Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

அடம்பிடிக்கும் பிள்ளை

அடம்பிடிப்பதில் மூன்று வகை:

முதலாவது, நியாயமான தேவைக்காக அடம்பிடிப்பதில் (பசியின் போது பாலுக்காக).

இரண்டாவது, தன் விருப்பத்திற்காக (நியாயமோ, அநியாயமோ! அடம்பிடித்தல் (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).

மூன்றாவது, அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது ஐஸ்கிரீமுக்காக அழுதல், டி.வி.யில் வரும் விளம்பரத்தைப் பார்த்து கெட்டதாக இருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்).

இம்மூன்றுக்குமுள்ள வித்தியாசத்தை பெற்றோர்கள் அவசியமாக உணர வேண்டும்.

முதலாவதான நியாயமான தேவைகளை மறுக்கவே கூடாது. பெற்றோருகளுக்கு இயலாத போதும் ஏதாவது ஒரு வகையில் கொடுத்து திருப்தியடையச் செய்ய வேண்டும்.

இரண்டாவது வகை அடம்பிடித்தலில் – பணதின் அருமையை புரிய வைக்க வேடும். குழந்தை கேட்பது நியாயமானதாக இருந்து அதை வாங்கித் தருவதானாலும் அதைப் பெறுவதற்காக பணம் எவ்வளவு? அதற்கு எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும் என்பதைச் சொல்ல்லாம்.

அல்லது அதை வாங்கித் தருவதனால்,அதற்கு சில வேலைகளை செய்யுமாறு தூண்டலாம். உதாரணத்திற்கு செடிகளுக்கு தண்ணீர் விடுதல், துணிகளை துவைத்தல், சமையலுக்கு உதவுதல் போன்றவைகளைச் செய்யச் சொல்லலாம்.

இதனால் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை புரியும். அதன் மூலம் அவர்களுக்கும் சுயமாக சம்பாதிக்கும் மன உணர்வு பெருகும்.

தம்மிடம் பணம் இருக்கிறதென்பதற்காக பிள்ளைகள் ஆசைப்படுவதையெல்லாம் வாங்கி தருகின்ற பெற்றோர்கள்தான் ஊதாரித்தனத்தை மறைமுகமாக கற்றுத் தருகிறார்கள்.

மூன்றாவது வகையான நியாயமில்லாதவற்றுக்கு அடம்பிடித்தலில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். பிள்ளை கேட்பதில் முற்றிலும் தவறானது என்ற முடிவடுத்து விட்டால் “வாங்க முடியாது” என்று தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.

உடனே அழுதல், சண்டையிடுதல், உருகுதல் போன்ற வேஷங்கள் நடைபெறும்.

அப்போதும் முடிவை மாற்றக்கூடாது. “அவை உனக்குக் கெடுதல் தரும்” என்பதை மட்டும் வலியுறுத்தலாம்.

சில நேரங்களில் சுற்றி உள்ள பிற மனிதர்களைக் கவரும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பெற்றோருக்கும் “சரி போனால் போகட்டும் விட்டு விடலாம்” என்ற மனநிலை வரும். ஆனால் அப்போதும் வளைந்து கொடுக்கக்கூடாது.

மறுப்புச் சொல்லிவிட்ட பிறகு அதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உறுதியில்லா விட்டால் தவறான விஷயங்களையும் அடம்பிடித்துச் சாதிக்கலாம் என்ற மன உணர்வு உருவாகிவிடும்.

இதைச் செய்யும்போது குழந்தைகள் மீது இரக்கம் இல்லாத கல் நெஞ்சமா? என்கிற அளவிற்கு சூழ்நிலை அமையும். இருப்பினும் அது பிள்ளையின் நன்மைக்கே என்பதால் மறுப்பிலிருந்து மாறக்கூடாது.

மேலும் குழந்தைகளுகு டி.வி., சினிமா, கம்ப்யூட்டர் மற்றும் விளம்பரங்களில் உள்ள குறைகளைச் சொல்ல வேண்டும்.

இறுதியாக பெற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும் போதெல்லாம் தவறாமல் எதையாவது வாங்கி வருவது போன்ற பழக்கங்களை மாற்ற வேண்டும். அப்பபழக்கத்தால் எப்போதும் எதையாவது எதிர்பார்க்கும் மன நிலை பிள்ளைகளுக்கு வந்துவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்