Home » Articles » நம் கையில் நம்பிக்கை

 
நம் கையில் நம்பிக்கை


முத்தையா ம
Author:

வானம் அளக்கிற கானப் பறவையின்
வெற்றிச் சிறகுகள் விரியட்டுமே – ஒரு
ஞானம் பிறக்கிற வேளை இதுவென
நான்கு திசைகளும் விடியட்டுமே!

காலம் எழுதிய மூல விடுகதைக்
கேள்வி நமக்கினிப் புரியட்டுமே – விரி
நீலப் பரப்பெனும் வான முகப்பில் நம்
நேயக் கவிதைகள் ஒளிரட்டுமே!

கேட்டை ஒழித்தொரு பாட்டை வகுத்திடும்
கொள்கை முழக்கங்கள் வெல்லட்டுமே – மின்னல்
சாட்டை சொடுக்கிடக் கேட்கும் இடிகுரல்
சத்திய சாட்சிகள் சொல்லட்டுமே!

தோளை உயர்த்திடும் காளை உழைப்பினில்
தோல்வி பொடிப்பொடி யாகட்டுமே – “வரும்
நாளை வகுப்பதும் வாழ்வை ஜெயிப்பதும்
நாங்கள்” எனும் குரல் கேட்கட்டுமே!

காற்றின் பிடரியைக் கையில் பிடித்ததில்
ஏற்றம் பழகிடு வாலிபனே – அட
நேற்றின் பயங்களைத் தூக்கியெறிந்திடு
நம்பிக்கை உள்ளது கைவசமே!

வெற்றி நமக்கெனக் கொட்டி வரும்படை
வேகத்தடைகளைத் தாண்டிடுமே – முன்னர்
பெற்ற அனுபவச் சிப்பி திறந்திடு…
முத்துக்கள் ஆயிரம் ஆயிரமே!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!