– 2001 – March | தன்னம்பிக்கை

Home » 2001 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    குடும்பத்திற்காக கடைகளுக்குப் போவது, சம்பளத்திற்காக வேலைக்குப் போவது, நண்பர்களுக்காக வெளியே போவது என்று நமது இருபத்து நான்கு மணி நேரத்தை எப்படியெல்லாம் பாகப்பிரிவினை செய்கிறோம்?

    Continue Reading »

    வருமுன் காப்பது

    ரீகி, Dr. Mikao usui என்பவரால் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ரீகி என்றால் “பிரபஞ்ச உயிர்சக்தி” என்று பொருள். ரீகி சக்தி மிகுவும் சக்தி வாய்ந்தது.சக்தி வாய்ந்த ஒரு சுய சிகிச்சை முறை. இதை பண்ணணினால் உடனே முழு மன அமதி, உடல் தளர்வு, எல்லாம் கிடைக்கும்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    தன்னம்பிக்கை உள்ளவன் தன்னைப்பற்றித் தெளிவான கருத்துக்கொண்டவனாக இருப்பான். தன்னுடைய தகுதிகள், திறமைகள், அறிவு, ஆற்றல் பற்றிய ஒரு தெளிவான கணிப்பு அவனுக்கு என்றுமே உண்டு.

    Continue Reading »

    தன்னம்பிக்கை தந்த வெற்றி

    1999 ஆண்டின் ஓர் நாள், உடுமலைப்பேட்டை சென்று திரும்பும் வழியில், பழனி பேருந்து நிலையத்தில் நான் நின்றபோதுதான் ஆரம்பம் நிகழ்ந்தது.

    புத்தகக கடைகளில் மாத, வார இதழ்களில் நாட்டம் கொண்டு நோட்டம் விட்டுக்கொண்டிருந்த என் கண்களில் சின்ன அளவில் வெளி வந்து கொண்டிருந்த “தன்னம்பிக்கை” தெரிந்தது. என்னுள் எப்போதும் இயங்கிக்

    Continue Reading »

    வணக்கம் தலைவரே

    “தலைவர் என்று சொன்ன மாத்திரத்திலேயே ஆள், அம்பு சேனை, சொகுசு போன்ற சுகங்கள் மட்டுமே நம் நினைவுக்கு வருகின்றன.

    ஒரு தலைவரை நெருங்கிக் கேட்டுப்பாருங்கள்! வியர்வை, இரத்தம், கண்ணீர், கவு என்று உண்மையான பட்டியலை எளியிடுவார். இன்றைய – சமூக அமைப்பில், மேல் தளத்திற்கு வருகிற யாரும், அதற்குரிய விலையைக் கொடுத்துதான் வரமுடியும். “ஏதோ அதிர்ஷ்டம்! மேலே வந்துட்டாரு” என்பதெல்லாம், பொறாமையால் வருகிற பொருமல் தானே தவிர, அதில் உண்மை இராது.

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    ஹோட்டலிலே TIPS மட்டும் கொடுத்த ஒருத்தரைப் பற்றி போன மாசம் சொன்னேன். இந்த மாசமும் அதே ஹோட்டலிலே தொடங்குவோம்.

    “குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்” அப்படின்னு ஹோட்டலிலே எழுதி வைச்சிருக்காங்க. நீங்களும் பல இடங்களிலே பார்த்திருப்பீங்க!

    Continue Reading »

    மளிகையிலிருந்து மாளிகை வரை

    பாபு ! “நம்ம அண்ணாச்சி கடைல ரெண்டு கிலோ துவரம் பருப்பு வாங்கிட்டு வா” நல்ல மனுஷன் எந்தப் பொருள் வாங்கினாலும் கறிவேப்பிலையும், கொத்து மல்லியும் கேட்காமலேயே பைல வெச்சிடுவாரு (இது வியாபார ரகசியம்). அது பலபேர் வீட்டில் அன்றாடம் கேட்பது. தினசரி வாழ்வில் நம் உதடுகள் உச்சிக்கும் வார்த்தை “மளிகை”. நாள் முழுவதும் விறுவிறுப்பாக விற்பனை நடக்கும் இடங்களில் முக்கியமானது மளிகைக் கடை.

    Continue Reading »

    இராவண இரத்தம்

    தீபக் கார்த்திகை தினத்தினிலே தீய்ந்த
    சாபமாய் உதித்தவன் நான்.
    சாபங்கள் கால்களைப்ப இணித்தாலும்
    சாடி எழுபவன் நான்.

    Continue Reading »