Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


admin
Author:

மனசுவிட்டுப் பேசுங்க…

ஒரு செயலை செய்யும் முன் அதை நம்மால் செய்ய முடியுமா? முடியாதா என்ற கவலைகள் தோன்றுகின்றன. அடுத்து அப்படிச் செய்வதால் வரும் பிரச்சனைகளை எப்படிச்சமாளிப்பது? சரியாகச் செய்யமுடியாவிட்டால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்ற பயம் தோன்றுகிறது. இதனைச் சரி செய்ய வழி என்ன?

(ஆர். சந்திரன். கணியூர்)

ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் சில அடிப்படைகளைக் கையாள வேண்டும். அத்துடன் பிரச்சனைகளின் போதும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலில் குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும்? என்பதைப் பார்ப்போம்.

ஒன்று, என்ன குறிக்கோள் என்பதில் தெளிவு (Specific) வேண்டும். பணம் என்றால் எவ்வளவு? வீடு என்றால் எத்தனை சதுர அடி? போன்ற தெளிவு வேண்டும்.

இரண்டு, எவ்வளவு காலத்தில் எவ்வளவு அடைவது என்ற அளவுகள் (measurable) வேண்டும்.

மூன்று, அது உங்களால் அடையக்கூடியதாக (Achievable) இருக்க வேண்டும்.

நான்கு, அது நடைமுறைக்குச் சாத்தியமானதாக (Realistic) இருத்தல் வேண்டும்.

ஐந்து, அதை ஆரம்பிக்கும் நாள், முடிக்கும் நாள் (Time bound) போன்றவற்றை வரையறுக்க வேண்டும்.

இதைத்தான் Your goal should be smart என்பார்கள்.

இப்படி, குறிக்கோளைச் சரியாகத் தீர்மானித்து செயல்படும் போது வரும் பிரச்சனைகளை சரியாக அணுக வேண்டும்.

அடுத்தாக பிரச்சனைகளை அணுகுவது பற்றி பார்ப்போம்.

முதலில், பிரச்சனை என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது, அந்த பிரச்சனை தொடர்பான எல்லா விஷயங்களையும் விசாரியுங்கள்.

மூன்றாவது, அதிலிருந்து ஆராய்ந்து அதற்குத் தீர்வு என்ன என்பதை உங்களை நீங்களே கேளுங்கள். நீங்கள் கண்டுள்ள தீர்வின் நன்மைகளைச் சிந்தியுங்கள்.

நான்காவது, எந்தெந்த முடிவினால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை எழுதுங்கள்.

ஐந்தாவது, அந்த முடிவுகளில் எது சிறந்ததோ, அதை தீர்மானித்து செயல்படுத்துங்கள்.

இப்படிச் செயல்டும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் வேண்டாம். உங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தேவைபட்டால் அவர்களும் ஏற்கும் வகையில் சுமூகமாக சொல்லி விடுங்கள். நிச்சயம் வெற்றியே.


Share
 

1 Comment

  1. pandian says:

    supper nanba

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!