Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

வானத்தில் பறக்கும் பட்டம் போலத்தான் வாழ்க்கை. போட்டிப் பட்டங்களும் பறக்கத்தான் செய்யும். நிறையபட்டங்கள் பறந்தாலென்ன? நம்முடைய ஆகாயம் நமக்கு. பக்கத்துப் பட்டத்தை அறுக்கவும் முயற்சிக்க கூடாது. நம் பட்டத்து நூல் அறுபடுவதையும் அனுமதிக்க முடியாது.

எதிர்பாராத காற்று; எதிர்பக்கமாய் வீசினாலும் கிழிந்துவிடாத உறுதியுடன் காற்றில் படபடப்பதே பட்டம். பதட்டமில்லாத பட்டம்தான் பறக்கமுடியும். கிழிந்து கோகாத, அறுந்து போகாத உறுதியுடன் நம் வாழ்க்கைப்பட்டம் பறக்கட்டும்.

போட்டிகளைக் காட்டிலும் உயரப் பறக்க முயல்வதே நல்லது. போட்டிக்கு வருபவர்களை அறுத்தெறிய நினைப்பதில் அபாயம் உள்ளது. அது ஆரோக்கியமானதும் அல்ல.

திசை தெரிந்து, தருணம் புரிந்து பறக்க விடப்படும் பட்டம் மாதிரி, வாய்ப்புகளுக்குகேற்ற திசையில் வாழ்க்கையைக் கொண்டு செல்லும் திறமை நமக்குத் தேவை. எத்தனை உயரத்தில் பட்டம்பறந்தாலும் பூமியில் நிற்பவர் கையில்கட்டுப்படுவது மாதிரி, உயரமான கனவுகளையும், நிதர்சனமான செயல்பாடுகளுக்குள் நிலைநிறுத்தி வைக்கிற பக்குவம் வாய்ப்பதும் முக்கியம்.

வானை அளக்கும் வல்லமையோடு
வாழ்க்கைப்பட்டம் பறக்கட்டும்!

வாழ்த்துக்களுடன்
ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?