Home » Articles » பொதுவாச்சொல்றேன்

 
பொதுவாச்சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

“அய்யய்யோ! இப்ப என்ன பன்றதுன்னு தெரியலையே!” இந்தக் குழப்பம் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படறதுதான். வெகுபேர் அங்கேயே எடுத்த வேலைலைய விட்டுட்டு சட்டுன்னு விலகிடுவாங்க. இல்லாதபோது, பிரச்சனையை எதிர்கொள்ள முடியாம நொறுங்கிடுவாங்க.

நான் பொதுவாச் சொல்றேன் எல்லா சிக்கலுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு ஆள் இருக்காரு, என்ன… அவரு ரொம்பமெதுவாப் பேசறதாலே நம்ம காதுக்கு அது கேக்காது. எப்ப பிரச்சசனை ஏற்பட்டாலும், அவரு சொல்றதைக் கொஞ்சம் கூர்ந்து கவனமா கேட்ட எது தீர்வுன்னு தெளிவா காதில விழும். யார் அவரு? எங்கே இருக்காரு? அப்படின்னு கேட்கறீங்களா?

அவருக்குத்தான் உள் மனசு அப்படீன்னு பேரு. பெரும்பாலான நேரங்களிலே அவர் குரல் கொடுப்பார். அலட்சியப்படுத்தினால் அடங்கிடுவார். ரொம்ப ரோசக்கார மனுசன் பார்த்திக்கிடுங்க! நான் பொதுவாச் சொல்றேன், சில அசம்பாவதங்கள் நடக்கறதுக்கு முன்னாலேயே என்னமோ இன்னைக்கு மனசே சரியில்லை அப்படீன்னு நிறைய பேர் சொல்லியிருக்கலாம். இல்லேன்னா நாம கூட சொல்லியிருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே ஆழ்ந்து பார்த்து, அந்தப் பயிற்சியை வளர்த்துக்கிட்டா, சன்னமா ஒலிக்கிற உள்மனக் குரல் சத்தமா கேட்கும். அது காட்டற வழியிலே போகத் தொடங்கினா சிக்கல்கள் சீக்கிரமா தீரும்.

சிலந்தி, வீடுகட்டி வாழலாம்னு தைரியமா இருக்கு. அதுக்கு எந்த கான்டிராக்ட்ரையும் தெரியாது. ஒரு சுவரோரம் கிடைச்சாக்கூட சுத்தி வலை பின்னி சௌகரியாமக் குடியேறுது சிலந்தி.

நமக்குள் இருக்கிற உள்மனம் அப்படீங்கற நூலிழை நல்லது செய்யக் காத்திருக்கு. நாமதான் அதை மதிக்கறதில்லை. நான் பொதுவாச் சொல்றேன் ஒரு சிக்கல் ஏற்படறபோது பதறாம கலங்காம அமைதியா உட்கார்ந்து யோசிச்சா, பளிச்சுன்னு ஒரு எண்ணம் வரும். அதை உதாசினப்படுத்தற நடைமுறைப் படுத்தினா சிக்கல் தானாகவே தீரும்.

ஒரு தொழிலதிபர் இருந்தார். தொழிலிலே எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டது. கொஞ்சம் பதட்டமா இருந்தது என்ன செய்யறதுன்னு யோசிச்சாரு. நல்ல பழகி வந்தவர்கள் பூரா விலகிப் போயிட்டாங்க. சொந்த ஊரிலே ஒன்னு விட்ட மாமா பையன் ஒருத்தரைக் கேட்டா என்னன்னு யோசிச்சாரு. அவரு கிராமத்திலே இருக்கிற விவசாயி. அவர்கிட்டே பணம் இருக்காதுன்னு எண்ணம் வந்தது. கூடவே “கேட்டுத்தான் பார்க்கலாமென்றும்” தோணிச்சு. அவரும் தன்கிட்ட பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு. ஆனா அதோட விட்டுவிடலை. தன் நிலங்களுடைய பத்திரத்தைக்கொடுத்து, “இதன் பேரிலே கடன் வாங்கிக்கோ”ன்னு நம்பிக்கையா கொடுத்தாரு.

இந்த தொழிலதிபரும் மெதுவா முன்னேறி பழைய நிலைக்கு உயர்ந்திட்டாரு. கிராமத்துக்காரர்கிட்டே போய் உதவி கேட்கறதான்னு நினைச்சிருந்தா இழப்பு அவருக்குத்தான்.

நான் பொதுவாச் சொல்றேன். நெருக்கடியா மேகங்கள் கூடி புழுக்கமா இருந்தா கொஞ்ச நேரத்திலே மழை வர்ற மாதிரி, ஏகப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலேதான் அதுக்கான தீர்வும் மறைஞ்சு கிடக்கும். நம்மைவிட நமக்கு வேண்டியவங்க யாரும் கிடையாது. அப்ப நமக்கு வேண்டிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் நமக்குள்ளே இருந்தே தான் வெளிவரணும்.

உள்ளுணர்வை சரியாப் புரிஞ்சுட்டவங்க வெளியே யார்கிட்டேயும் அட்வைஸ் கேட்டுப் போகமாட்டாங்க. அதேமாதிரி, மத்தவங்க சொல்லுகிற அறிவுரையும் நம்மை ஒரு அளவுக்கு மேலே காப்பாத்தாது. கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் ரொம்ப தூரம் வராது. அப்படீன்னு ஒரு கிராமத்துப் பழமொழியே உண்டு.

நான் பொதுவாச்சொல்றேன். அதாவது செலவு வந்தா சட்டைப் பைக்குள்ளே கை அனிச்சையா தேடப் பார்க்குது. சில்லறை தேவைன்னா பழைய பேன்ட் பாக்கெட், அலமாரி, டிரஸ்ஸிங் டேபிள் எங்கெல்லாமோ தேடிப்பார்க்கத்தோணுது. அதே மாதிரி ஏதாவது குழப்பம் வந்தா அதுக்கு என்ன தீர்வுன்னு நமக்குள்ளேயே தேடிப் பார்க்கறதுதான் புத்திசாலித்தனம்.

எப்ப பிரச்சனை நமக்குள்ளே இருந்து வந்ததோ அப்ப அதுக்கு முடிவும் நமக்குள்ளே இருந்தானே வரணும்! இல்லீங்களா!

நமக்குள் தெறிக்கும் மின்னல்கள் நாளைய வாழ்வின் ஜன்னல்கள்

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!