Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

தலைவர்கள் எங்கு உருவாகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய – “வணக்கம் தலைவரே” சிறப்பாக இருக்கிறது. தோல்வியின் மூலம் பாடம் கற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாலு ஐயப்பன் பேஇட்டி அருமை. “சிரிப்போம் சிறப்போம்” தொடக்கமே சிந்திக்கத் தூண்டியது.

கே. விஸ்வநாதன், பெரிய மோப்பிரிபாளையம்

சத்குருவின் ஜோதிதனம் பற்றிய கருத்து நன்று. “வணக்கம் தலைவரே” தலைமைப்பண்புகள் பற்றி அறிய உதவியது. அரசு வேலைக்கும் தனியார் வேலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்திய புருஷோத்தமன் அவர்களுக்கு நன்றி. “அதிக மதிப்பெண் பெற..” தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டானிக். “இந்தியா 2020” ல் புதிய நூற்றாண்டுக்கான தொலைநோக்கு முக்கிய செய்திகள் வெளியிட்டமைக்கும் நன்றி.

சக்தி வடிவேல் குள்ளம்பாளையும்.

நகைச்சுவையோடு சொல்லும்போது எந்தச் செய்தியும் உரியவரிடம் சென்று எளிதில் சேரும். “சிரிப்போம் சிறப்போம்” புதிய தொடர் சிறப்பாக உள்ளது. மாணவர்களை கருத்தில் கொண்டு வெளியிட்ட அதக மதிப்பெண் பெற..” – பயனுள்ள தகவல்.

உஷா முத்துராமன், திருச்சி.

தேர்வு நேரத்தில், படித்த கல்வியைவிட, தேர்வு எழுதச்செல்லும் பதட்டத்தையும், மறதியையும் விலக்க பயனுள்ள படைப்பு “அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?” வெளியிட்ட இதழுக்கும், எழுதிய டாக்டர் அவர்களுக்கும் நன்றி.
செ. கோவிந்தராஜன், திருச்சி.

அமைதி, ஆனந்தம் பெற தியானம் தேவை என அறிவுறுத்திய பின்அட்டை அருமை. “உள்ளத்தோடு உள்ளம்” வெற்றியை நோக்கி பயணம் செய்ய உதவுகிறது. வாசகர்களுக்கான புதிய பகுதிகளை வரவேற்கிறேன்.

ஆர். ஆறுச்சாமி, தடாகம்.

டாக்டர், பெருமதியழகன் எழுதிய “அதிக மதிப்பெண் பெற..” வரும் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் வெற்றிபெற பெரிதும் உதவும். நன்றி!

சி. சுவாமிநாதன், ஊத்தங்கரை

பாலு ஐயக்கம் தோல்வி அடைந்தபோது புரட்டி எடுத்த பத்திரிகைகள், அவர் மீண்டும் எழுந்து நின்றபோது மறந்த நேரத்தில் “தன்னம்பிக்கை” தனக்குரிய சரியான பணியைச் செய்துள்ளது. தொழிலில் தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பேட்டி
கவிஞர் லெணா, திருச்சி.

மரணத்தையும் தள்ளிப்போடலாம். அதற்கு நகைச்சுவையே மரந்து ன சிரிப்போடு சிந்திக்க வைத்த நகைச்சுவை தென்றல் அவர்களுக்கு நன்றி.

டி. பாலமுரளி, சரவணம்பட்டி

“வணக்கம் தலைவரே” ஆரம்பமே அசத்தல், பண்புள்ள தொடரை வெளியிட்டமைக்கு நன்றி.
நெல்லைபிரம்மா, கோவை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்