Home » Articles » வாழ்க்கைக்குள் வா

 
வாழ்க்கைக்குள் வா


சிவக்குமார் ம
Author:

தென்றல், புயல்
சுவாசிக்க பழகு

பனிமலை, எரிமலை
வசிக்கப்பழகு

இடம், பொருள், ஏவல்
பேசத் தெரிந்து கொள்

வெற்றி, தோல்வி
விலாசம் புரிந்துகொள்

இன்பம், துன்பம்
துல்லியமாய் அளவிடு
எதுவந்தாலும்
புன்னகை பயரிடு

கோபம், சோம்பல்
விதியின் சாபம்
இரண்டையும் அழித்திடு
வாழ்கை லாபம்

அனுபவம வளர்த்து
இதயம் துலக்கு
எப்போதும் அணையாது
வாழ்க்கையின் லாபம்

இதுவரை வாழ்ந்ததை
எழுதிப் பார்த்து
பிழைகளை அடித்திடு
உனக்குள் உள்ள அரக்கனை பலியிடு.

உனக்குள் உன்னை
உயர்த்திக் கொள்
உயர்ந்தவரிடத்தில்
பணிந்து நில்

ஆயுதம் விட்டு
அறிவைத் தீட்டு
சாவயின்றி திறக்கும்
வாழ்க்கைப் பூட்டு

இறுதிவரை
நம்பிக்கை வைத்திடு
நிலவில் உனக்கும்
இடமுண்டு.

இறுகிய மனதை உருக்கு
வாழ்க்கை நதியில்
ஞானம் பருகு

மரணம் வந்தால்
வாழ்கை பூஜஃஜியம்
அதுவரை உலகம்
உனது ராஜ்ஜியம்

ஆசை அடக்கு
வாழ்வின் தீர்ப்பில்
வெற்றி உனக்கு

ரத்தம் கண்ணீர்
இரண்டையும் நிறுத்து
இரத்தமில்லா பூமியை உடுத்து

உயர்ந்த லட்சியம்
வெற்றி நிச்சயம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!