Home » Articles » செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்

 
செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்


ஜெயச்சந்திரன்
Author:

நீங்கள் வறுமையில் வாட வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் இல்லை. எண்ணிலா இயற்கை வளங்களை இப்பூமியில் உள்ளடக்கிய இறைவன் தன் குழந்தைகளாகிய மனிதர்கள் வளமாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறான்.

ஆனால், மனிதர்கள் தம் எதிர்மறை எண்ணகளால் தமக்குத்தாமே வறுமையைத் தேடிக் கொள்கின்றனர். ஆங்கிலக் கவிஞன் என்லே கூறியது போன்று “என் தலைவிதியை நிர்ணயிக்கும் எஜமான் நானே; வாழ்க்கைக் கப்பலை செலுதும் தளபதி நானே” என்றதற்கிணங்க நாம் விரும்பாத காரணம்.

நீங்கள் வளமையைத்தான் விரும்புகிறீர்கள்; செல்வம் சேர்க்க ஆசைப்படுகிறீர்கள். ஆனால், எண்ணத்தால் எதிர் திசையில் பயணம் செய்கிறீர்கள்.

உங்கள் சிந்தனை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு நிர்ணயிக்கும்? விரும்பும் திசை நோக்கி எண்ணத்தால் பயணம் செய்வது எவ்வாறு?

உங்கள் வாழ்க்கையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சிகரமான நாளை இப்போது நினைக்கிறீர்கள்.

நீங்கள் அணிந்திருந்த அழகான ஆடைகளையும், உங்கள் உறவினர் நண்பர்களுடன் ஆனந்தமாகப் பேசி மகிழ்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறீர்கள்.

அது போன்றே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தோல்வியனால் நீங்கள் கவலையில் மூழ்கியதும், அதனால் அவமானப்பட்டு, செயலற்றுப் போய் வீட்டில் முடங்கிப் போனதையும் மீண்டும் எண்ணிப் பார்க்கிறீர்கள்.

நினைவு கூர்தல், எண்ணிப்பார்த்தல் என்று எதைக் கூறுகிறோம்? என்றோ நடந்த நிகழ்வுகளை மீண்டும் சித்திரமாக, தொடர் சித்திரமாக மனதில் காண்பதையே சிந்தனை அல்லது எண்ணம் என்று கூறுகிறோம்.

நிகழ்ந்ததை மட்டுமன்று; என்ன நிகழவேண்டும் என்று விரும்புகின்றோமோ, அதையும் மனச்சித்திரமாக நம்மால் காண முடியும்.

தொடர்ந்து எதைப்பற்றியும் சிந்திக்கிறோமோ அது நம் மனப்பான்மையாக மாறிவிடுகிறது. நம்மிடம் என்ன மனப்பான்மை அமைந்துள்ளதோ அதுவே நம் சூழ்நிலையை உருவாக்குகிறது.

தோல்வியைப் பற்றித் தொடர்ந்து மனச்சித்திரம் உருவாக்கினால் அதுவே பெருகும். அவமானத்தைப பற்றியே அதிகம் எண்ணினால் அவமான நிகழ்வுகள் அதிகரிக்கும். நட்டத்தைப்பற்றிய நிகழ்வுகள் நட்டத்தைப் பல மடங்கு பெருக்கிவிடும்.

செல்வம் உங்களைத் தேடி வந்து சேர்ந்திட நீங்கள் சிந்தனையைச் சீரமைக்க வேண்டும். அதாவது முதலில் கடந்த கால மனக்கதவைச் சாத்திவிடுங்கள். இனி நடப்பவையெல்லாம் நல்லவையே என்று நீங்களாக முயன்று உங்கள் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டும்.

எப்படி மாற்றி அமைப்பது எப்படிச்சீரமைப்பது?

நீங்கள் நல்ல உடல் நலனுடன், மலர்ந்த முகத்துடன் தொழிலில், வணிகத்தில் ஈடுபடுவது போலவும், உற்பத்தி செய்கிற அல்லது விற்கிற பொருளை மக்கள் போட்டி போட்டு வாங்குவது போன்றும், உங்கள் தோற்றமும், உடையும், கடையும் மிடுக்காக இருப்பது போன்றும், மாளிகையில் உங்கள் குடும்பம் குடியிஉப்பது போன்றும், வசதியான விலையுயர்ந்த வாகனங்களில் நீங்கள் பயணம் செய்வதுபோன்றும், உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காகப் பகிர்ந்து கொடுத்து, மற்றவர் உங்களை வாழ்த்துவது போன்றும் மனச்சித்திரத்தை நீங்களே உருவாக்கி, கண்களை மூடி, திரைப்படம் போன்று அடிக்கடி ஓடவிட வேண்டும்.

வெற்றி, இலாபம், மகிழ்ச்சி போன்ற காட்சிகளைக் கற்பனையில் தொடர்ந்து காண்பது வெற்றி மனப்பான்மையை உருவாக்கும். வெற்றி மனப்பான்மை போதுமான அளவுக்கு ஆழ்மனதில் பதியும் போதும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

சிந்திப்பதற்கென்று தினமும் நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒதுக்கிய நேரத்தில் கண்களை மூடி கவனத்தை உங்கள் நடவடிக்கைகளில் குவிக்க வேண்டும். இதுவே அகநோக்குச் சிந்தனை.

ஒரு பகல் முழுவதும் நீங்கள் நினைத்த எண்ணங்கள், ஏசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் அனைத்தையும் ஆராய்ந்து பரிசீலிக்க வேண்டும்.

எண்ணம், பேச்சு, செயல்களில் ஆக்கப்பூர்வமானவை எவை? என்று கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

தன்னலம் உடையதாய் அகத்திற்கு மாறான வகையில், நாட்டின் சட்ட திட்டங்களை ஏமாற்றும் முறையில் உங்கள் எண்ணமும், பேச்சும், செயலும் அமைந்தால் நீங்கள் ஒரு எதிர்மறை மனிதர்.

இதை வைத்து நீங்கள் புற நோக்குச் சிந்தனை உடையவர் என்பதை உணரலாம். மாறாக உங்களைப் பற்றிய சுயபரிசோதனையில், அகநோக்குச் சிந்தனையில் நீங்கள் நாள்தோறும் ஈடுபடும்போது உங்கள் குறைகளையும், பலவீனங்களையும் நீங்கள் அடையாளங்கண்டு நீக்க முடியும்.

அதுபோன்றே தேவையான நல்ல குணங்களை எவை? திறன்கள் எவை? என்று கண்டுபிடித்து அவற்றை நீங்களே உங்ககுள் கொண்டுவர முடியும்.

புறநோக்குச் சிந்தனை உடையவர் பிறர் மீது பொறாமை கொள்வார். பழிபோடுவார். பிறரை விமர்சிப்பார், இறைவனையும் சபிப்பார்.

அகநோக்குச் சிந்தனை உடையவர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை உணர்ந்து தன்னையும், சீரமைத்து, தன் சூழ்நிலையையும் சீரமைத்து வெற்றிமேல் வெற்ற பெறவேண்டும்.

அகநோக்குச் சிந்தனைக்கு மாறும்போது உண்மை, நேர்மை, அன்பு, மனிதநேயம், உற்சாகம், தைரியம், துணிவு போன்ற ஆக்க குணங்களைப் பெருவீர்கள்.

வறுமயை விரட்ட நான் என்ன செய்ய வேண்டும்? என்ன தொழில் செய்ய வேண்டும்? எதை உற்பத்தி செய்யவேண்டும்? எப்படி விற்பனை செய்யவேண்டும்? ஆழ் மனதிடம் கேளுங்கள். மீண்டும் மீண்டும் கேளுங்கள். கொடுக்கப்படும்.

புறநோக்குச் சிந்தனை உடையவர் தன் முன்னேற்றத்திற்குப் பிறரே தடையாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனித உறவுகளைக் கோணலாக்கி மதிப்பிழந்து போவதைக் காணுங்கள்.

ஆனால் அகநோக்குச் சிந்தனை மூலம் நீங்கள் ஆழ்மனதிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவீர்கள். பிறகு அறிவுரைக்கும் ஆலோசனைகளுக்கும் எவரையும் தேடிச்செல்ல மாட்டீர்கள்.

அகநோக்குச் சிந்தனைகள் உடலிலும், உள்ளத்திலும் பக்குவத்தை ஏற்பட்டு உங்களை அமைதியும், அடக்கமும் உள்ள மனிதராக மாற்றிவிடும். சிறந்த பண்பாளர் என்று மற்றவர் உங்களை மதிக்கத் தொடங்குவர்.

அது மட்டுமன்று, உங்களுக்கு எதிராக, பாதகமாக தோன்றிய உங்கள் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். நீங்கள் விரும்பிய செல்வம் உங்களைநோக்கி ஈர்க்கப்படும். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

நீங்கள் செல்வத்தைத் தேடி செல்லும் நிலை மாறி, செல்வம் உங்களைத் தேடிவரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!