Home » Articles » வெற்றியின் மனமே…

 
வெற்றியின் மனமே…


இராமநாதன் கோ
Author:

தொடர்..

எந்த மனம் வேண்டும்?

ஒரு உதாரணத்துடன் தொடங்குகிறேன்.

அந்த போஸ்ட்மேன் தன் அலுவலகத்தில் தபால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான கடிதம் கண்ணில் பட்டது. அது கடவுள் என விலாசமிட்டிருந்தது.

ஆச்சரியமடைந்த போஸ்ட்மேன், “சரி, என்ன தான் எழுதியிருக்கிறது என்று பார்ப்போம்” என்று தபாலைப்பிரித்தால் வயதான பெண் ஒருத்தி, வாழ்க்கையில் விரக்தியுடன் தன் கஷ்டங்களையெல்லாம் எழுதி, “எனக்கு யாருமே இல்லை; கடவுளே ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினால், நான் வாழ்க்கையை நடத்த முடியும்” என்று எழுதியிருந்தாள்.

அதைப்படித்ததும் மனம் இளகிய போஸ்ட மேன், தன்னுடைய சக ஊழியர்களிடம் நிதி திரட்டினான். தொளாயிரம் ரூபாய் வரை சேர்ந்து, அந்த வயதான பெண்ணுக்கு மணி ஆர்டரில் அனுப்பி வைத்தான்.

சில நாட்கள் கழித்து கடவுளுக்கு விலாசமிட்டு மற்றொரு கடிதம் வந்தது. ஆவலுடன் பிரித்தான்.

கடவுளே என்மீது மனமிறங்கி பணம் அனுப்பியதற்கு நன்றி. ஆனாலும் நான் கேட்ட ஆயிரத்தில் ரூ. 900/- மட்டுமே கிடைத்தது. அந்த போஸ்ட்மேன்தான் மீதி நூறுரூபாயை திருடியிருக்கணும்” என்றிருந்தது.

“இவ்வளவு செஞ்சும் பயனில்லாம போச்சே” என்று மனமுடைந்த போஸ்ட்மேன் தன்னுடைய பணத்திலிருந்து நூறுரூபாயை கொண்டு சென்று அந்த பெண்ணின் கதவைத் தட்டினான்ன். “கடவுளிடமிருந்து நூறு ரூபாய் மணியார்டர் வந்துள்ளது” என்றாள்.

“பார்த்தியா, உன்னுடைய திருட்டுத்தனத்தை கடவுளே தெரிஞ்சுமேலும் நூறு ரூபா அனுப்பியிருக்கார். இனிமேல் இப்படி தபால்காரன் மூலம் அனுப்ப வேண்டாம். நேரிலேயே கொடுக்கச் சொல்லிட்டேன்னு திருப்பி அனுப்பிடு” என்றான்.

இதைப் போல எல்லா நல்ல செயல்களிலும் ஏதாவது குறைகளையே கண்டுபிடித்து அல்லது இல்லாத குறையை உருவாக்கி எதிலும் திருப்தியடையாத மனிதர்களை Pessimists என்பர்.

இவர்களுக்கு சந்தோஷப்படவே தெரியாது. எந்த தொல்லையும் இல்லாவிட்டாலும் கூட மகிழ்ச்சியடைய மாட்டார்கள். சிலர் மிகுந்த வறுமையிலிருந்த செல்வந்தரான பிறகும் வறுமையில் கஷ்டப்பட்டதைவிட அதிகமாக கஷ்டப்படுவார்கள். சந்தோஷமாக இருந்தால் ஒருவேலை கெட்டது நடந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். உழைத்தால் சிரமத்திற்கு ஆகாக வேண்டும் நினைப்பார்கள்.

வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களை குறை கூறியே வாழ்வார்கள். குடும்பத்தில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தை பிறப்பு பதவி உயர்வு போல் ஏதேனும் உயர்வான அம்சங்கள் நடந்தாலும் அதிலும் ஏதாவது ஒரு குறையை கண்டு பிடித்து பெரியதாக்கிக் கொள்வார்கள்.

எல்லா நேரங்களிலும் உடலுக்கு ஏதேனும் ஆபத்தான நோய் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். எதிர்காலத்தில் எப்படியெல்லாம் கெடுதல் ஏற்படும் என்ற கற்பனையே அதிகமாக இருக்கும். தம் வாழ்நாளில் நடந்த நல்ல அம்சங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அனுபவித்த சிரமங்களையே பட்டியலிடுவார்கள். இது போன்ற மனிதர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை இது போன்ற மனிதர்கள்,குடும்பத்தில், தொழிலில், சமூகத் தொடர்புகளில் நெருங்கியவ்வராக இருந்து விட்டால், அவர் மட்டுமின்றிஉடனிருப்பவர்களையம் அவதிக் குள்ளாக்குவார்கள். இது போன்ற குறைகளையே கண்டு எப்போதும் அவதிப்டுவோர் என்ன செய்யலாம்?

நம்முன் இருப்பது இரண்டு வகையான வாழ்க்கைதான். ஒன்று ஆப்டிமிஸம் மற்றொன்று பெஸிமிஸம்

பெஸிமிஸம் என்னும் குறுகிய எண்ணம் கொண்டவர்களின் சிந்தனைகளைப் பார்ப்போம்.

“எதைச் செஞ்சாலும் பிரச்சனை தீரப்போவதில்லை”

“இந்தக் காரணங்களினால் நான் அதைச் செய்ய முடியாது.

“அது என்னுடைய வேலை கிடையாது”

“அவங்களோட எனக்கு எப்பவுமே ஒத்து வராது.”

“எல்லாத்தையும் அந்த காலத்திலேயே செஞ்சுட்டேன்”.

“எனக்கு விருப்பமாயிருந்தாத்தான் செய்வேன்”

“முதல்ல மத்தவங்கெல்லாம் சரியா செய்யட்டும்”.

“அப்புறம் நான் செய்யறேன்”

இது போன்ற சிந்தனைகள் நம்முள் இருக்கும்போது சிறு பிரச்னைகள் கூட பூதகரமாக தெரியும். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு ஆபத்து பயம் விரட்டிக் கொண்டிருக்கும்.

சிறு தோல்விகள் கூட செயலிழக்கச் செய்துவிடும்.

இனி, மனதை “ஆப்டிமிஸம்” என்னும் பரந்த மனப் போக்கில் சிந்திப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

“எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தீர்க்கலாம்”.

“எத்தனை தடைகளிலிருந்தாலும் அஐயெல்லாம் சமாளித்து இறுதியில் வெற்றி பெற முடியும்”.

“என்னுடைய வேலையாக இல்லாட்டி என்ன? நானும் செய்யறேன்.”

“சில கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் எல்லோரும் சேர்ந்தே செய்யலாம்”.

“இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன.

“இன்னும் பல சாதனைகளைச் செய்ய முடியும்”.

“என்னுடைய தனி மனித விருப்பத்தைவிட எது சரியோ அதையே செய்யலாம்”.

“முதலில் என்னை சரி செய்து கொள்கிறேன். பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம்”.

இந்த “ஆப்டிமிஸம்” எதற்கு?

இது இல்லாவிட்டால் எல்லா வசதிவாய்ப்புகளிலிருந்தாலும் திருப்தியில்லா வாழ்க்கையாக இருக்கும்.

ஆனால், இந்த மனநிலை இருந்தால் எது இருந்தாலும் சரி, எது இல்லாவிட்டாலும் சரி உயர்வான திருப்தியான வாழ்க்கையே இருக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?