Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

என்னை அடிக்கடி முட்டாள் என்று என் முதலாளி சொல்கிறார். என் வீட்டில் யாராவது என்னை முட்டாள்தனமாகப் பேசுகிறாய் என்று சொன்னாலும் மனதிற்குள் வேதனையாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?
(எஸ். ரகு. வெள்ளக்கோவில்)

இது ஒரு சென்ஸிடிவ் மேட்டர்.

நம்மை யாராச்சும் முட்டாளுன்று சொன்னா அது நம்மை அடியோடு ஒண்ணுமல்லாதவனா நெனச்சுட்டாங்களோன்னு மனசுகுள்ள ஒரு ஆதங்கம் வந்துடுது.

பொதுவா இந்த “முட்டாள்” என்கிற வார்த்தையை யாராச்சும் சொன்னா அதை பெரிசா எடுத்துக்காதீங்க. அவரு ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசறாருன்னு நெனச்சுக்கங்க. இதுல இன்னொரு விசித்திரம் என்னான்னா பல சமயங்களில் சொல்ற ஆளே முட்டாளா இருப்பாரு.

சில சமயங்கள்ல நீங்க அப்படிச் சொல்றவங்ககிட்ட பொறுமையா பேசலாம். நீங்க செஞ்சது முற்றிலும் சரிதான்னு தெரிஞ்சா, அவருகிட்ட நிதானமா இங்க பாருங்க நான் எல்லாத்தையும் சரியாத்தானே செஞ்சேன் இதுல எந்தத் தப்புமே இல்லாதபோது ஏன் அப்படிச் சொல்றீங்க? எனக்கு மனசு வேதனையாகுதுன்னு உங்க ஃபீலிங்ஸை வெளிக்காட்டலாம்.

ஒரு வேளை நீங்க செஞ்சது தப்பாகவே இருந்துச்சுன்னா, அதைப்பத்தி பெருசா அலட்டிக்காம நான் ஒரு முட்டாள்தனம் செஞ்சுட்டேன்னு நீங்களே சொல்லிடுங்க. அவரும் கூலாயிருவாரு. எப்பவுமோ ஒரு தப்பை மத்தவங்க சுட்டிக்காட்டினா நமக்குக் கோபம் வரும். நாமே ஒத்துக்கிட்டா மத்தவங்களும் நம்மைப்பத்தி உயர்வா நெனப்பாங்க. நமக்கும் டென்ஷன் குறையும்.

இதுக்கு மேலேயும் ஒரு உயர்ந்த வழி இருக்கு. உங்க தன்னம்பிக்கை உறுதியா இருந்தா, மத்தவங்க சொல்றதை காதுல போட்டுக்காம, உங்க வேலையை நீங்கபாட்டுக்கு செஞ்சுகிட்டே இருக்கிறது. இதனால் உங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்ல. மத்தவங்களும் ஓரிரு தடவை உங்கள சொல்லிட்டு தானாகவே, தவறா சொல்றத நிறுத்திப்பாங்க.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்