Home » Articles » மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)

 
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)


சூரியன்
Author:

நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். வலது கை முஷ்டியை மடக்கிச் சிறிது மேலே தூக்கி உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். உணர்வுடன் கலந்து சொல்லுங்கள். உறுதியுடன் சப்தமிட்டுச் சொல்லுங்கள்.

நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
நான் சாதனையாளன்!
நான் மகிழ்ச்சி மிக்கவன்!
நான் உற்சாகமானவன்!
நான் சுறுசுறுப்பானவன்!
நான் அன்பு மிக்கவன்!
நான் செயல் திறன் மிக்கவன்!
நான் அறிவு மிக்கவன்!
நான் விழிப்புர்வு மிக்கவன்!
என்னால் முடியும்!
முடியும்! முடியும்!

I can! I will !!

வெற்றி நிச்சயம்!

இந்த வரிகளை திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது, இவை உள் மனத்தில் ஆழமாகப் பதியும். ஒவ்வொரு வரிசையும் சொல்லும் பொழுதும் அதன் பொருளை உணர்ந்து உணர்வளவில் அவ்வாறே மாறிக் கலந்து சொல்ல வேண்டும்.

இந்தப் பயிற்சியை உள் மனதில் ஆமாகப் பதியவைக்கவும், மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்ளவும், கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுக.

அ) கண்ணாடிப் பயிற்சி:
(Mirror Technique)

கண்ணாடி முன் நின்று கொள்ளுங்கள். கண்ணாடியில் உங்களது கண்களை, முகத்தை நேருக்கு நேராகப் பாருங்கள். கை முஷ்டியை மடக்கி, மேற்கூறிய வரிகளை உணர்வுடன் உதட்டசைவுடன் சொல்லுங்கள். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு காலையிலும், மாலையிலும் ஓரிருமறை செய்துபாருங்கள். பதினோராவது நாள் நீங்கள் கண்ணீடியைப் பார்த்தாலே கண்ணாடி உங்கள் முகத்தை மட்டும் பிரதிபலிக்காது உங்கள் உணர்வுகளையும் பிரதிபலிக்கும்.

எப்பொழுது மனம் தளர்வாக இருந்தாலும் கண்ணாடியைப் பார்த்தாலே நீங்கள் சக்தி பெறுவீர்கள். முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

ஆ) இடது கை பயிற்சி:

உறுதி மொழிப் பயிற்சியில் மேலே கூறிய வரிகளை இடது கையால் எழுதிப்பாருங்கள். இடது கையினால் எழுதும்போது அது புதிய முயற்சியாய் இருப்பதால் மனம் முழுதும் எழுதுவதில் ஈடுபடும். அவாறு முழுகவனத்துடன் எழுதும் வரிகள் உள் மனதில் பதியும் நினைவில் நிற்கும். (இடது கையில் வழக்கமாக எழுதுபவர்கள் வலது கையால் எழுதவும்)

இ) நரம்பியல் மொழிப்பயிற்சி:
(Neuro Linguistic Programing Technique)

வலது கையை உங்கள் முகத்திற்கு எதிராக வைத்துக்கொள்ளுங்கள். வலது கை கட்டை விரல் நுனியால் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டுக்கொள்ளுங்கள். இப்பொழுது சொல்லுங்கள் “நான் தன்னம்பிக்கை உள்ளவன் என்று.”

அடுத்து கட்டை விரல் நுனியால் நடுவிரலைத்தொட்டுக் கொண்டு சொல்லுங்கள் ” நான் சக்தி மிக்கவன்” என்று

அடுத்து கட்டை விரலால் சுண்டு விரலை தொட்டுக் கொண்டு சொல்லுங்கள் “நான் சாதனையாளன்” என்று

அடுத்து கட்டை விராலால் சுண்டு விரலைத் தொட்டுக்கொண்டு சொல்லுங்கள் “என்னால் முடியும்” என்று. இந்தப் பயிற்சியை பத்து நாட்களுக்குத் தொடர்ந்து முடிந்த போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யுங்கள்.

பதினோறாவது நாள் கட்டை விரலால் ஆட்காட்டி விரல் நுணியைத் தொட்டாலே நான் தன்னம்பிக்கை உள்ளவன் என்ற உணர்வு ஏற்படும்.

இப்படி ஒவ்வொரு விரலாகத் தொடும்பொழுது எந்த விரலுக்கு எந்தச் செய்தியைக்கொடுத்தோமோ அந்த உணர்வு ஏற்படும்.

மனம் பிரச்னைகளில், சிக்கலில் மாட்டித் தவிக்கும்பொழுது, மனக் கலக்கமும், குழப்பமும் ஏற்படும்பொழுது, என்ன செய்யப்பபோகிறோமோ என்ற பயம் ஏற்படும் பொழுதும் விரல் நுணிகளைத் தொட்டால் உங்களுத் தன்னம்பிக்கையும் சக்தியும் ஏற்பட்டு அந்த பிரச்சனையை மன தைரியத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றல் ஏற்படும்.

அதேபோல் புதிய இடங்களுக்குச் செல்லும்பொழுதும், புதிய மனிதர்களைச் சந்திக்கும்போதும் ஏற்படும் கூச்சத்தை, தயக்கத்தைப் போக்கிக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.

பலருக்கு மேடையில் சென்று பேசுவது என்றாலே ஒருவித பயமும் தயக்கமும் தோன்றும், இதைப்போக்க மேடைக்குச் செல்லும் முன்பு இந்தப் பயிற்சியை ஒருசில முறை செய்து கொண்டால் நீங்கள் மேடைக்கு தைரியமாகச் சென்று பேச முடியும். அதேபோல் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கூட தடுமாற்றமோ தயக்கமோ ஏற்பட்டால் விரல் நுனிகளைத் தொட்டுக்கொண்டாலே போதும். நீங்கள் தைரியமடைவீர்கள்.

மேற்கூறிய பயிற்சிகளை அடிக்கடி செய்து வரும்பொழுது நல்ல தன்னம்பிக்கைப் பதிவுகள் ஏற்படும். பழைய தவறான பதிவுகளை ஆற்றல் இழக்கச் செய்துவிடும்.

உங்களிடம் உடன்பாட்டுப் பதிவுகளும் எதிர்மறைப் பதிவுகளும் எவ்வாறு உருவாயின? ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். சிறிய வயதில் ஒருசில ஆசிரியர்களோ, பெரியவர்களோ அல்லது பெற்றோர்களோ “நீ ஒரு முட்டாள்? உனக்கு என்ன சொன்னாலும் புரியாது. நீ இவ்வாறு தவறுதான் செய்வாய். உனக்கு திறமை குறைவு. நீ உருப்பட மாட்டாய் என்று சில சமயங்களில் குறை சொல்லி இருப்பார்கள். இந்த கண்ணோட்டத்தில் உங்களை மோசமாய் நடத்தி இருப்பார்கள். இதனால் உங்களால் முடியாது என்றவொரு எதிர்மறைப் பதிவு ஏற்பட்டிருக்கலாம். இது ஒரு காரணம்.

சில செயல்களுக்கு நீங்கள் முயற்சி செய்து தோற்றிருக்கலாம். அந்தத் தோல்வியினால் உங்களை பற்றிய நீங்களே தாழ்வாக ஒரு பதிவு உருவாக்கி இருக்கலாம்.

ஒரு சில செயல்களை நீங்கள் முயற்சி செய்யாமலே கூட உங்கள் உள் திறமைகளை தவறாக எடை போட்டுக்கொண்டு நீங்களே தவிர்த்திருக்கலாம். (முயற்சி செய்தால்தானே திறமை வெளிவரும்?) இப்படி எந்த வகையில் எதிர்மறைப் ஏற்பட்டு இருந்தாலும் அவற்றை உறுதிமொழி பயிற்சிமூலம் ஆற்றல் இழக்கச் செய்து போக்கிவிடலாம்.

 

1 Comment

  1. Karthikeyan.B says:

    Dear sir, Thanks for this article.I have a talent but i think very doubr about my talent, knowledge. I hope this article will give me lot of confidence. bye…

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!