Home » Articles » வேண்டும் விடுதலை

 
வேண்டும் விடுதலை


விஜயராகவன்
Author:

நீலவானக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி கொள்ளுவேன்! – மணி
போலுமீன் களாகும் அந்தவர்ணப்
பூக்கள் அள்ளுவேன்! – அட
ஓடும்மேகக் கூட்டத் தொடரை
உதைத்து வீழ்த்துவேன்! – விண்
சூடும்தூய வெள்ளி நிலவவள்
சூட்டல் ஆக்குவேன்!
மலையின் முடிகள் ஒன்றோடொன்று
முட்டிச் சிரிப்பேன்! – உயர்
அலைகள் சிதறக் கடலின்வயிறு
கலங்கக் குதிப்பேன்! – ஒளிர்
ஏழுவண்ண வானவில்லில் சூரியனாம்
சிறுபந்து அடிப்பேன்! – நிலவாம்
யாழெடுத்துக் கானமழை மண்நனைக்க
இசைச்சிந்து படிப்பேன்!
ஆனால்….
என்னைப் பற்றித் தடுப்பன…….?
என்னிரு கைகள்!
என்னை எற்றி உதைப்பன…..?
என்னிரு கால்கள்!
என்னைச் சுற்றித் தளைத்தது…..?
என்சிறு இதயம்!
அடடா…….
விண்ணைச் சாடி எழுவதன் முன்னம்
என்னில் விடுதலை எனக்கு வேண்டும்!

– விஜயராகன் திருச்சி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment