Home » Articles » அப்படியா?

 
அப்படியா?


admin
Author:

நிலையற்ற ஆட்சியால் இந்திய நாட்டின் ஜனநாயகம். பெரிதும் பாதிக்கப்பட்டு, ராணுவ ஆட்சி மலர வழிவகை ஏற்படும்.

மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவ நம்பிக்கையும், பயமும் சலிப்புணர்வும் உண்டாகும்.

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பாலமாக செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி பொறுப்பிழக்கும் பட்சத்தில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செயல்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படும்.

பாரத நாட்டின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத அந்நிய நாடுகள். எல்லா விதத்திலும் இந்தியாவை சீர்குலைக்க வழிவகை செய்யும்.

G. சித்ரா
கோவை -6
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் ‘ நிலையற்ற அரசு தேவை ‘ என்ற சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே விதைத்திருப்பினும் இன்று இவ்விதை பெரும் மரமாகிப் பயன்ற்ற கசப்புக் கனியினையே மக்களுக்கு அளிக்கின்றது.

நிலையற்ற அரசு என்பது ஒரு மாதம். இரண்டு மாதம் என்றும். முன்பு அமைந்த 13 மாதம் ஆட்சிபோல் இருந்தால் அடைய போதுமான காலச் சூழ்நிலை அமையாது.

தன்ராஜ்
திருச்சி.

பலகோடி மக்கள் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்குவதும் பத்துபேர் மட்டும் சேர்த்து அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதும் வேடிக்கையான வேதனையாகும், உலக அரங்கில் இந்தியாவின் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அரசியல் கேலிக் கூத்துக்களும் ஆண்டுக்கொரு பிரதமர் என்பதும் நமது நாட்டின் பெருமையை நாசமாக்கிவிடும்.

தெளிவில்லாத உள்ளத்தில் சரியான முடிவுகள் தோன்றாது, ” விடிந்தால் ஆட்சி இருக்குமா?” என்கிற கவலையோடு இருக்கும் போது இந்த மக்களைப் பற்றிய சிந்தனை எப்படி வரும்?

R.B. தமிழ்ச்செல்வன்
கோவை -24.

நிலையற்ற அரசு  அமைந்தால் பாதகமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் எப்படி எனில் இருக்கும் குறுகிய காலத்தில் கிடைத்தவரை லாபம் என்று சம்பாதிக்கும் எண்ணம் உருவாகிவிடும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு அமைய வாய்ப்பே இல்லாதபடி, வாக்குறுதிப்படி ஆட்சி நடத்தும் அரசாக தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்குமுன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

முத்துபாரதி .எஸ்.ஏ.
திருப்பூர்.

வளர்ந்துவரும் நாடுகளில் நம் பாரதமும் ஒன்று.

இங்கு நீடித்த நிலையான அரசு இருப்பது மட்டுமே உலக அரங்கில் நமக்குக் கௌரவம் தருவதாய் அமையும்.

தொழில்கள் வளர்ந்து முன்னேற்றப் பாதைக்கு நாட்டைக் கொண்டு செல்லும்.

எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் முழுமையாய் கிடைத்தபின், நம்நாட்டில் கல்வி அறிவு பெற்றோர் 80% க்கும் மேல் என்ற நிலை பெற்றபின் நிலையற்ற ஆட்சி சாத்தியமாகலாம். ஆக நமக்குத் தேவை ” நிலையான ஆட்சி.”

ஆர். ரத்தினசாமி
பு. புளியம்பட்டி.

பதவி நிரந்தரத்தினால் ஏற்படுகிற சர்வாதிகார மனப்போக்கும் ஆணவமும் தான் இன்றைய ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் மூலகாரணங்கள் ஆனால் ஆளும் கட்சி அடிக்கடி மாறிக் கொண்டே இருக்குமானால் எந்த கட்சியும் ஆட்சிக்குப் பாரம்பரியம் கொண்டாட முடியாது.

அ. சஞ்சீவி,
மேட்டூர் அணை.

இந்தியர் ஏழை நாடு என்றால் தேர்தல் செலவு மட்டும் பல ஆயிரம் கோடி. இத்தனை பணமும் எப்படி வந்தது. மக்களிடம் பெறும் வரிகள்தானே. தேர்தல் முடிந்ததும் அதே மக்களிடம்தான் மீண்டும் வரிகள் சுமத்தி, மக்களை துன்பத்திற்கு ஆழ்படுத்துகிறார்கள். வேலையின்மை பணத்தட்டுப்பாடு. பொருள்முடக்கம் எனப் பொருளாதாரமே நசுங்கிப் போய் படித்தவர்களும் படிக்காதவர்களும் ஒன்றாக வேலை இழக்கும் அபாயம் இதற்கு முடிவு தான் என்ன? ஹிட்லர் ஆட்சியில் கூட ஒரு வரைமுறை உண்டு. இங்கு சுய நலத்திற்காக ஆட்சி கவிழ்ப்பு நடத்துதல், நிலை இல்லாத இந்தியாவைக் கண்டு அயல் நாடுகளே கை கொட்டிச் சிரிக்கும். எதிரிகளுக்கு நாமே இடம் தருவது போல ஆகிவிடும.

இன்றைய கால சூழ்நிலைகளுக்கு ‘ நிச்சயம் நிலையான ஆட்சி தேவை அப்பொழுதுதான்  இந்தியாவின் எதிர்காலம் பிரகாசிக்கும்.

கருணா குணசேகரன்.
கோவை – 38.
* பரிசுக்குரியவை.

தீபாவளி இதழ் கண்டுபூரித்தேன்.

அச்சும் அமைப்பும் அருமை

உந்தியெழும் உணர்வுகளின் மொழிபெயர்ப்பாக உலா வந்த கவிதைகள் உளம் தொட்டன.

சிந்தையைக் கவரும் வண்ணம் சிந்தனைச் சிற்பி டாக்டர் இல. செ. கந்தசாமியின் முயற்சி முடிவு – விளைவு கட்டுரை அழகுற அமைந்திருந்தது வாழ்த்துக்கள்.

கவி. இளங்கதிரவன்.

இன்றைய இளைய சமுதாயம் படித்து பயன்பெறக்கூடிய கட்டுரைகள் நிறைய தன்னம்பிக்கையில் போராடப் பழகுவோம். படிக்கும் போதே நம்மை அறியாமலே ஒரு எழுச்சி தோன்றுகிறது. பாண்டியராஜன் பேட்டி சிற்ப்பு இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள் தரலாமே.

நந்தவனம் சந்திரசேகரன்,
திருச்சி.

பாண்டியராஜனை ஒரு நடிகர் என்ற போர்வை இல்லாமல் தன்னம்பிக்கையின் அடையாளமாக உழைப்பின் முக்கியத்துவத்தையும் வெற்றிக்கு பிறரை மதிக்கும் தன்னம்பிக்கையினையும் உணர்த்துகிற ஒரு உண்மையான உழைப்பாளியாக வெளிக்காட்டியிருப்பது பலருக்கு உதவும் பாடமாக இருக்கும் சோர்ந்து போய் என்னிடம் வரும் நண்பர்களுக்கு நான் முதலில் தருவது தன்னம்பிக்கை மாத இதழை!

டா. அணில் கனக சுந்திரும். தேனி.

ஆழ்மனச்சக்தியை நாம் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். என விளக்கும் சக்சஸ் அவர்களின் தொடர் அருமை வாழ்க்கையில் விரிசல்களிலிருந்து வெளிவருவோம் விரிசல்களை எவ்வாறு சமாளிக்கலாம் என விளக்கும் இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? தொடர் சிறப்பு தொடரட்டும் உங்கள் வெற்றி.

K. விஸ்வாதன், பெரிய மோப்புரிபாளையம்.

வழக்கமாக சினிமாக்காரர் என்றால் படிக்கமாட்டேன் பாண்டிராஜனின் நேர்காணலில் மணிரத்தினம் குறிப்பிட்டதாகச் சொன்னது அவரது நிலையை உயர்த்தியது வாழ்த்துகள்.

பொள்ளாச்சி நசன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1999

நம்பிக்கையும் நானும்
மரபின்மைந்தன் முத்தையா இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
அப்படியா?
ஆழ்மனச்சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மனசு விட்டு பேசுங்க
மத்திய சிறைச்சாலையில் மொட்டவிழும் தன்னம்பிக்கை
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்
ஞானப்பழம் உங்களுக்குத்தான்
ப்ளீஸ் சுவர் எழுப்ப வேண்டாமே