கல்வியைத்தொடர முடிவு செய்து மெட்ரிக்குலேஷன் தபால் வழி பயின்று தேறி பி.யு.சி கல்லூரியில் சேர்ந்து பின் பி.ஏ. (பொருளாதார பட்டம் பெற்றேன். மீண்டும் கடன் தொல்லை. என் குடும்பத்தில் அனைவரும் படித்துக் கொண்டிருந்தோம்.

என் தந்தையிடம் உதவி பெற்று தற்போது பாண்டிச்சேரியில் கோடீஸ்வரராக இருக்கும் நபரே எங்கள் தகப்பனாரை ஏமாற்றினார்.

என் தந்தை மனம் தளரவில்லை. நானும் மனம் தளராமல் செருப்புகூட அறுந்துபோன நிலையில் கல்லூரி சென்றேன்.

பின் எல்.ஐ.சி ஏஜென்சி எடுத்து செய்தேன். பின்பு கடனில் ஒரு டாக்சி வாங்கி ஓட்டினேன்.

எக்காலக்கட்டத்திலும் மனம் தளரவில்லை. உறுதியாகவே இருக்கிறேன். என் தந்தை 1985ல் காலமானார்.

என் மூன்று தங்கைளுக்கும், என் மூத்தசகோதரர் கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தார் (அவர் திருமணம் செய்துகொள்ளாமலே இன்று வரை உள்ளார்).

நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்று வீடு விற்பனை, கார் விற்பனை என கமிஷன் ஏஜென்சி நடத்தி வருகிறேன்.

கதை, கட்டுரை பல எழுதி அவைகளும் பல வெளி வந்துள்ளன.

வாழ்க்கையில் நான் கற்ற ஒரே பாடம் எந்த சூழ்நிலையிலும் நம்மை நாமே தாழ்வாக எண்ணக் கூடாது. நாளும், நாளும் நம்பிக்கையோடு இருப்பதே நாம் பிறவி எடுத்தவுடன் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?