Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

புத்தாண்டு மலர்கிறது. மிகப்பெரிய மாற்றங்களை மனிதகுலம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற பொழுதில் எத்தனையோ சவால்களை மனித இனம் சந்திக்க வேண்டிய தருணத்தில், வெறும் உற்சாகக் கொண்டாட்டங்களுக்கான ஒரு தினமாக புத்தாண்டைக் கொண்டிருப்பதில் பொருளில்லை. என்னென்ன இலக்குகள், அவற்றை அடைய என்னென்ன தேவைகள் என்பதையெல்லாம் ஒரு தொலைநோக்கோடு பார்ப்பதற்கே இந்தப் புத்தாண்டு.

முக்கிய தினங்களின் பெருமைகளை மறந்து கொண்டாட்டங்களிலும், கும்மாளங்களிலும் பொழுது போக்குகின்ற மனிதன் தன்னைத் திருப்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

தனிதனிதன் தன் குடும்பத்தோடும், இந்த சமூகத்தோடும், சர்தேசக் கொள்கையோடும் ஊடாட வேண்டிய உன்னதமான காலம் வந்துவிட்டது. இந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் வருகிற ஆண்டை எதிர்கொள்வோம். நமது நோக்கங்கள் வெறும் கனவுகள் அல்ல, அவை இலட்சியங்கள், எட்டியே தீர வேண்டிய இலட்சியங்கள்..

நம்முடைய திட்டங்கள் வெறும் காகிதத்தில் வார்க்கிற வரிகள் அல்ல. வாழ்கைக்குள் வந்து சேர வேண்டிய நெறிமுறைகள். ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் இருக்கிற ஆற்றலில் 10% கூட இதுவரை உணர்ந்தோ கொள்ளவில்லை.

தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தத் தொடங்குகிறபோது மனித குலத்துக்கு சிறகு முளைக்கும், நமது தோள்களுக்கு நாமே சிறகு தருவோம். தன்னம்பிக்கை ததும்புகிற புத்தாண்டுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!