Home » Articles » மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?

 
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?


admin
Author:

பல்துறை நிபுணர்கள் அலசல்!

இந்த மாதம் திரு.பி. வாஞ்சிநாதன்,
கம்பெனி செகட்டரி, எல்.ஜ. எக்யூப்மென்ட்ஸஃ

மருத்துவம் அல்லது தொழில் நுட்பத் துறையில் சேர இடம் கிடைக்காத காரணத்தினால் சோர்வுற வேண்டாம். இந்தத் துறைதான் உங்களுக்குப் புகழ் சேர்க்கும் என்பதில்லை. நீங்கள் சேரும் துறைக்கு நீங்களே கூட புகழை உண்டாக்கலாம்.

இதோ, உள்ளது அவற்றிலும் அரிய துறைகள். நீங்களே வணிகவியல் (பி.காம்) துறையில் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்தால் பகல் பொழுதில் கணிணி மற்றும் பொது அறிவுத்துறைகளில் உங்களை வளர்த்துக்கொள்ளலாம்.

மாலை கல்லூரி என்பதால் பகல் பொழுதில் ICWA or ACS ACA போன்ற துறைகளுக்குண்டான அடிப்படைத் தேர்வுகளை எழுதி உங்கள் தயார் செய்து கொள்ளலாம். அடிப்படைத் தேர்வுகளில் தேர்ச்சியுற்றபின் CA செய்வதனால் ARTILCLE SHIFS என்று சொல்லப்படும் TRANNING ல் சேரலாம். ஏதாவது ஒரு ஆடிட்டரிடம், இதனால் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். உதாரணமாக 5 ஆண்டுகள் கழித்து என்ஜினியராகவோ, அல்லது மருத்துவராகவோ ஒரு மாணவன் வரும் கால கட்டத்தில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். ஒரு CA வாகவோ அல்லது ACS ஆகவோ அல்லது ICWA முடித்தவராகவோ இருப்பீர்கள். முயற்சிக்கேற்ப கணணி தொழில் நுட்பமும் தெரிந்துகொள்ள ்வாய்ப்புண்டு.

கல்லூரியில் நீங்கள் செலவிடும் பகல் பொழுதில் இரண்டில் ஒரு பங்குதான் முழு முயற்சி இருக்கும். பிற நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை பொழுதுபோக்குதான். ஆனால் நீங்களோ அடிபட்ட புலி. அதாவது மருத்துவம் அல்லது இன்ஜினியரிங்கில் இடம் கிடைக்காமல் அடிபட்ட புலி. உங்கள் வேகம் அதிகம். அதை சரியான வழியில் செலவழித்தால் நீங்கள் உங்களுடன் படித்த நண்பர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்க வாய்ப்புண்டு. மேலும் CA, ACS, ICWA முதலிய துறைகளில் படிப்பதற்கான செலவு LKG படிப்பிற்கான செலவைவிடவும குறைவு. இட ஒதுக்கீடு பிரச்சனை இல்லை. நேர்முக தேர்வுமில்லை. ஒரே ஒரு நிர்பந்தம் நீங்கள் டிகிரியில் முதலிடம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அடிப்படத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும்தான் திற்குண்டான அடிப்படை.

சற்று கடின உழைப்பு. சிறிது புத்திசாலித்தனம். அதிக கவனம் உங்கள் மூலதனம்.

மேற்சொன்ன முறை சாத்தியமா? அப்படி யாராவது மருத்துவமோ என்ஜினியரிங்கோ, இடம் கிடைக்காமல் CA or ACS or ICWA தேர்வு பெற்றிருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு விடை நானே!

BE இடம் கிடைக்காத்தால் சரியான வழிகாட்டியின்றி பி.எஸ்.ஸி. இயற்பியல் படித்து தேர்ச்சுற்று, பின் நண்பர்களின் ஆலோசனைக்கிணங்க CA படித்து தேர்வுற்று தற்போது நல்ல நிலையில் உள்ள என்னையும் நீகள் உதாரணமாக்க் கொள்ளலாமே.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” முயன்றால் முடியாத்து ஒன்றுமில்லை. வானம் தொட்டு விடும் தூரம்தான்.

 

1 Comment

  1. ranjitha says:

    மிக்க நன்றி

Leave a Reply to ranjitha


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்