Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

ஹோட்டலிலே TIPS மட்டும் கொடுத்த ஒருத்தரைப் பற்றி போன மாசம் சொன்னேன். இந்த மாசமும் அதே ஹோட்டலிலே தொடங்குவோம்.

“குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்” அப்படின்னு ஹோட்டலிலே எழுதி வைச்சிருக்காங்க. நீங்களும் பல இடங்களிலே பார்த்திருப்பீங்க!

நான் பொதுவாச் சொல்றேன், நம்ம குறை, நம்ம நிறை, இரண்டும் நமக்குத் தெரிஞ்சிருந்தாலே போதும். ஒரு ஆளு, தனக்கு எவ்வளவு கடன் இருக்குன்னு தெரிஞ்சாதான், தன்னுடைய உண்மையான சொத்து விவரம் தெரியும்.

இன்னைக்கு பல பேருக்கும் தங்கள் குறை, நிறை இரண்டும் தெரியாத்துதான் குழப்பத்துக்கு காரணம். நான் பொதுவாச் சொல்றேன், நம்மகிட்டே இருக்கிற குறைகளைப் பார்த்துக்கிட்டே இருந்தா, ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். நிறைகளைப் பார்த்துகிட்டே இருந்தா, அலட்சியம் வரும்.

இரண்டையுமே தெரிஞ்சுகிட்டா, ஒரு நிதானம் வரும். எதைக் கூட்டணும், எதை குறைக்கணும்னு ஒரு தெளிவு வரும். இந்தத் தெளிவு யாருக்கு இருக்கோ, அவங்களுக்கு வெற்றிவரும்.

நான் பொதுவாச் சொல்றேன், “நான் எங்கேயும் தோற்க கூடாது” அப்படீன்னு ஆசைபட்டா தோல்விகள் தொடர்ந்து வரும். “எங்கே எல்லாத் தோத்திருக்கேன், எப்படித் தோல்வி வந்தது”ன்னு பொறுமையா பார்த்தா தோல்விகள் வராமல் தடுக்கலாம்.

நமது குறைகளை ரகசியமா வைச்சிட்டு நிறைகள் மட்டும் மத்தவங்க பேசனும்னு எதிர்பார்க்கவே கூடாது.

சமீபத்திலே ஒரு நாளிதழ் பள்ளியிறுதி தேர்வுக்கு வழி காட்டுகிற நிகழ்ச்சி ஒண்ணு நடத்தினாங்க. நானும் போயிருந்தேன். அதில, “தன்னம்பிக்கை” இணை ஆசிரியர் பேசிக்கிட்டுருந்தாரு. அப்ப “புத்திசாலி மாணவனுக்கும் சராசரி மாணவனுக்கும் என்ன வேறுபாடு?” அப்படீன்னு ஒரு கேள்வி கேட்டுட்டு அவரே பதிலும் சொன்னாரு.

“புத்திசாலி மாணவன் என்பவன் தான் புத்திசாலி என்பதைப் புரிந்து கொண்டவன். சராசரி மாணவன், தான் புத்திசாலி என்பதை இன்னும் புரிந்து கொள்ளாதவன்” அப்படீன்னாரு.

நான் பொதுவாச் சொல்றேன். நம்மை நாமே தெரிஞ்சு வைச்சுக்கிறதுதான் புத்திசாலித்தனம். இதைவிட்டுட்டு “என் குறைகள் என்னன்னு சொல்லுங்களேன்!” அப்படீன்னு பத்துப்பேர் கிட்டே கேட்டா, அவங்க கற்பனையில் இருந்தெல்லாம் கூட ஏதேதோ சொல்லிவிட்டுப் போயிடுவாங்க.

சில சம்பவங்களிலே நாம் எப்படி நடந்துக்கிறோம் அப்படீன்னு பார்த்தா நமக்கே சிரிப்பா வரும். சில நேரம் பேசிக்கிட்டே இருக்கிறபோது, “இது தப்பு! பாரு.. மூக்கு மேலே வந்திடுச்சு..” அப்படீன்னு கோபத்தையே நாம உத்துப் பார்க்கணும்.

இந்தக் கோபம் இருக்கே, அது ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டது. யாராவது உத்துப்பார்த்தா வெட்கப்பட்டுகிட்டு ஓடிப்போயிடும்.

இப்படி நம்மை நாமே கொஞ்சம் கொஞ்சமா சரி செய்துகிட்டு வந்தா, நம்ம குறைகள் குறையும். நிறைகள் நிறையும்.

நான் பொதுவாச்சொல்றேன். இப்படி சுருக்கமா சொல்றதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். போன மாசம் ஒரு வாசகர், “ஏன் சீக்கிரமா முடிச்சீட்டீங்க!” அப்படீன்னு கோபப்பட்டிருக்காரு.

எப்படி முடிப்பார்னு நினைக்க வைச்சா அது நமக்குக் குறை இல்லீங்களா…..

குறைகளை மட்டும் குறைத்தால் போதும் நிறைகள் எல்லாம் வளர் பிறை ஆகும்.

-தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்