Home » Cover Story » உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்

 
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்


வித்யாசாகர்
Author:

(திரு. வித்யாசாகர் தனக்கென்று யாருமில்லை என்று தவிக்கிறவர்கள் முன்னால் ஏன் இல்லை? என்று வந்து நிற்கிற மனிதர். ஆதரவு இல்லாதவர்களை அள்ளி எடுக்கிற அன்புக்கரம். உயிருக்கும், அன்புக்கும், போராடுபவர்களிடம் நீளுகிற உதவும் கரம். மனித நேயத்தின் வார்ப்பாக வாழ்ந்த கொண்டிருக்கிற இந்த இலட்சிய மனிதர் தன்னம்பிக்கை இதழுக்காகத் தந்த நேர்காணல் இது.)

உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பேசுங்களேன்?

நான் பிறந்தது கர்நாடக மாநிலத்தில், மைசூர் அருகே இருக்கும் கொள்ளேகால் என்கிற ஊரில்தான். முன்னர் இது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. 12 வயத இருக்கும் போது எங்கள் குடுபம் சில காரணங்களினால் சிதறுண்டு போனது. அப்போது நான் சென்னை வந்து சேர்ந்தேன். என்னை திரு. ராமகிருஷ்ணன் என்பவர் எடுத்து வளர்த்தார்.

வேரொருவரின் உதவியால் வளர்ந்தாலும், பிறருக்கு உதவுவது என்னுடைய குணமாக இருந்தது என்பதாலும் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வது என்பதை ஆரம்பித்தேன்.

ஆதரவில்லாத, எனக்குக் கிடைத்த அரவணைப்பு, எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்கிற ஒரு உள்ளுணர்வாகக்கூட அது இருக்கலாம். பிறகு M.A. Social Work படித்தேன். அதன் பிறகு M.A. உளவியல் படித்தேன். பிறகு சட்டம் பயின்றேன். வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தேன்.

3 வருடம் மனநல மருத்துவமனையிலும் 3 வருடம் ஒரு தொழுயோய் மருத்துவமனையிலும் கூட பணிபுரிந்தேன். இது எதுவுமே எனக்கு நிறைவு தரவில்லை. அதை ஒரு பணியாக செய்கிறபோது மனிதாபிமானத்தோடு அணுக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியும் இருந்தது. எனவே என் மன நிறைவுக்காக, வெளியவே வந்து சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று, கருதினேன். அதனுடைய விளைவாகத்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு உதவும் கரங்கள் என்கிற இந்த அமைப்பினை ஏற்படுத்தினேன்.

உதவும் கரங்களின் முதல் செயல்பாடு என்னவாக இருந்தது?

இது ஒரு நிறுவனமாகும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நிராதரவாகக் கிடந்த ஒரு கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தேன். மருத்துவமனையில் அந்தக் குழந்தைக்குத் துணையாக 15 நாட்கள் இருந்தேன். வேறு எந்த உதவியும் அப்போது எனக்குக் கிடையாது.

ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அந்தக் குழந்தையுடன் அங்கே இருந்தேன். அது நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தியது. இவர் யார்? ஏன் என்றெல்லாம் சுற்றிலும் இருந்தவர்கள் சந்தேகப்படத் தொடங்கினார்கள். என்ன காரணம் என்பதை புரிந்து கொண்டவுடன், எல்லோருமே எனக்குத் துணையாக வரத்தொடங்கினார்கள்.

நான் வெளியே போகிற நேரத்தில் யார் வீட்டிலாவது விட்டுவிட்டுப் போவேன். அவர்களும் உதவி செய்வார்கள். இப்படித்தான் இந்த அமைப்புத் தொடங்கியது. எவ்வளவு பேருக்கு உதவமுடியுமோ, அந்த அளவுக்கு உதவ வேண்டுமென்கிற உணர்வுள்ளவர்கள் எல்லோரும் உதவும் கரங்கள் மூலமாக தங்கள் பணியை செய்ய முற்பட்டார்கள்.

இன்றைய தேதியில் உதவும் கரங்களில் உங்கள் ஆதரவில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

96 குழந்தைகள், 381 சிறுவர், சிறுமியர், மன வளர்ச்சி குன்றியவர்கள் 84 பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 296 பேர், மரணப்படுக்கையில் 176 பேர். எய்ட்ஸ் நோயாளிகள் 54 பேர், உடல் ஊனமுற்றவர்கள் 32 பேர், வாழ்வில் விரக்கியுற்ற பெண்கள் 88 பேர், பாஸ்டிக் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 36 பேர். இவர்களுக்கு சேவை செய்வதற்காக வந்து எங்களோடு சங்கமித்து விட்ட தன்னார்வத்தொண்டர்கள் 38 பேர் என்று மொத்தம் 1551 பேர்கள் இங்கே இருக்கிறார்கள்.

சமூக சேவை மேற்கொள்வதற்கு சரியான சமூகச்சூழல் வாய்த்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பொதுவாக சேவைக்கு அவசியமில்லாத சூழ்நிலைதான், சரியான சமூக சூழ்நிலையாக இருக்க முடியும்.

மனிதன் தன்னிடமும், தன் பண்புகளிடமும் நம்பிக்கை இழந்தவனாகக் காணப்படுகிறான். இந்தியாவை அதன் தத்துவங்களுக்காக, அதன் சித்தாந்தங்களுக்காக உலகம் வியப்போடு பார்க்கிறது. ஆனால் இன்றைக்கு விஞ்ஞான வசதிகள் எல்லாம் வாய்த்திருந்தும் கூட, மனிதன் தனக்குள் நம்பிக்கையில்லாதவனாக காணப்படுகிறான்.

அரசியலமைப்பாகட்டும் கோயில், சர்ச், மசூதி போன்ற வழிபாட்டுத் தளங்களாகட்டும் இவை எல்லாமே சிதறிக்கிடக்கிற மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காக உருவானவை. ஆனால், அதே அரசியல் பெயராலும் மதத்தின் பெயராலும் மனிதன் அடித்துக்கொண்டு சாகிறபோது, சண்டை பிடிக்கிறபோது ஒரு சரியான சமூக சூழ்நிலை இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது. சரியான சமூக சூழ்நிலையில் எங்களை போன்ற சமூக சேவகர்களுக்கு வேலை இருக்காது.

பொதுவாக மக்கள் மத்தியில் சமூக சேவை பற்றி சிந்தனை எப்படி இருக்கிறது? உங்கள் சேவைகளை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

இன்று சமூக சேவை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் யாராவது ஆதரவின்றி சாலையில் கிடந்தால் யாரும் கவனிக்க மாட்டார்கள். இப்பொழுதெல்லாம் ஒருவர் கிடக்கிறார் என்றாலே எனக்கு 10,15, தொலைபேசி அழைப்புகள் வருகிறது. “என்ன சார், நாங்கள் சொன்னோம், இன்னும் பார்க்கவில்லையா?” என்று எங்களோடு சண்டைப் பிடிக்கிறார்கள். ஆனால், நிறைய பேரிடம் பார்க்கிறேன், அவர்கள் ஒரு தியாக உணர்வோடு சமூக சேவையில் ஈடுபடுவதில்லை. அது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது.

சிலபேர் என்னிடம் வந்து “ஒரு அனாதை இல்லம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் அதற்கு என்ன செலவாகும் என்று நேரடியாக ஆரம்பிக்கிறார்கள். அனாதை இல்லம் தொடங்கவேண்டும் என்பதற்காகத் தொடங்கக்கூடாது. அதற்கான தேவை அந்த பகுதியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இருக்குமேயானால் அந்த அனாதைகளுக்கு எவ்வளவு தூரம் அற்பணிப்பு உணர்வோடு செய்ய முடியுமென்று சிந்திக்க வேண்டும். தியாக உள்ளம் பலபேரிடம் இல்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. ஆனால் பொது மக்களுடைய ஆதரவு மட்டுந்தான் இன்றைக்கும் என்னுடைய பலம்.

இங்கு இருக்கிற 1500 க்கும் அதிகமானவர்களின் உணவுத் தேவை உடைக்கானத்தேவை மருத்துவத்தேவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு தேவைப்படுகிற அன்பு, அரவணைப்பு போன்றவற்றையெல்லாம் பொதுமக்கள் மனமுவந்து தருகிறார்கள். இந்த அனாதைக் குழந்தைகளோடு, ஆதரவற்ற முதியவர்களோடு நேரம் செலவிடவேண்டுமன்று நினைக்கிறவர்கள் அதிகமாவது ஒரு நல்ல அறிகுறி என்றே எனக்குப் படுகிறது.

வாழ்க்கையில் நிறைய வழக்குகளையெல்லாம் கூட நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களே?

ஒரு நல்ல நோக்கத்திற்கு பாடுபடுகிறபோது, நான்கு விதமான பாதிப்புகள் ஏற்படுது இயற்கை. ஒருவர் பாதிக்கப்ப்ட்டிருக்கிறார் என்றால், அவருடைய துன்பதைத் துடைப்பதற்காக நாம் எடுத்து வளர்க்கிறோம், அல்லது ஆதரவு காட்டுகிறோம். அது நம் இயல்பு. ஆனால், வேறு மறைமுகமான துவக்கங்களுக்காக நிறைய பேர் என் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.

பிரேமானந்தா சாமி வழக்கில் கூட 2 வருடம் பாதிப்பு அடைந்த பெண்களை நாங்கள்தான் பாதுகாத்து வந்தோம். அந்த 2 வருடம் எங்களுக்கு நிறைய மிரட்டல்கள், எதிர்ப்புகள் வந்தன. அவற்றிற்கெல்லாம் நான் அஞ்சவில்லை. காரணம் அடிப்படையில் என்னிடம் ஒரு நேர்மையுண்டு. நான் பிரபலமானவன் இல்லை. ஆனால் நேர்மையானவன். மற்றவர்களுக்கு ஒத்துப்போகிறபடி நடந்து கொள்ள வேண்டும் எனகிற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது. அதனால் பல பேருக்கு என்னைப்பிடிப்பதில்லை. அதனால் பரவாயில்லை.

அரசாங்க ஆதரவு உங்களுக்கு இருக்கிறதா?

இல்லை. பொதுமக்கள் ஆதரவைத்தவிர வேறு எந்தத்துணையும் எங்களுக்கு கிடையாது. சமீபத்தில் கூட சவுதி அரேபியாவிற்கு கடத்தப்படியிருந்த 80 குழந்தைகளை மீட்டு வந்த அரசாங்கம் 15 நாட்களுக்கு இவர்களைப்பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி எங்களிடம் விட்டு விட்டுச் சென்றார்கள். 15 ந1ட்கள் என்று சொன்னவர்கள் 8 மாதமாகியும் திரும்பிப்பார்க்கவில்லை. பிறகு சிறுவர்களை வந்து அழைத்துப் போனபோது கூட அவர்களுக்கு நல்ல மறுவாழ்வை தரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

இந்தப்பணியில் உங்களுக்கு முன்னோடியக யாரைச் சொல்வீர்கள்?

மிக நிச்சயமாக அன்னைத் தெரஸா அவர்களுடைய வழிகாட்டுதல்தான் என்னை இந்தத் துறைக்கு இழுத்து. என்னுடைய வழிகாட்டி அவர்தான்.

சிலபேர் அவர் ஏதோ மதமாறம் செய்ய வந்தார் என்றெல்லாம் பேசுகிறார்கள். நமது சமுதாயத்தில் அத்தகைய பெண்ணை நம்மால் உருவாக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது அன்னை தெரஸாவைப் பற்றி தவறாகப் பேசுவது சரியில்லை. நான் 8 மாத காலம் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களுடைய பணிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அவர்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். அவர் விருப்பு, வெறுப்பில்லாமல் தன் கடமைகளை ஆற்றினார். அதை மதக்கண்ணோட்டம் கொண்டு பார்ப்பது தவறு.

நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. இன்றுகூட முதல் நிலையில் இருக்கக் கூடிய மடாதிபதியைப்பற்றி “அவர் ஹரிஜன காலனிக்குகூட போகிறார்” என்று சொல்லுகிறார்கள். ஹரிஜனனுக்குக்கூட என்றகிற தொனியே அருவருப்பாக இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தானே! அங்கே போய் வந்து விட்டதே ஒரு சாதனை என்று சில பேர் பேசுகிறபோது அன்னை தெரஸா அவர்களைப் பார்க்கிறேன். மனிதர்களை அவர் தன்னுயிர்போல் எவ்வளவு மதித்தார் என்பது நெகிழச்சியான விஷயம்.

இன்னொரு இடத்திற்குப் போவதையே நாம் பெருமையாக பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது. அன்னை தெரஸா அவர்களை முன் உதாரணமாகக் கொண்டுதான் நான் கூட செயல்பட்டு வருகிறேன்.

மனித நேயம் வளர்வதற்கு என்ன வழி என்று கருதுகிறீர்கள்?

முக்கியமாக இன்றைக்கு கல்விச் சூழ்நிலை, குடும்பச் சூழ்நிலை, மக்கள் தொடர்பு சாதனங்கள் இவையெல்லாம், மனித நேயத்திற்கு எதிராகவே இருக்கின்றன. குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படங்களில் இருக்கிற வன்முறை, பல குடும்பங்களையும், தனி மனிதர்களின் மனங்களையும் பாதிக்கிறது. தனி வாழ்க்கையின் அம்சங்களையெல்லாம் பகிரங்கமாகப் பேசுவது என்பதுதான் பொழுது போக்காக மாறிவிட்டது.

அப்பா, அம்மாவிற்குமிடையே ஏற்படும் சண்டையால் பல குழந்தைகள் மனம் வெறுத்ததை நான் பார்க்கிறேன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பெரியதாக எதையும் செய்ய வேண்டாம். ஒரு சுமூகமான, அமைதியான குடும்ப சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தாலே குழந்தைகள் நம்பிக்கையோடு இருப்பார்கள். அது பல இடங்களிலேயும் இல்லை. கணவனும், மனைவியும் செய்கிற தவறு காரணமாய் எந்தத்தவறும் செய்யாத குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் போக்கு மாற வேண்டும். மனித நெயத்திற்கான அனைத்துப் பணிகளும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தொடங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

தனிப்பட்ட முறையில் உங்களுடைய திறமைகளைப் பற்றி?

அடிப்படையில் நான் ஒரு நல்ல பேச்சாளன். அது மட்டுமல்ல எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வமுண்டு. நன்றாக வரைவேன். இது தவிர இசையிலும் நிறைய ஆர்வமுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வ பக்தியை நான் என்னுடைய பெரிய பலமாக கருதுகிறேன். என் செயல்கள் அனைத்தும் கடவுள் துணையிருக்கிறார் என்ற தன்னம்பிக்கையோடுதான் நடக்கிறது என்று சொல்லவேண்டும்.

உங்களைப் போன்ற சமூக சேவையாளர்கள் சமூகத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சமூகத்திலிருக்கிற அத்தனை பேரும் பெரிய அளவில் இறங்கிவந்து அன்னைத் தெரஸா போல் சேவை செய்யவேண்டுமென்று நான் எண்ணவில்லை. அவரவர்கள் குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டாலே சமுதாயத்திற்கு அவர்கள் செய்கிற பெரிய உதவி அது.

குழந்தைகளைத் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசுவது, மனநிலை சரியில்லாதவர்களை வெளியே விரட்டியடிப்பது, ஆதரவில்லாதவர்களை துரத்துவது என்பது மோசமான விஷயம், ஒருவர் வசதியுடையவராக இருந்தாலும் ஒரு 500 ரூபாய் கொடுத்து விட்டால் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒண்டு வந்து விடுகிறார்கள். அது முதியோர்கள் மனதில் வ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்துகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

இந்தச் சமூகத்திற்கு உதவும் கரங்கள் போன்ற அமைப்புகள் தேவையில்லை என்ற நிலையை உருவாக்க ஒவ்வொரு குடும்பமும் முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சியெல்லாம் அவரவர் குடும்பங்களைச் சரியாகப் பார்த்துக் கொள்வது தான்.

அனாதைகள் உருவாகவே வாய்ப்பில்லை. சிலரின் அஜாக்கிரதையால்தான் அனாதைகள் உருவாகிறார்கள். எனவே, அவரவர் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதே சமூகத்திற்கு செய்கிற பெரிய சேவை என்று நினைக்கிறேன்.

(இந்த பேட்டி முடிவடைகிற தருணத்தில் ஒரு 7 வயது குழந்தை ஓடிவந்து “பாப்பா” என்று வித்யாகர் மடியில் அமர்ந்து கொண்டது.

“இந்த அண்ணாவுக்கு உன்பெயர் சொல்லு” என்றார் வித்யாகர். “ப்ப்பியா, உன் பேரு?’ என்ற வித்யாகர், உன் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து, “இங்கே பாருங்க! இவப்பேரு பப்பியாம்” என்றார்.

“அப்படியா? எப்ப உன் பேர மாத்தினே” என்று எதிர்பக்கம் இருந்தவர்கள் கேட்டதும் அந்தக் குழந்தை “நான் ஒண்ணும் சொல்லலை. பப்பாதான் என் பெயரை ப்பின்னு சொல்றார்” என்றது.

“அப்ப உன் பெயர் என்ன? இந்த அண்ணாகிட்டே சொல்லு” என்றதும் நம்மை வெட்கத்தோடு நிமிர்ந்து பார்த்தக் குழந்தை “என் பேரு அனகா” என்று சொல்லிவிட்டு ஓடி விட்டது.

ஓடிப்போன அந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு பெருமூச்சோடு நம்மிடம் சொன்னார் “அனகா, 2 வயது குழந்தையாக இருந்தபோது யாரோ இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டுப் போனார்கள். இப்போது 7 வயதாகிறது. அவளுக்கு பிளட் கேன்ஸர். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம். ஐந்தாண்டுகளாக பலமுறை அவளுக்கு பிளட் டிரான்ஸ்பியூஷன் செய்திருக்கிறோம்’ என்றார். நாம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.

நம்மிடம் விடை பெற்றுக் கொண்டு, “விநாயகம்! குச்சிப் பாட்டிக்குக்கு சாப்பாடு அனுப்பியாச்சா?” என்று கேள்வியோடு எழுந்து போனார் வித்யாகர். அனகாவிலிருந்து குச்சிப்பாட்டி வரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரே நம்பிக்கை வெளிச்சம் திரு. வித்யாகர். இல்லை, இல்லை அவர்களின் பப்பா.)

 

34 Comments

 1. kalpana says:

  hello sir,

  my name is kalpana. am living in salem. i read your interview. realy am amzing think about you. i am aim and dream is my full life spend for orphands(anathaigal). am very interest in social service. so i think joint with u for social service with your permission. any wrong in my message am very sorry becouse i dont know english writing very well. i need your phone number and address. pls send my e-mail id.

  by,
  kalpana

 2. kalpana says:

  hello sir,

  my name is kalpana. am living in salem. i read your interview. realy am amzing think about you. i am aim and dream is my full life spend for orphands(anathaigal). am very interest in social service. so i think joint with u for social service with your permission. any wrong in my message am very sorry becouse i dont know english writing very well. i need your phone number and address. pls send my e-mail id.

  by,
  kalpana

 3. sangeetha says:

  எனக்கு திரு. வித்யாசாகர் அவர்களின் மின்னஞ்சல் (அல்லது) அலைபேசி எண் தேவை . தயவு செய்து அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி!

 4. A.GURUVU says:

  hello sir,

  எ.GURU

  my name is GURU. I am living in Chennai. i read your interview. realy am amzing think about you. i am aim and dream is my full life spend for orphands(anathaigal). am very interest in social service. so i think joint with u for social service with your permission. any wrong in my message am very sorry becouse i dont know english writing very well. i need your phone number and address. pls send my e-mail id.

  by,
  Guru

 5. franklin raj says:

  sir,

  im an advocate practicing at Trichirapalli and it has been my long time vision to marry an orphan girl.
  im not tell it as a vision indeed i just to want to let an orphan girl with full of happiness in her whole life.
  if anything possible for that please contact my mail coz i dont know how to approach you and i will meet you with my parents.

 6. jeevanandam says:

  நாம் அன்னை தெரசா ,வித்யாசாகர் வாழும் காலங்களில்,நாட்டில் வாழுகிறோம் எனபது நமக்கு பெருமை .

 7. Ramesh says:

  I am Ramesh. i need this anathaigal social service address.please send my e-mail id.

  Expecting a favorable Reply

  RAMESH.

 8. M.Sathiya says:

  Sir My Name is Sathiya, am poor family, But my aim, free time social service saiyanum. sorry sir i dont know english. This is my No.8939071893. please cont your no. please sir am join with u.

 9. s.selvarasu says:

  Hello sir,

  i want to celebrate my birthday with that child’s. may i have a chance to celebrate my birth day with you all…..

  my date of birth is 12/08/1990. i need your reply sir.

  Thanking you,

  your’s lovingly,

  S.Selvarasu.

 10. Nisha says:

  My name is Nisha. I am in chennai. I read your interview. You are doing a great job sir. I would like to visit uthavum karangal. Will you allow us to spend some times with the persons in your uthavum karangal. I need your address and phone number.

 11. vanithaji says:

  ஹலோ சார்,என்னுடைய பேர் வனிதா…..சார்,என்னுடைய கனவு பல அன்னை தெரசாவ உருவாக்கணும் என்றும்,நாட்டில் அனாதை என்று யாரும் இருக்க கூடாது என்பதும்,ஆனால் அதை எப்படி நடைமுறை படுத்தணும் என்று தெரியல சார்…. எனக்கு தைரியம் இருக்கு ஆனால் encourage

 12. vanithaji says:

  Hello sir…..im vanitha.என்னுடைய கனவு பல அன்னை தெரசாவ உருவாக்கணும் என்றும்,நாட்டில் அனாதை என்று யாரும் இருக்க கூடாது என்பதும்,ஆனால் அதை எப்படி நடைமுறை படுத்தணும் என்று தெரியல சார்…. எனக்கு தைரியம் இருக்கு ஆனால் encourage பண்ண யாரும் இல்ல சார்……but உங்க interview பார்த்ததும் ஒரு நம்பிக்கை சார்…. if u don’t mind,pls give ur address sir.i want to ur address send in my mail sir pls pls pls sir

 13. ganesh says:

  சார், எனது ஊரில் எனக்கு தெரிந்த ஒரு பெண் (21) காதல் திருமணம் செய்து கொண்டால், ஒரு வயது ஆண் குழந்தை யுள்ளது, தற்பொழுது கணவனாலும் தனது குடுபதினரளும் நிரகாரிக்கப்பட்டு ,தற்பொழுது ஆதரவின்றி கொடும்மையான நிலையில் உள்ளார் தற்பொழுது அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கை மட்டும் தேவை அது உங்க்களால் மட்டும் வழங்கமுடியும் என்று நம்புகிறேன் .

 14. joan says:

  மதிப்பிற்குரிய ஐயா
  உங்களது தொண்டு பற்றி படித்தேன்
  எனக்கு 30 வயதாகிறது .
  எனது கல்வி தகுதி 12
  எனக்கான யாரும் இல்லா சுழலில்
  இத்தாலியில் ஒரு மடத்தில் சிறைபட்டு வாழ்கிறேன்
  நான் இந்தியா வரவும் ஒரு தொழிற் கல்வி கற்று கொண்டு
  என் எதிர் கால வாழ்வை நல்ல முறையில் அமைதுகொள்ளவும்
  உங்கள் அமைப்பு முலம் எனக்கு உதவ முடியுமா ?
  தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்கிறேன் .
  நன்றி .

  எனது
  மெயில் sajolin@gmail.com

 15. ANITHA says:

  hai sir

  I WILL JOINT YOUR SOCIAL SERVICE BUT I DON’T KNOW HOW TO JOINT ….. PLEASE REPLY ME

 16. Venkateshkumar says:

  Hi All,

  நம்மால் செய்ய முடியாததை வித்யாகர் அருமையை செயல் படுத்தி கொண்டு இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் பல. அனாதை என்ற சொல்லை இந்த உலகத்தில் இருந்து தூக்குவோம். நமது கைகள் இணையட்டும்.

  I already started participated in contributing for this noble service.

  Here is the Address of udavum karangal

  Head office:
  460 NSK Nagar,
  Chenai – 600 106.
  PH: 044-26222161
  Email: udavum@vsnl.com ,udavumkarangal@gmail.com

  Branch Office:
  16, Thandu Mariamman Koil Street,
  Coimbatore – 641 018
  PH: 0422 – 2302030, 2301090

  Donations can also be made thru online by Credit Card or Net banking by clicking on the following link.

  If you are in India or Other countries click on the link below for payment options https://www.myhelpinghands.org/Donate_india.aspx

  வாழ்க பாரதம் !

 17. krishnaKUMAR says:

  IAM KRISHNAKUMAR IN KRISHNAGIRI IAM NOT PARENTS SO IAM JON UR FOUNDATION PLS HELP ME

 18. jeevitha says:

  my name is jeevitha. am living in chennai. i read your interview. realy am amzing think about you. i am aim and dream is my full life spend for (anathaigal). am very interest in social service. so i think joint with u for social service with your permission. any wrong in my message am very sorry becouse i dont know english writing very well. i need your phone number and address. pls send my e-mail id

 19. jeevitha says:

  hi sir im poor family enaku 21 age akuthu 17yearlaye marrige aiduchu 1yeartha athukulla en huspubenku vera thotarnu yerpattu divoiceku apply pannitanga ipo na veetla tha iruka rompa maind upsat ah ethulaume maind pogala veetla enaku life pitikala sethudanun thonuthu enaku any help pannunga na naraya sathikanum future la trust start pannanun ninaicha ipo ethume panna mudila any trustla work iruntha plss call me and sent me 9789215709 jeevitha.m17@gmail.com

 20. SATHYA says:

  SIR, KADAVUL INNUM INNTHA BUMEIL ERUKKIRAR.UNGAL VADIVIL.VANNANGUKIRAN!

 21. Ismail says:

  I am ismil from saudi i reed vidhyasakar informations . namma avara mathiri seyya virupam irunthalum avarukku vantha athe ennam ellarukkum irukku neenga avara mathiri nanum than avara mathiri unga pakathula irukka aatharaoo atra kulanthaigaluku uthavi seinga atharku muyarchi edunga nichyam oru munnetrathai adaiveeergal nanbargale …………

 22. JODEN says:

  NANUM KATRUKOLHIREN UTHAVUVATHARKU
  THANKS VIDYASAHAR ANNA

 23. bhuvana says:

  தன்னம்பிக்கை மட்டும் தேவை அது உங்க்களால் மட்டும் வழங்கமுடியும் என்று நம்புகிறேன். please sir ennala mudintha help seiya asai padukiren. antha pakkiyam enaku thanka sir . please ithu en mobile number 9677117576 . i need your phone number and address. pls.my mail. id : honeyshek108@gmail.com

 24. Margreta says:

  hello sir, u r great sir

 25. R.venkatesan says:

  என்னால் முடிந்த உதவியை செய்ய ஆசைப்படுகிறேன் இப்படிக்ku jai sri ram

 26. vinnarasi says:

  God bless u

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!