Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

பயந்து விட்டால்…

சிறுவர்கள் எதையெல்லாம் பார்த்து பயப்படுகிறார்கள்?

“இடி இடித்தால்” பயம்!

புதிய மனிதர்கள் வந்தால் பயம்.

வித்தியாசமான சத்தம் கேட்டால் பயம்;

இருட்டைப் பார்த்தால் பயம்;

தனிமையில் இருந்தால் பயம்;

வெளியிடங்களுக்கு செல்லும்போது பயம்; (காணாமல் போய் விடுவோமோ? என நினைத்து)

டாக்டரிடம் செல்லும்போது பயம்;

பேய் பிசாசு பயம்;

இப்படி பட்டியலைத் தொடர்ந்து எழுதலாம். இவை தவிர சினிமாவில் பார்க்கும் கொலை, வனமுறை, பேய்க்கதைகள், பத்திரிகைகளில் பார்க்கும் விபத்து, படங்கள், செய்திகள், பல பயத்தை உண்டாக்குகின்றன. இந்த சூழ்நிலைகளின் போது பல பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

“ச்சீ பயந்தாங்கொள்ளி..” போடா

அதெல்லாம் ஒண்ணுமில்லே போ

இப்படியெல்லாம் பயந்துட்டே இருந்தா உன்னை ஆஸ்டல்ல விட்டுவிடுவிடுவேன்.

இவ்வளவு கோழையா இருக்காதே.

முட்டாள்தனமா பேசாதே என்று அவர்வர் மனதில் நினைப்படக்கேற்ப சொல்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.

தில் முக்கியமான அம்சம் என்னவென்றால், குழந்தையின் ஒவ்வொரு பயமும் நியாயமானது. அந்த பய உணர்வு, குழந்தை பெரியவனாக வரும்போது படிப்படியாக விவரம் அறிந்து நடைமுறையில் அவையெல்லாம் உண்மையல்ல; ஒரு பிரமைதான் என்று உரணருமளவிற்கு மன வளர்ச்சி பெறும் வரை மனதில் பதிந்தே இருக்கும்.

அதுவரை பெற்றோர் பிள்ளைகளைக் கவனமாக கையாள வேண்டும். அதற்கு குழந்தையின் மனோபாவத்தை எந்த மனநிலையில் அந்த பயம் உருவாகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப வழிகாட்ட வேண்டும். அதைவிடுத்து பெற்றோர்கள் தங்களுடைய வளர்ந்துவிட்ட மனநிலையில் குழந்தையின் மனபயங்களை ஒரேயடியாக தவறெனக் கூறி மறுக்கக்கூடாது.

பயத்தை போக்க என்ன செய்யலாம்?

முதலாவதாக பெற்றோர்கள் தங்களுடைய பயத்தையோ தாம் இளம் வயதில் பயந்தது போல நடந்த தீய சம்பவங்களையே குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

உதாரணத்திற்கு “நான் பத்து வயசு இருக்கும்போது ஒரு விபத்துல கை ஒடிஞ்சது. அதிலிருந்து வெளியூர் பயணம்னாலும் பயந்தான்” என்பது போல் வார்த்தைகளை சொல்லக்கூடாது. அப்படி சொல்லும்போது அந்த இளம் மனதில் பயணம் என்றால் “விப்பும் கை உடைதலும்” மனதிற்குள் நெகடிவ் சிந்னையாகிவிடும்.

இதற்கு மாறாக, குழந்தைகள் பயப்படும்போது “நானும் உன் வயசுல இப்படி பயந்தவன் தான். ஆனால், நாளாக ஆக இதெல்லாம் உண்மையல்ல என்று புரிந்ததும் தைரியமாகிவிட்டேன்” என்று சொல்ல்லாம்.

அதன் மூலம் குழந்தைக்கு “இந்த உணர்வு நமக்கு மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் உள்ளது தான்; இதை விலக்கி விட முடியும்” என நம்பிக்கை பிறக்கும். எங்கேயாவது நடக்கின்ற கோரக் காட்சிகளை குழந்தைகளிடம், விவரிக்கூடாது.

இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை வரும்போது அச்சப்படும்மனநிலை இருந்தால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் உடன் சென்று அந்த சூழ்நிலையில் உள்ள பயத்தை நீக்கி விடலாம்.

உதாரணத்திற்கு ஆஸ்பத்திரிக்கு போவது பல குழந்தைகளுக்கு பயமாக இருக்கும். அதுபோன்றவர்களை உடல் நோய் இல்லாத போது ஓரிரு தடவ ஆஸ்பத்திரிக்குள் அழைத்துச் சென்று அங்குள்ள அலுவலர்களிடம்/ டாக்டரிடம் அறிமுகப்படுத்தி பேசி விட்டு ந்தால் அந்த் பயம் விலகி விடும்.

மூன்றாவதாக, ஒரு சிறுவனிடம் வயதுக்கு மீறிய பயமிருந்தால், அவை தொடர்ந்து நீடித்தால்,அதன் காரணமாக இயல்பான படிப்பு, தாக்கம், போன்றவகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை செய்ய வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?