Home » Articles » விட்டு விடுதலையாவோம்!

 
விட்டு விடுதலையாவோம்!


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “விட்டு விடுதலையாவோம்” என்னும் முன்னேறத்துடிப்போருக்கான வழிகாட்டும் மெகா பயிலரங்கின் நான்காம் நிகழ்ச்சி 24-12-2000 அன்று கோவை மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தன்னம்பிக்கை இதழின் ஆசிரியர் திரு. க. கலைக்கண்ணன் தனது வரவேற்புரையில் “தனி மனித சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்ககவே டாக்டர். இல.செ.க. இந்த இதழினைத் தொடங்கினார். அவரது எண்ண வலிமையே இதழ்தொடர்ந்து வருவதற்குக் காரணம். அவரது முயற்சி வெற்றிபெற காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

அதைப்போலவே இந்த நிகழ்ச்சியினைத்தொடர்ந்து நடத்துவதன் மூலம் இளைஞர்களிடன் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடலின் சீனியர் வைஸ் பிரெஸிடென்ட் திரு. அனந்த பத்மநாபன் தனது தலைமை உரையில் நாம் செய்கிற எல்லா செயல்களுமே, அது தொழிலாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் உரிய பலன் தருபவையாக இருக்க வேண்டும். வாய்ப்புக்கள் கிடைக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்தி நம் திறமைகளை வெளிப்படுத்தத்தெரிய வேண்டும். கடினமான உழைப்பு மட்டுமே வெற்றியைத் தந்து விடுவதில்லை. திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் தக்க சமயத்தில் நம் திறமையை வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதும் வெற்றிக்கு உதவும். எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு முறையான வழிமுறையில் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

திரு. ரமேஷ் பிரபா தனது உரையில், “தாய்மொழியில் படிப்பதால் சாதிக்க முடியாது என்று எண்ணுவது சரியல்ல. மொழி உங்கள் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் தடை கிடையாது. மொழி வேறு. அறிவு வேறு என்பதைப் புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கடின உழைப்பு மட்டும் வெற்றியைத் தராது. உங்கள் உழைப்பு சரியான பாதையில் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். நம்முடைய சிஸ்டம் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள். சிஸ்டம் மீது அவநம்பிக்கை மாறினாலே வாழ்க்கைமேல் ஒரு பிடிப்பு ஏற்படும்.

அரசாங்க வேலைதான் வேண்டுமென்ற மனநிலை இளைஞர்களிடம் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்த மனநிலை பெற்றோருக்கும் வரவேண்டும். வேலை உத்திரவாதம் என்பது மேலும் உயர்வதற்கு தடைதான். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வேலை உத்திரவாதம் வேண்டம் என்று கேட்க மாட்டார்கள்.

சுயதொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் எல்லோரும் செய்யக்கூடிய பொருளை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் புது முயற்சியில் இறங்குவதுதான் நல்லது.

கிட்டத்தட்ட நாலாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ள விளம்பரத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அந்தத்துறையில் இளைஞர்கள் ஈடுபட்டால் வெற்றி பெறலாம்” என்றார்.

திரு. மாலன் அவர்கள் தனது உரையில் “உலகமெங்கும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் இளைஞர்கள்தான். இளைஞர்களை முன்னிருத்த வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு தலைமுறை இப்போது உள்ளது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற தாகம் உள்ள இளைஞர்கள்தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் நம்மை எப்படி பார்க்கிறது. நாம் இந்த உலகத்தை எப்படிப்பார்க்கிறோம் என்பதுதான் நமது வெற்றிக்கெல்லாம் அடிப்படை.

ஈகோ, பேராசை, சுயமரியாதையின்மை, திட்டமிடுதலில் இருக்கிற தவறுகள் ஆகியவைதான் ஒருமனிதன் வெற்றி பெறாமல் இருப்பதற்கான காரணங்கள்.

தன்னால் முடியும் என்று நம்புவது தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை இருக்கும் போது எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவதற்கு தைரியம் இருக்கும். இது வெற்றியைத் தரும். தன்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம். ஆணவம் இருக்கும்போது அலட்சியம்தான் இருக்கும். இது தோல்விக்கு வழி வகுக்கும். எனவே தன்னம்பிக்கை பெறுதலே வெற்றிக்கு அடிப்படை” என்றார்.

தெளிவான முடிவு + இடைவிடாத முயற்சி + கடின உழைப்பு = சாதனை. இப்போது ஒரு சாதனையாளரை மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள். இந்த பண்புகள் அவரிடம் இருப்பதைக் காணலாம். பண்புகள் என்பது பிறவிக் குணமல்ல. நாமாக வளர்த்துக் கொள்வது. நம்மை வளர்த்துக்கொள்ள, முன்னேற, இந்த மூன்றே சொற்கள் போதும். சாதனைகளை நிகழ்த்தக்கூடத்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!