Home » Articles » ஞானப்பழம் உங்களுக்குத்தான்

 
ஞானப்பழம் உங்களுக்குத்தான்


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன்

நண்பர்கள் மூவரும் வெவ்வேறு மகத்தை சார்ந்தவர்கள் சுவையாகவிருந்து சாப்பிட்டுவிட்டு ஒய்வெடுக்கப் போகும் போது. கதவை தட்டிக்கொண்டு பெரியவர் ஒருவர் உள்ளே நுழைகிறார். அவருடைய கையில் அதிசயிக்கும் வகையில் ஒரு பழம். ஔவையில் ஞானப்பழம் போன்றது பெரியவர் சொன்னார்.

” இது ஒரு அதிசய பழம் ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டும். உங்கள் மூவரில் யார் இதைச் சாப்பிடுகிறீரோ அவர் எல்லா வயதிலுமே இளமையாக இருப்பார் ” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

நண்பர்கள் வெவ்வேறு மதத்தை சார்ந்திருந்தாலும் ஒற்றுமை கொண்டவர்கள். ‘ நாம் மூவரும் அவரவர் தெய்வத்தை வழிபட்டு தெய்வத்தின் முடிவிற்கேற்ப யாருக்கு அருள் கிடைக்கிறதோ அவரே பழத்தை உண்ணலாம் ‘ என் பத்தரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு ஓய்வடுத்தனர்.

கண்விழித்ததும் இந்து நண்பர். ” என் முருக்ப்பெருமானை வேண்டி இந்த பழத்தை உயர்போட்டு என் கைகளை ஏந்தி நிற்பேன். என் கையில் பழம் விழுந்தால் அதை நான் சாப்பிடுவேன். இல்லையேல் எனக்கு அப்பழம் வேண்டாம் ” என்றார்.

கிறிஸ்துவ நண்பர். ” தேவனை நினைதுது தரையில் ஒரு வட்டமிடுவேன். பழத்தை உயர்ப்போட்டு கீழே விழும்போது அந்த வட்டமிடுவேன். பழத்தை உயர்போட்டு கீழே விழும்போது அந்த வட்டத்தில் விழுந்தால் அதை நான் சாப்பிடுவேன். இல்லையேல் அப்பழம் எனக்கு வேண்டாம் ” என்றார்.

சர்தார்ஜி நணபர். ” நான் இதுபோன்ற சூழ்நிலையில் எப்போதும் எல்லாவற்றையும் என் கடவுளையே ஏற்கச் சொல்லிஇ மேலே போடுவான். அவரு எடுத்துக் கொண்டதுபோக கீழே விழும் மீதமுள்ளவற்றை மட்டும் நான் எடுத்துச் கொள்வேன். அப்படித்தான் இப்பழத்தை மேலே போட்டேன். பழம் கீழே விழந்தது. கடவுள் எனக்குக் கொடுத்தார். உடனே சாப்பிட்டு விட்டேன்.

மற்ற நண்பர்கள் அதிர்ச்சியுடன் பாத்திரத்தைதிறக்க பழத்தை காணவில்லை.

இந்த கதையிலிருந்து ஒன்றை உணரலாம். நமக்கு எது முக்கிஇயமோ அதை உடனே செயல்படுத்தி விட வேண்டும். இல்லையேல் அதன் பலன் கிட்டாமல் போய்விடும். நம்மிடையே உழைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இருப்பினும், ஏன் ஒரு சிலர் மட்டுமே முன்னேறி வருகிறார்கள்? எதை எதைச் செய்வது? பல அலுவல்களுக்குக் கிடையில் எதற்கு முக்கியத்துவம் தருவது? போன்ற பல அலுவல்களுக்குக்கிடையில் எதற்கு முக்கியத்துவம் தருவது? போன்ற அம்சங்களைப் பற்றித் தெரியாமல் செயல்படுவதே பலருடைய முன்னேற்றிமின்மைக்கும் சிரமங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

பொருளாதாரத்தில் 80:20 என்ற பரோடாவின் விதி ஒன்று உண்டு. இதை ஒரு தமாஷான விதி எனலாம். அதன்படி எந்த ஒரு செயலிலும் இருபது சதம் பேர்கள் செய்யும் வேலைகளாலேயே என்பது சதம் முன்னேற்றம் உண்டாகிற்து. வீடு கட்டுதல், தொழில் செய்தல், விழா நடத்துதல், திருமணம் செய்தல் இப்படி எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் முக்கியமான இருபது சத வேலைகளை செய்து முடித்து விட்டால் என்பது சதம் பலன் கிடைக்கும். பொதுவாக எந்த செயலைச் எடுத்துக் கொண்டாலும் முக்கியமான இருபது சதம் எவை? என்பதை அறிய வேண்டும். அதை முழு ஈடுபாட்டுடனும். தேவைப்பட்டால் பிறரின் திறமைகளை பயன்படுத்தியும் அதிவிரைவில் முடிந்து விட பழக வேண்டும். அப்போது என்பது சதம் வேலைகள் முடிந்து விடும். முன்னேற்றமும் தானாக ஏற்பட்டுவிடும்.

உதாரணத்திற்கு ஒரு விழா ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றால் அதற்கு நல்ல, பேச்சாளரை முடிவு செய்தல், அவருடன் பங்கேற்போரை தேர்வு செய்தல், பங்கேற்றபோருக்கு அழைப்பு விடுத்தல், விழாவிற்கான இடத்தை நிர்ணயித்தல், மேடை அமைத்தல், விருந்தினாரின் போக்குவரவை கவனித்தல் நிகழ்ச்சியை முறையாக நடத்துதல், நிகழ்ச்சிக்குத் தேவையான ஒளி , ஒலி ஏற்பாடுகளை அமைத்தல், நிகழ்ச்சியின் போது தேனீர் சதமாக நல்ல பேச்சாளரை தேர்தல், அதற்கான இடத்தை நிர்ணயித்தல் ஆகிய இரண்டையும் சரியாக செய்து விட்டால் விழாவின் என்பது சத்ம் வேலைகள் நிறவேறி விடும்.

இனி நமது பழக்கங்களைப் பார்ப்போம். செய்தித்தாள்களை நாள்தோறும் மணிக்கணக்கில் புரட்டுவோம். அரட்டைக்கு ஆள் இருந்தால் இடைவெளி கூட விடாமல் பேசிக் கொண்டே இருப்போம். டி.வி.யில் சேனல்களை மாற்றி மாற்றி நாள் முழுவதும் பார்ப்போம். ஏனெனில் இவையெல்லாம் நமக்கு பிடித்தமானவை. எளிமையானவை. இது போன்ற முக்கியத்துவம் இல்லாத செயல்களில் நேரத்தை வீணாக்கிவிட்டு வேலைகள் தேங்கி விட்டனவே என்று பரபரப்போம் அல்லது நேரமே போதவில்லை என புலம்புவோம். ஆனால் நமது வேலைகளில் முக்கியத்துமான அலுவல்கள் சற்று கடினமானவையாக பிடிக்காதவையாக இருக்கும். இருப்பினும் அவைகளை முதலில் செய்யும் பழக்கத்தை கையாள வேண்டும். நேர நிர்வாகத்தில் ( Time Management ) இந்த முக்கியத்துவம் அறிந்து செயல்படுவதுதான் முதன்மையான அம்சமாகும்.

முன்னேறத் துடிப்பவர்கள் குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் அடைந்து விட வேண்டும் என்றே செயல்படுவார்கள். கடுமையாக உழைப்பார்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லையாயின். வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்றும் ஆராய்வார்கள். குறுக்கு வழிதான் விரைந்த முன்னேற்றத்திற்கு வழி என்று பலருடைய முன்னேற்றத்தைத் தவறாகக் கணக்கிட்டு முடிவுக்கு வருவார்கள். அவ்வாறு எடுக்கும் முடிவு சரியானது அல்ல என்பதையும் அம் முடிவு எதிர்காலத்தில் துன்பம் தருவதாக அமையும் என்பதையும் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1999

நம்பிக்கையும் நானும்
மரபின்மைந்தன் முத்தையா இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
அப்படியா?
ஆழ்மனச்சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மனசு விட்டு பேசுங்க
மத்திய சிறைச்சாலையில் மொட்டவிழும் தன்னம்பிக்கை
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்
ஞானப்பழம் உங்களுக்குத்தான்
ப்ளீஸ் சுவர் எழுப்ப வேண்டாமே