Home » Articles » மனசு விட்டு பேசுங்க

 
மனசு விட்டு பேசுங்க


admin
Author:

கேள்வி : தினமும் ஏதாவது ஓரு காரணத்தினால் மூட் – அவுட் – மனக்குழப்பம் உண்டாகிறது. மனதிற்குள் அழுகிறேன். குழந்தைகளைத் திட்டி விடுகிறேன். என்னுடைய இந்த மனநிலையால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. உறவினர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. உறவினர்களின் தொடர்புகள் குறைகிறது. சில நேரங்களில் இறந்து விட்டால் என்ன என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் வாழ்வதற்கே ஆசைப்படுகிறேன். வழி என்ன?
(ஆர். தேவி. தூத்துக்குடி)

பதில்: உங்களுக்கு எளிதில் புண்படும் மனநிலை இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி குழ்ப்பம் ஏற்படுகிறது. முதலில் உங்களுடைய சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும். சில விரும்பாத சம்பவங்கள். நாளடைவில் உங்களுக்கே பழகிவிடும். இதற்கெல்லாம் டென்ஷன் ஆகிவிட்டோமே என்று நினைப்பீர்கள். அடுத்து மற்றவர்கள் உங்களுக்கு எல்லாமும் செய்ய வேண்டுமென எதிர்பாரக்காதீர்கள். அதை மாற்றி இனி உங்களை சந்திப்பவர்களுக்கு எந்த வகையில் உதவி புரிய முடியும் என சிந்தியுங்கள் இயன்ற வரை செய்யுங்கள். இதனால் உங்களுக்கு பிற மனிதர்களுடம் சுமூகமான உறவும் நல்லெண்ணமும் உண்டாகும்.

இதற்குமேல் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து அது கிடைத்தால் நல்லது; கிடைக்காவிட்டால் மேலும் நல்லது என்ற மனநிலைக்குத் தயாராகுங்கள். அதற்கு பின் உள்ள மனம் புண்படும் வாய்ப்பே வராது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1999

நம்பிக்கையும் நானும்
மரபின்மைந்தன் முத்தையா இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
அப்படியா?
ஆழ்மனச்சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மனசு விட்டு பேசுங்க
மத்திய சிறைச்சாலையில் மொட்டவிழும் தன்னம்பிக்கை
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்
ஞானப்பழம் உங்களுக்குத்தான்
ப்ளீஸ் சுவர் எழுப்ப வேண்டாமே