Home » Articles » விமர்சனங்களை விமரிசியுங்கள்

 
விமர்சனங்களை விமரிசியுங்கள்


கௌசல்யா பொன்
Author:

“தம்பி! இந்தப் பக்கம் போகாதீங்க, சுழல் இருக்கு” ஆற்றில் ‘குளித்துக்’ கொண்டிருந்த இளைஞர்களிடம் அக்கறையோடு கூறிவிட்டுப் போனார் ஒரு பெரியவர்.

“இந்த இண்டர்வியூ எல்லாம் வெறும் கண் துடைப்புதான். வேலையும் கிடைக்காது. உனக்கு சொந்தத்தொழில் செய்ய தைரியமும் பத்தாது.” இது புறப்பட்டுக்கொண்டிருந்த பையனுக்கு அப்பா தந்த ஆசீர்வாதம்.

தினசரி வாழ்க்கையில் இப்படிப்பட்ட விமர்சனங்களை எவ்வளவோ கேட்கிறோம்.

சில விமர்சனங்கள் நம்மீது பொழியும் பூ மழை போன்றவை! அவற்றிற்கு நாம் காது கொடுக்கலாம்.

ஒரு சில விமரிசனங்கள் நம்மைத் தாக்கும் விஷ அம்புகள் போல! அதற்குக் கவசம் அணியலாம்.

எதற்குக் காது கொடுப்பது, எவற்றைக் கவசம் கொண்டு தடுப்பது என நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நம்மை உற்சாகப்படுத்தும், மேம்படுத்தும் விமர்சனங்களுக்கு நாம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கலாம். போட்டியாலும் வரும் விமரிசனங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சிரித்துக்கொண்டே நிராகரித்து விடலாம்.

குழந்தை நடையில் ஆரம்பிக்கும் பொழுது பலமுறை விழுந்து, எழுந்து நடக்க ஆரம்பிப்பது போல, விமர்சனங்களின் கோணங்ளையும் புரிந்து கொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். முதலில் நம்மை விமர்சிப்பவரின் தரம், தகுதி, நிலைபற்றி யோசிப்போம்.

ஒருவர் மாநில அளவிலான மோட்டார் பந்தயத்தில் முதலாவதாக வந்து விடுகிறார். அதற்கு அவருடைய முறையான பயிற்சியும், முயற்சியும்தான் காரணம். ஆனால் அருகிலிருக்கும் அவரது நண்பரோ அல்லது மற்றவர்களோ, “எனக்கு அப்பவே தெரியும்! இன்னும் இவன் உலக அளவிலான பந்தயங்களுக்கு கூட போகலாம்” என்றோ, “அட நான்தான் வண்டி ஓட்டவே கற்றுத்தந்தேன்” என்றோ பெருமையாக பீற்றிக்கொள்வர்.

ஆனால், அவர்தான் முன்பு ஒரு நாள் “உங்க பையனை கண்டிச்சு வையுங்கள்! ரோட்ல போற மாதிரியா போறான். பிளேன் ஓட்ற மாதிரிதான் வண்டி ஓட்றான் ரோட்லேயே பிலிம் காட்றான்” என அப்பாஇடம் ஓதியவராக இருப்பார். இவர் ஒரு ரகம். ஜெயிக்கும் வரை பழித்துவிட்டு, ஜெயித்த பின்பு வால் பிடிக்கும் ரகம்.

அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவன், அவனைப் பார்த்து, “நீ என்னதான் படித்தாலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் VIP ஆகதான் இருப்பாய் (VIP என்றால் வேலையில்லா பட்டதாரிகள்) அதனால் படிப்பு செலவு தண்டம். எனக்கு உதவியாகக் கூட ஒத்தாசையா இரு” என்பார். அவர் என்ன தெரியுமா செய்து கொண்டிருப்பார் வீட்டில் சும்மா இருப்பவராகத்தான் இருப்பார். இவர் இன்னொரு ரகம். தன்னைப் போலவே எல்லோரும் பூமிக்கு பாரமாகத்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிற ரகம்.

நல்ல ஆரோக்கியமான விமர்சனங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுத்துக் கொள்வோம்.

வக்கிரமான மனதில் பிறக்கும் வீண் விமர்சனங்களை ஒதுக்கி விடுவோம்.

1. ஒரு நல்ல நிலையை அடையும் பொழுது தேவையற்ற விமர்சனங்கள் வரும். அவற்றை பொருட்படுத்தாதீர்கள்.

2. ஆரோக்கியமான விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாகக் கூறப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. பொதுவாக விமர்சனங்களை வித்தியாசப்படுத்தி நம்மீது கவசத்தையும், பூக்களையும் ஏற்றுக் கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

4. கூடுமானவரை, ஒரு மனிதரின் மன இயல்பு தெரியாமல் அவரிடம் அபிப்ராயம் கேட்காதீர்கள்.

5. புகழுரையும் விமர்சனம்தான். இகழுரையும் விமர்சனம்தான். புகழ்ச்சியில் மயங்குவதோ, இகழ்ச்சியில் கலங்குவதோ வளர்ச்சிக்கு வழி செய்யாது. எனவே விமர்சனங்களை மௌனமாக விமர்சியுங்கள். பிறகு முடிவெடுங்கள்.

6. பாம்பின் விஷத்திலும் மருந்தின் தன்மை இருகிறது. கசக்கிற வேம்பிலும் நன்மை இருக்கிறது. அதுபோல விமர்சனங்களிலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொண்டு, வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோடுங்கள்.


Share
 

1 Comment

  1. வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:

    உண்மைதான்! கல்லும் முள்ளுமான கரடுமுரடான பாதைக்கு நடுவேதான், மலைத்தேனும், அறிய உயிகாக்கும் மூலிகைகளும் உள்ளதுப்போல… பல காரசாரமான விமர்சனங்களுக்கிடையேதான்.. பன்பட்ட வாழ்க்கை இருக்கிறது!

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!