Home » Articles » வணக்கம் தலைவரே…

 
வணக்கம் தலைவரே…


முத்தையா ம
Author:

“நம்ம கையிலே என்னங்க இருக்கு” என்று நிறையபேர் முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறோம். “நம் கையில் எல்லாம் இருக்கிறது” என்று. தன்னம்பிக்கை வாசகர்கள் சொல்வார்கள்.

நம் கையில் என்ன இருக்கிறோது இல்லையோ, தலைமைப் பண்புக்கான ரகசியம் இருக்கிறது.மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் கூட, தங்களைத் தரணி போற்றும் தலைவர்களாக உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை, இந்தத தொடரில் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அதை எனக்குக் கற்றுக் கொடுத்ததே, கையில் இருக்கும் கட்டை விரல்தான்.

நாம் எல்லோரும் கட்டை விரலை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதாவது, “வெற்றி” என்பதற்கு அடையாளமாக, மற்ற விரல்களை மடக்கி, கட்டை விரலை மட்டும் உயர்த்திக் காட்டுகிறோம் இல்லையா?’

இது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. நியாயமாகப் பார்த்தால், மற்ற நான்கு விரல்களை விடவும் கீழே இருப்பதுதான் கட்டைவிரல். ஆனால், அது எப்படி Thumps up என்று வெற்றிக்கு அடையாளமாகும்? யோசிப்போம்.

மற்ற நான்கு விரல்களை விடவும் பள்ளத்தில் இருப்பது மட்டுமில்லை தனியாக வேறு இருக்கிறது. அப்படியானால், இந்தக்கட்டை விரலை “நாம்” என்று வைத்தக் கொள்ளலாம். கையெழுத்துப் போடத் தெரியாத மனிதர் தன் கட்டைவிரல் ரேகையைத்தானே வைக்கிறார். அப்படியென்றால் நாம் தான் கட்டைவிரல், சரியா?

இப்போது, மற்ற விரல்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். இந்த சுண்டுவிரல் எதற்கெடுத்தாலும் முந்திக் கொள்ளும். அது அடிப்படையில் பலவீனமான விரல். ஆனால் “தனக்கு எல்லாம் தெரியும்” என்பது போல ஒரு எகத்தாளம் அதனிடம் இருக்கிறது. எனவே, சுண்டுவிரல் என்பது முந்திரிக் கொட்டைத்தத்திற்கு அடையாளம்.

அடுத்தது,மோதிர விரல். அதற்கு அணிகலன்கள், அலங்காரம் போன்றவற்றில் அதிக ஆசை இருக்கும். கொஞ்சகாலம் மோதிரம் போட்டு கற்றி விட்டால் அந்த இடத்தை மட்டும் அச்சாக காட்டி துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கும். தன் இழப்பை வெளிகாட்டிக் கொள்வதுத் தலைமைப் பண்புக்கு தகுந்தல்ல. மோதிரவிரல் நம் கையின் நகை ஸ்டாண்ட், வெறும் பகட்டு.

அதற்கும் அடுத்து நடுவிரல். “நான்” என்கிற ஆணவத்தின் நகம் சூடிய வெளிப்பாடு. எப்போதும் தலைநிமிர்ந்தே இருக்கும். விரல்களை மொத்தமாய மடக்கினால் கூட சற்று நீண்டிருக்குமே தவிர மற்றவற்றுடன் ஒத்துப்போகாது. நடுவிரல் அகந்தையின் அடையாளம்.

அடுத்த சுட்டுவிரல். இது கொஞ்சம் நாகரிகமான பெயர். இதன் அப்பட்டமான பெயர் என்னவோ “ஆட்காட்டி விரல்” தான். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்கள் மீது அநாவசியமாகப் பழி போட்டுவிட்டு தன் தலை தப்பினால் போதும் என்று பார்க்கிற குணம். இது சுயநலத்தின் அடையாளம்.

சொல்லப்போனால், இந்த நான்கு குணங்களுமே நம்மிடம் இருக்கிறது. இந்த நான்கு குணங்களால்தான் நாம் உயர முடியாமல் பள்ளத்திலேயே இருக்கிறோம்.

முந்திரிக்கொட்டைத்தனத்தை அடக்கி, வீண் பகட்டில் இருக்கிற விருப்பத்தை அடக்கி, ஆவத்தைக் கட்டுப்டுத்தி, மற்றவர்கள் மீது பழிபோடும் மனப்பான்மையைக் கட்டுப்படுத்தினால், தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும் தலைவர்களாக உயரலாம் என்பதைத்தான் கட்டைவிரலின் உயர்வு நமக்குக் காட்டுகிறது. இப்படி கற்பனை செய்து கொண்டால் கட்டைவிரல் கலங்கரை விளக்காய் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது இல்லையா?

தலைமைப் பண்பின் ஏழாவது விதி.

தனக்குள் இருக்கும் எதிரிகளை வெல்பவர்களே தலைவர்கள் ஆகிறார்கள்

தன்னுடைய சாதனைகள் என்னென்ன என்பதைபெரும்பாலும் தலைவர்கள் தெரிந்து ஐத்துக்கொள்வார்கள். கூடவே தங்கள் சறுக்கல்கள் பற்றியும் அவர்களுக்கு சரியாகத் தெரியும்.

புகழ் மொழிகள் வரும்போது எச்சரிக்கையாய் ருக்கவும், இகழ்ந்து பேசப்படுவதை உற்சாகமாக்க் கேட்பதும் இந்தப் பக்குவம் இருக்கும்போதுமட்டுமே சாத்தியம். “தன்னைப்பற்றிய குறைபாடுகளை யார்கேட்டுப் பொறுத்துக்கொள்கிறார்களோ அவர்களது ஆடசிக்குக்கீழ் உலகம் நிலையாக இருக்கும்” எனகிறார் திருள்ளுர்.

ஒருதலைவர் தன்மீதான விமர்சனங்களை ரசிக்கிறார், கேட்கத்தயாராக இருக்கிறார் ன்றாலே எதரிகள் உற்சாகமிழந்து போவார்கள். மாறாக சீறி விழுவார் என்றால்தான் சீண்டிப்பார்ப்பார்கள்.

அதே நேரம், தனது அமைப்பு அல்லது நிறுவனத்துக்குள் அனைவரின் விமர்சனங்களுக்கும் காது கொடுக்கத் தொடங்கவும் கூடாது. “தலைவரே! நீங்க விட்ட அறிக்கையிலே மூணாவது வரி தப்பு” என்று தொண்டர் வந்து சொல்லக்கூடாது.

புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் சரியானதையே தலைவர் செய்வார் எனகிற நம்பிக்கையைத் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வல்லமை உள்ளவர்களே வெற்றிகரமான தலைவர்கள்.

தலைவர் என்கிற சொல், தலையைக்குறிக்கிறது. முடிஎடுக்கும்மூளைக்கு அது அடையாளம். மூளை முடிவெடுக்கும்; மற்ற உறுப்புகளுக்கு உதரவு போடும்; உறுப்புகளின் உத்தவருக்குத் தலை வணங்காது. அத்தகைய தைவர்கள் இன்றைக்கு இருக்கிறார்களா என்ன? வெள்ளாங்கோவில் என்கிற ஊரில் “ராஜ்கவி” என்று ஒரு நல்ல கவிஞர். அவர் ஒரு முறை எழுதயருந்தார்,

“திறமையுள்ள தலைவர்களெல்லாம் தபால்தலைகள் ஆகிவிட்டதால், இன்று – தலையாட்டி பொம்மைகளே தலைமைப் பீடங்களில்!”

ஒரு கூட்டம முழுவதுக்குமாக சேர்ந்து சிந்திக்கிற தலை – சிந்திக்கும் ஆற்றலுள்ள தலைகளைத் தேடிப்பிடிக்கும் தலை – இவையெல்லாம் ஒரு தலைவரின் தலைக்குரிய தன்மைகள்.

ஆமாம்! தான் தலைவராக நிலைபெற்ற நிற்கும்போதே அடுத்த கட்டத் தலைர்களை அடையாளம் கண்டு உருவாக்குவது ஒரு நல்ல தலைவருக்கு அழகு. அதில் ஒரு சுயநலமும் உண்டு. இன்னொரு தலைவர் வந்தால்தானே இவர் “பெருந்தலைவர்” ஆக முடியும்!

அடுத்த கட்டத் தலைவரை உருவாக்குவதென்பது, ஒரு தனிக்கலை.
தலைமைப் பண்பின் எட்டாவது விதி!

தலைவர்களை உருவாக்குபவர்களே தலைவர்கள்!
(தொடரும்..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?