Home » Articles » டாக்டர் கு. ஞானசம்பந்தம்

 
டாக்டர் கு. ஞானசம்பந்தம்


ஞனசம்பந்தம் கு
Author:

திரைப்படங்களில் ஒரே பாட்டில் பணக்காரனாக மாறும் கதாநாயகனைப் போல வரவேண்டும் என்று பலர் துடிக்கிறார்கள். இப்போது லட்சாதிபதிகள் ஆவது லட்சியம் இல்லை. கோடீஸ்வரன், குரோர்பதி இந்தக் கனவுகள்தான் அதிகம்.

தாமஸ் ஆல்வா எடினைப் ப்பற்றி அறிந்திருப்பீர்கள். மன்சார பல்பினை உருவாக்கி இருண்டு கிடந்த உலகத்தை ஒளிமயமாக்கிய மேதை.

மின்சார பல்பில் ஒளிவிடும் அந்தச் சிறு “டங்ஸ்டன்” இழையை இணைக்க அவர் 1300 முறை முயன்றார்.

முதலில் மூங்கில் இழை, நரம்பு, இப்படி ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி முடிவில் 1300 வது பொருளாக “டங்ஸ்டன்” இழையை இணைத்தார் பல்பு ஒளிவீசியது.

அவருடைய நண்பர் கேட்டார், “இத்தனை முறை நீங்கள் முயன்றது வீண் முயற்சி தானே?”

“இல்லை.. இல்லை 1299 பொருட்கள் மின்சாரத்தின் வேகத்தைத் தாங்கும் சக்தியற்ற பொருட்கள் எனக்கண்டுபிடித்தேன்” என்றார் எடிசன். தோல்வியும் வெற்றியை அடையும் வழிதான்.

சிலர் சிறு அவமானங்களைக்கூடத் தாங்காது மனமொடிந்து போய் வருந்திக்கொண்டிருப்பார்கள்.

தோல்வியை, அவமானத்தை, வெற்றியாக மாற்றமுடியுமா? முடியும்.

மதன் மோகன் மாளவியா என்னும் மிகச்சிறந்த அறிஞர் காசி மாநகரத்தல் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்குகான பொருளைப் பெற பல, ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார். பொருள் பெற்றார்.

காசியை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்றார் மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார்.

அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தான்.

சபைஏ ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. மாளவியா அந்தக் காலணியை கையில் எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி மன்னர் பிரானே” எனக் கூறி அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

வந்தவர், அரண்மனை வாசலில் ஒரு மேடையின் மீது ஏறி நின்று “பெரியோர்களே, காசி மாநகரத்துச் சீமான்களே, சீமாட்டிகளே இதோ காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி ஏலத்திற்கு விடப்போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம். எனச் சத்தமிட்டுக்கூவினார்.

பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர்.

இதைப்பார்த்த அரண்மனை அதிகாரி அவசரமாக உள்ளே ஓடி “அரசே உங்கள் காலணி ஏலம் போடப்படுகிறது. கால்பணம் அரைப்பணமாம். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதி மந்திரியை அழைத்தார்.

“ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள் என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். நிதி மந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது.

முடிவில் நிதி மந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச்செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா அவர்கள் “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக்கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச்சென்றார்.

“நினைத்துப் பாருங்கள்
முயன்றால் அவமானம் விமானம் ஆகலாம்”

– மீண்டும் அப்புறம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்