Home » Articles » “யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா

 
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா


admin
Author:

திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிருதம், சேலம் என்றால் தித்திக்கும் மாம்பழமும், கோவையென்றால் சிறுவாணித் தண்ணீரும் சீதோஷ்ண நிலையும் புகழ்பெற்றது. இந்த வகையில் மற்றொருவர் பிரபலமாகி வருகிறார். அவர்தான் கோவையைச் சேர்ந்த டாக்டர் கோபாலனந்தா.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி என்ற கிராமத்தில் 1953-ம் வருடம் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி அடைந்தபோது ஒரு வருடம் வீணாவதை விரும்பாத அவர் தந்தை பிபின் சந்திரபால் 1969-ல் ரிஷிகேஷத்திலுள்ள சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில் யோகாசன கலையைக் கற்க அனுப்பினார். இதன் பிறகு, கல்வியை தொடர்ந்து, முதுகலை பட்டமும், உடற்கல்வி முதுகலை பட்டப்படிப்பும் பயின்றார். இவர் யோகாவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

1978-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்தில் கைப்பந்து பயிற்சியாளராக பணியாற்றினார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் உத்திரவுப்படி கர்ணம் மல்லீஸ்வரிக்கு யோகப் பயிற்சி அளித்தவர். சிட்னிக்கு கர்ணம் மல்லீஸ்வரி கிளம்பும் முன் ஆறுமாத காலமாக இவரிடம் தளர்வு பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகிய பயிற்சிகள் பயின்றார். இதன் பலனாகவே, தான் பதக்கம் வென்றதாக கூறும் மல்லீஸ்வரி மற்ற வீரர்களும் தனி கவனம் செலுத்தினால் நல்ல பலனைப்பெறலாம் என்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் அனைத்து வீரர்களும் மண்ணைக் கவ்வ இந்திய மானத்தைக் காப்பாற்றியவர்தான் இரும்புப்பெண் கர்ணம் மல்லீஸ்வரி. இவர் எடையை மட்டும் தூக்கவில்லை, இந்தியாவின் கவுரவத்தையும் தூக்கி நிறுத்தியுள்ளார்.

மல்லீஸ்வரியின் வெற்றிக்கு காரணமான யோகப்பயிற்சியை அளித்த கோவை கோபாலனந்தா அவர்களை கவுரவிக்கும் பொருட்டு சர்தேச யோகா விளையாட்டு ஃபெடரேஷன், “யோக துரோனாச்சார்யா” என்ற விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்ணுக்கு யோகப் பயிற்சி அளித்ததற்காக யோக துரோனாச்சார்யார் விருது பெற்ற முதல் மனிதர் தமிழ் நாட்டைச் சார்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் பெருமையே!

மல்லீஸ்வரியைத் தவிர குத்துச் சண்டைவீரர் குருச் சரண்சிங், டிஸ்க்கோஸிங், தடகள வீராங்கனை பீனா மோள், தட்டு எரியும் வீராங்கனை நீலம்சிங், தடகள வீரர் பாம்ஜித்சிங், மற்றம் பளுதூக்கும் வீராங்கனைகள் குஞ்சுராணி, சாணு மற்றும் முத்து ஆகியோர்களுக்கும் இவர் பயற்சி அளித்துள்ளார்.

தங்கப்பதக்கங்களை வாங்கிக் குவித்த இந்தியாவின் பெருமைக்குரிய தங்கமங்கையான பி.டி. உஷா அவர்களுக்கும் யோகக்கலைப் பயிற்சி அளித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியதாகும்.

ஒன்பதாவது ஒலிம்பிக் யோகா விளையாட்டு உலகக்கோப்பையும், 7-வது சர்வதேச ஆர்ட்டிஸ்டிக் யோகா விளையாட்டு கோப்பைக்கான போட்டிகள் இந்தியாவில் முதன் முறையாக புது டில்லியில் நடைபெற்றது. இந்திய அணிக்கு கோபாலனந்தா மேலாளராக இருந்தார். இதில் உலகக் கோப்பையில் முதன் முறையாக இந்தியா வென்றது. சர்தேச யோகா விளையாட்டு சம்மேளனமும், உலக யோகா யூனியனும், உலக யோகா பல்கலைக்கழகமும் இவரை யோகா கல்வி பேராசிரியராக ஏற்றுக் கொண்டு அதற்கான டிப்ளமோ வழங்கி பாராட்டின.

கோபாலானந்தா அவர்கள் சர்வதேச யோகா நடுவராகவம், பயிற்சியாளராகவும் மற்றும் 2-12-2000 அன்று நடந்த ஆசியக் கோப்பை யாகா போட்டிக்கு தலைமை நடுவராக நியமிக்கப்ப்ட்டார். யோகக் கலைக்கும், இந்திய வீரர்களின் வெற்றிக்கும் பாடுபட்ட இவர் வாழ்க்கையில் நடந்து உண்மை சம்பவத்தைக் கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒரு முறை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தபொழுது இவருடைய தந்தை மரணமடைந்த செய்தி கிடைத்தது. அதையும்கூட பொருட்படுத்தாமல், சற்றும் மனம் கலங்காமல் எடுத்த காரியத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவது என்ற அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாக யோகப் பயிற்சி அளித்து அவர்களை வெற்றி பெறச் செய்து விட்டுதான் ஊர் திரும்பினார்.

இவரது யோகக் கலை வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இவரது வாழ்க்கைத்துணைவி மகாயோகினி குணசுந்தரி தேவி உள்ளார் என்பதும், இவரும் யோகாசனப்யிற்சி அளித்து வருகிறார் என்பதும், இவர் தமிழ்நாடு மாநில யோகாசன அமைப்பில் பொதுச் செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

பெங்ளூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற விவேகானந்தா கேந்திராவில் இவருடைய புதல்வி “டிப்ளமோ -இன்- யோகா” பயிற்சி பெற்று வருகிறார். இவரது குடும்பமே தங்களை யோகக்கலைக்கு அர்ப்பணித்துவிட்டது. மேலும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்காக யோகாசனப் போட்டிகள் நடத்தி “மகா-யோகி”, போட்டிகள் நடத்தி “மகா-யோகி” “மகா-யோகினி” என்ற பட்டமும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் நற்சான்றிதழும் கொடுத்து வருகிறார்.

1983-ல் “யோகக் காவலர்” 1993-ல் “யோக ஞானி”, 1998-ல் “யோகப் பேரறிஞர்” என்ற பட்டங்களைப்பெற்ற இவருக்கு சென்ற மாதம் (25-12-2000 அன்று) கோவை நாடாளுமன்ற உறுப்பினர் க. ரா. சுப்பையன் அவர்களால் “மகா யோகி என்ற பட்டம் கோவை கணபதி அரிமா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இவருடைய வாழ்க்கையின் லட்சியம்

“எல்லோருக்கும் யோகம்
எல்லோருக்கும் ஆரோக்கியம்” என்பதாகும்.

யோகாசனத்திற்கென்று இவருடைய வீட்டில் ராஜயோககணபதி கோவில் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

 

1 Comment

  1. jeyapal says:

    ungal vilasam vendum

Leave a Reply to jeyapal


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!