Home » Articles » இந்தியா 2020

 
இந்தியா 2020


admin
Author:

ஆருடம் சொல்கிறார் அப்துல்கலாம்

(“இந்தியா 2020 புதிய நூற்றாண்டுக்கான தொலைநோக்கு” என்கிற தலைப்பில் விஞ்ஞானி அப்துல்கலாம் மற்றும் இந்திய தொழில் கழக ஆலோசகர் திரு. Y.S. ராஜன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிற புத்தகம் பரபரப்பாக பேசப்படுகிறது. எதர்கால இந்தியா எப்படி இருக்கும்? இதோ அவர்களின் கணிப்புகளிலிருந்து சில தெறிப்புகளை “தன்னம்பிக்கை” வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.)

தற்போது ஆண்டுக்கு 1.8% வளர்ச்சி கண்டு வரும் மக்கள் தொகைப் பெருக்கம் 2020ல் 1.5% ஆகக்குறையும்.

1991ல் 52% என்று கணக்கிடப்பட்ட கல்வி அறிவு, 80% மாக உயரும்.

பொருளாதார நிலையிலும், சமூக உறவுகளிலும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மத்தியில் கூட்டுறவு வளரும்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்கிற நிலையினை நமது தேசம் எட்டிவிடும்.

1996ன் விலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது 2007 அல்லது 2008ல் இந்தியா வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த இலக்குகளை எட்ட சில அடிப்படை வளர்ச்சிகள் அவசியம். திறமை வாய்ந்த நம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களை இந்தியா சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நல வாழ்வு, சேவை சார்ந்த துறைகள், உற்பத்தி துறை போன்றவற்றில் நமக்கு இருக்கும் மனித வளம் மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

உணவு உற்பத்தி, உணவு மேம்பாடு, கணினி மென்பொருள் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் மனித வள மேம்பாட்டைக் கூட்டுதே மிக முக்கிய தேவையாகும்.

இந்த வளர்ச்சிகளை இந்தியா எட்டுவதாக இருக்கும் தடைகள் பற்றி பல்வேறு அறிஞர்களிடம் விவாதித்திருக்கிறேன். அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் இந்திய மனதின் குறைபாடுகள் இவைதான்.

1. அளவுக்கதிமான பொறுமை.
2. குறைவான ஒழுக்கம்
3. குறைவான எதிர்ப்புணர்ச்சி
4. வெளி நபர்களை எளிதில் ஏற்றுக்கொள்ளுதல்.
5. அதிகாரப் படிநிலைகளுக்கு அதிகம் கட்டுப்படுதல்.
6. புதிய அனுபவத்திற்கு தடையாக இருக்கும் தனிமனித பாதுகாப்பு உணர்வு.

இந்தியாவின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று அதன் மனித வளம்தான். பொதுவாக விரைவாக கற்றுக் கொள்கிற ஆற்றல் இந்தியர்களுக்கு அதிகம். அது மட்டுமின்றி போட்டி போட்டுக் கொண்டு முன்னேறும் ஆர்வமும், அதிகம், இந்த உத்வேகத்தைச் சரியான முறையில் நெறிப்படுத்தி அணைத்துச் செல்லக்கூடிய சக்திகள் இப்போதைக்கு இல்லை. இதுவே இப்போதைக்குத் தேவை.

“No Entry” (இதில் செல்ல அனுமதியில்லை) இந்தப் பலகையைப் பார்த்திருப்பீர்கள். இது விதி. ஆனால் அந்த வதியே 10-மணிக்கு தளர்த்தப்படுகிறது. இது விதி விலக்கு.

“வீடுகளுக்கு மின்சாரம்” என்பது விதி. இதுவே போர்க்காலங்களில் துண்டிக்கப்படுகிறது. இது விதி விலக்கு.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது நமது கலாச்சாரம், பண்பாடுகளின் விதி. உதாரணமாக கண்ணகியைக் கூறலாம். பாஞ்சாலி இதற்கு “விதி விலக்கு”.

எப்போது விதிகள் உருவாயினவோ அப்போதே விதி விலக்குகளும் உருவாகிவிட்டன. விதி விலக்குகளே விதிகளாகும்போதுதான் குழப்பம் வருகிறது. எதுவரை விதிகளை ஏற்பது?… எங்கே விதி விலக்கு காண்பது?

பொதுவாக விதிகள் மனிதன் ஒழுக்க நெறியுடனும், கட்டுப் பாட்டிற்குள் வாழவும், தவறுகள் செய்யாவண்ணம் இருக்கவும் அரசாலும், சமூக அமைப்பினாலும் ஏற்படுத்தப்படுகிறது.

மனிதனின் தேவைகள், சந்தர்ப்பங்களுக்காக விதிகள் சில இடங்களில், சில நேரங்களில் நெகிழ்ந்து விதி விலக்காகிறது. முக்கிய விதிகள் என்பவை மக்களுக்கு “பூ விலங்கு” போல; விதியை மீறி தவறு செய்தால் அது “இரும்பு விலங்காக” மாறுகிறது.

சட்டத்தின் விதிகளை முதலில் பார்ப்போம். சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பது விதி. ஆனால் திருடன் ஒருவன் 80 கி.மீட்டர் வேகத்தில் போகும்போது துரத்தும் காவலர் “நான் விதிகளை மதிப்பவன்” ஆகவே 40 கி.மீ. வேகத்திற்கு மேல் போகமாட்டேன் என்று சொல்வது பொருந்தாது. அவர் திருடனைப் பிடிப்பது சமுதாயத்திற்கு பொது நலன் தருவது. ஆனால் அவர் அதை மீறுவது விதிவிலக்கு.

இத்தகைய விதிகள், சாலைகளில் சிக்னல்கள், நடைபாதைவழி, மித வேகம், குட்டி குன்றுகளாய் இருக்கும் வேகத்தடைகள், போன்றவை அடங்கும்.

அப்புறம், நாம் உறவின் விதிகளைப் பார்க்கலாம். உறவுகள் ரத்தம் சம்பந்தப்பட்டவை. பாசவலையால் பிணைக்கப்பட்டவை. (மனிதர்கள் என்ன சிலந்தியா? வலை பின்ன! என நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது). மனதில் அரும்பும் அன்பினால் உறவுகள், பந்தங்கள், நட்புகள் அமைகிறது.

சிலசமயம் ரத்த சம்பந்தமில்லாத உறவுகளும் அமைகிறது. இவைகளுக்கு ஒவ்வொரு பெயர் சூட்டி அழைக்கிறோம். இது விதி. ஆனால் “காந்தி தாத்தா” “நேரு மாமா” போன்றவர்கள் மகளின் மனதில் பெற்றுள்ள மகத்தான இடம்தான் இப்படி எந்த உறவுகளும் இல்லாமலேயே சிறப்பான உறவுகளை இவர்கள் பெற்றுள்ளது விதி விலக்கு.

நன்மை செய்து, அல்லது புரட்சிகரமான நல்ல நிலையை அடைந்தவர்கள் மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விதி விலக்காகிறார்கள்.

தேவையற்ற செயல்களினால் மக்களுக்கு அல்லது சமுதாயத்திற்கு தீமை செய்து, துன்பங்கள் தந்து, சட்ட விதிகளை மீறுபவர்களும் விதியை விலக்கு செய்பவர்கள் ஆகிறார்கள். விலங்குக்கும் ஆளாகிறார்கள்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இடம்பெறும் விதி விலக்குகள் என தனியாக ஒருபட்டியலே இடலாம்.

“இங்கே குப்பைகளைக் கொட்டாதிர்கள்” எனும் அறிவிப்புப் பலகையை குப்பைகளாலேயே மூடியவர்கள்;

“இங்குபுகை பிடிக்கக்கூடாது” எனும் இடத்திலே அந்த அறிவிப்பே தெரியாதபடி புகை மண்டலம் செய்தவர்கள்.

அலுவலக நேரம் காலை10 மணி என்றால் சரியாக 10.30 மணிக்கு வரும் விதி விலக்கினர்களும் உண்டு. இவர்கள் வாழ்க்கையிலிருந்தே விலக்கப்பட வேண்டியவர்கள்.

இப்படிப்பட்ட விதிவிலக்கினர்கள் ஒரு சிலபேர் இருந்தாலும், விதிகளைச் சரியாகக் கடைபிடிப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் அல்லவா?

ஐயோ! என்ன விதியோ! எல்லாம் என் தலைவிதி என புலம்புபவர்களும் உண்டு.

விதி மனித வாழ்க்கையை முறைப்படுத்தும். விதிகளை மதித்தால், நமது தலைவிதியை நாமே எழுதலாம்.


Share
 

27 Comments

 1. R.Sivasakthi Saravanasundar says:

  please get me tamil articles in the web site about India 2020 to enable me to prepare a debate essay

  Thank you

 2. vijayan says:

  அப்துல்காலம் இஸ் கிரேட்.

 3. mano bala says:

  very useful msg,,,,,,,,,,,

 4. Poorna sangeetha nathen.S says:

  அந்த விதியையும் மதியால் வெல்லலாம் என்று நாம் இந்தியர்களுக்கு தெரியும் ஆனால் அதை புரிந்து கொண்டு செயல் படுவது தான் இவர்களிடம் இல்லை என்பது தான் வருந்த கூடிய விஷயம். “அப்துல் கலாம்” எழுதியது வெறும் புத்தகம் இல்லை நம் “எதிர்கால இந்தியா” வின் நடந்த உண்மைகளை முன்குட்டியே எழுதிய திறமை.

 5. V.Ratha says:

  Very Execlant Details

 6. VPJSJ says:

  Dr . A.P.J.Abdul Kalam is excellent . It’s very very super .

Leave a Reply to V.Ratha


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்