Home » Articles » தன்னம்பிக்கை தந்த வெற்றி

 
தன்னம்பிக்கை தந்த வெற்றி


ஜெபகுருமணி
Author:

1999 ஆண்டின் ஓர் நாள், உடுமலைப்பேட்டை சென்று திரும்பும் வழியில், பழனி பேருந்து நிலையத்தில் நான் நின்றபோதுதான் ஆரம்பம் நிகழ்ந்தது.

புத்தகக கடைகளில் மாத, வார இதழ்களில் நாட்டம் கொண்டு நோட்டம் விட்டுக்கொண்டிருந்த என் கண்களில் சின்ன அளவில் வெளி வந்து கொண்டிருந்த “தன்னம்பிக்கை” தெரிந்தது. என்னுள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் “ஓர் உந்து சக்தி” “அதை வாங்கு” என்றது. வாங்கினேன். படித்தேன். பிடித்தது.

மற்ற மாத, வார இதழ்களில் ஏதாவது ஒரு சில பக்கங்களில் வாழ்வின் தேவைகள் சில வரிகள் இருக்கும். ஆனால் தன்னம்பிக்கையில் வரிகள் அத்தனையுமே வாழ்க்கையாயிருப்பதை உணர்ந்த நான், முகவர்க்கு விண்ணப்பித்தேன். நிர்வாக ஆசிரியர் அவர்கள் என்னைத் தன்னம்பிக்கை முகவராக அங்கீகரித்து என் முகவரியை அர்த்தமுள்ளதாக்கினார்.

ஆரம்பத்தில் குறைந்த இதழ்களை வரவழைத்தேன். என் இருப்பிடத்திலிருந்து 20 கி.மீ சுற்றளவு முதல் எல்லையாக நிர்ணயித்து, பேருந்தில் ஊருக்கு ஊர் இறங்கினேன். புத்தகக் கடைகளை அணுகினேன்.

என் கைகளில் இருந்த “தன்னம்பிக்கை” கடைக்காரர்களின் உள்ளத்தில் இல்லாமையைக் கண்டேன். “இதெல்லாம் இங்கே விற்காது சார்!”, “இதுக்கா விலை 5 ரூபாய்?”, “அடுத்த தடவை வாங்க” “என் சகோதரர் வரட்டும் கேட்டுட்டு வாங்கறேன்” என்ற கருத்துக்களும், கேள்விகளும் எழுந்து என்னைத் தாக்கின.

மற்ற மாத, வார இதழ்களுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை விற்பனையாளர்கள் “தன்னம்பிக்கை”க்குத் தராத நேரம் அது. மற்ற இதழ்களை வெளியே தொங்கவிட்டார்கள். “தன்னம்பிக்கை”யை மட்டும் கடையின் உள்ளேயே தங்விட்டார்கள். ஒரு வேளை தங்கள் புத்தகக் கடைகளில் எப்போதும் “தன்னம்பிக்கை” இருக்க வேண்டும் என்று எண்ணினார்களோ என்னவோ?

மாதம் இரண்டு தடவை பயணம் செய்து வெளியே தொங்கவிடக் கேட்டுக் கொண்டேன். இருந்தும் புத்தகங்கள் மீந்தன. ஒரு கட்டத்தில் எனக்கு மனத் தளர்வு கூட ஏற்பட்டது.

ஆனால் இன்று! புத்தகக் கடைக்காரர்களும், தனிப்பட்ட நண்பர்களும், “சார்! சென்ற மாத தன்னம்பிக்கை இதழ் ஏதும் இருப்பு உள்ளதா?” என்று கேட்பதும், நான் “இல்லை” என்பதும் “தன்னம்பிக்கை”யில் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு மாத “தன்னம்பிக்கை இதழ்களில் ஒன்றை என் நூலாக இருப்புக்கு நான் எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம் சில நேரங்களில் அந்த இதழையும் யாராவது ஒரு நண்பர் கேட்பதுண்டு. செல்லுமிடமெல்லாம் எனக்கு ஒரு தனி மரியாதையையே தந்துள்ளது என்றால் மிகையாகாது.

“தன்னம்பிக்கை” இதழில் விற்பனையில் நான் பெற்ற வெற்றிக்கும் “தன்னம்பிக்கை”யும் அதை இன்றளவும் வளர்த்துக் கொண்டு வரும் அமரர் டாக்டர் இல.செ.க. அவர்களின் தன்னம்பிக்கையுமே காரணம். இவ்வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

ஜெபகுருமணி
ராஜபாளையம்
(தன்னம்பிக்கை முகவர்)

 

1 Comment

  1. Balasubramaniam says:

    தங்களுடைய தன்னம்பிக்கை என்னுடைய மன தளர்வில் எனக்கு ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

    நன்றி

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்