Home » Articles » கவலையை விடுங்கள்

 
கவலையை விடுங்கள்


admin
Author:

வாழ்க்கையில் “சோர்வு” என்பது பல காரணங்களினால் ஏற்படுகிறது. சில சமயங்களில் மனதில் தோன்றிடும் எண்ணங்களை எவரிடமும் வெளியிடாமல் மனத்துக்குள் வைத்துப் புழுங்கவதாலும் களைப்புத் தோன்றக்கூடும். எண்ணங்களை மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே களைப்பும் விடைபெற்றுச் சென்றுவிடுவதைப் பார்க்கலாம். துக்கமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலம், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு சுகம் கிடைக்கிறது.

கவலையைப் பிறரிடம்பகிர்ந்து கொள்ளும்போது அதன் பளு குறைகிறது. ஆறுதல் கிடைக்கிறது. மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்கிறபோது மகிழ்ச்சி மிகுதியாகிறது. அதன் விளைவாகப் புதிய இன்பத்தைத அனுபவிக்க முடிகிறது.

கவலைகளை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்ப்ப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. கவலைகளை நம்முடைய மனத்துக்குள்ளேயே போட்டு அழுத்தி வைக்க வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி நம்முடைய நரம்பு மண்டலத்தைப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடுககிது.

நம்முடைய கவலைகளைக் கேட்க, ஆறுதல் சொல்ல அதில் பங்குபெற மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே நம்முடைய மனத்தை லேசாக்கி விடுதலை உணர்வைப் பெற செய்து விடுகிறது.

நம்முடைய கவலைகளைக் கேட்க, ஆறுதல் சொல்ல அதில் பங்குபெற மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே நம்முடைய மனத்தை லேசாக்கி விடுதலை உணர்வப்பெற செய்து விடுகிறது.

மற்றவர்கள் நமக்குச் சொல்லும் ஆறுதல்கள் வெறும் சொற்கள்தானே என்று அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் இதமான சொற்களுக்கு மனப்புண்ணை ஆற்றிடும் மகத்தான வளமை உண்டு.

கவலைகளாய் மனச்சோர்வும், மனச்சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம். எதற்கு எது காரணம் என்கிற ஆராய்ச்சியைவிட்ட இரண்டலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாகசமாளிப்பது என்பதே முக்கியம்.

பொழுது போக்கிற்கென்று நாம் சில விசயங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். உலாவச் செல்லுதல், புத்தகம் படித்தல், சங்கீதம் கேட்பது, ரேடியோ கேட்பது, விருப்பமான விளையாட்டை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, உல்லாசப் பயணம் செய்வது இப்படிப் பொழுது போக்கிற்காக எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நாட்டத்தைச் செலுத்துவதன் மூலம், களைப்பு உடலைப்பற்றியதாக இருந்தாலும், மனத்தைப்பற்றியதாக இருந்தாலும் போக்கிக் கொள்ள முடியும்.

மேல் நாட்டுக்காரர்கள் ஒருநல்ல பழக்கத்தை விடாப்பிடியாக கடைபிடித்து வருகிறார்கள். வாரத்தில் ஆறு நாட்கள் கடுமையாக உழைத்தாலும், ஏழாவத நாளைப் பொழுது போக்குக்கு என்று கட்டாயம் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். அன்றைக்கு அவர்கள், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். பிக்னிக் செல்கிறார்கள். கண் காட்சிக்குச் செல்லுகிறார்கள். கடைத் தெருவிற்கு போகிறார்கள். பொழுது போக்கிற்காக மனதுக்குப் பிடித்த எதையாவது செய்கிறார்கள். அதற்காகும் செலவ குடும்ப பட்ஜெட்டின் ஒரு நியாயமான பகுதியாக கருதுகிறார்கள். அந்த ஓய்வின் மதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்.

வார இறுதியின் ஓய்விற்குப் பிறகு, அடுத்த வாரம் வேலைகளை அவர்களால் உல்லாசமாக செய்ய முடிகிறது. மனச்சோர்வின்றி உடல் களைப்பின்றி செய்ய முடிகின்றது. சக்தி குறைந்து போன பாட்டரிக்கு புது சக்தி ஏற்றுவதுபோல, பொழுது போக்கின் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புதிய தெம்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்